எழுத்துரு அளவு Larger Font Smaller Font
திருவாரூர், ஜூலை  9 6.7.2017 அன்று திராவிடர் கழக மாவட்ட அலுவலகத்தில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்ட மைப்பு சார்பில் ‘நீட்’ தேர்வி லிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி மாவட்ட தலை நகர் திருவாரூரில் ஜூலை 12ஆம் தேதி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்துவது தொடர்பாக ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மண்டல தலைவர் இரா.கோபால் தலை மை வகித்தார். திமுக நகர செய லாளர் வாரை பிரகாஷ், மாவட்ட தலைவர் சவு.சுரேஷ், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் வடிவழகன், விவசாய தொழி லாளர் அணி மாவட்ட துணைச் செயலாளர் எம்.நாகராஜன் சிபிஅய், விடுதலை சிறுத்தை மாவட்ட செய்தி தொடர்பாளர் தங்க.தமிழ்செல்வன், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீ.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சிபிஅய் நகர துணை செயலாளர் எஸ்.செல்வம், மாவட்ட செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் அருண்காந்தி, மாவட்ட இணைச் செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரெத்தினசாமி, மாவட்ட ப.க. செயலாளர் இரா.சிவக்குமார், நகர தலைவர் சு.மனோகரன், திரு வாதிரை மங்கலம் இராஜேந்திரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோர் களையும் பங்கேற்க செய்வது எனவும், குடியரசு தலைவருக்கு மாணவர்கள் மூலம் மின் அஞ்சல், அஞ்சல் அட்டை மூலம் ‘நீட்’ விலக்கு கோரி மாணவர் களை அதிக அளவில் கடிதம் அனுப்பச் செய்வதென தீர்மானிக் கப்பட்டது.