எழுத்துரு அளவு Larger Font Smaller Fontநாகை, ஜூலை 9  7.7.2017 அன்று மாலை 5.30 மணியளவில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் நாகப்பட்டினம் மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் திராவிடர் கழக மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப் போ லியன் தலைமையில் நடைபெற் றது.

இக்கூட்டம் நாகை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என். கவுதமன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் ஏ.வி.முரு கையன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் நவுசாத், மனிதநேய மக்கள் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.இபுராஹீம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் வி.இராம லிங்கம், த.மு.மு.க. கட்சியின் மாவட்ட செயலாளர் ஜபுரூல்லா, விடுதலை சிறுத்தை கட்சியின் பேரறிவாளன், எஸ்.டி.பி.அய்யின் நூருல்அமின், திமுக ஒன்றிய செயலாளர் வடவூர் இராஜேந் திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக திரா விடர் கழக மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ்குப்தா அனைவ ரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

வருகின்ற 12.7.2017 அன்று காலை 10 மணியளவில் ஜன நாயக உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக நீட் தேர்வை எதிர்த்தும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட இரு மசோதாகளுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை மாநில, மத்திய அரசுகள் பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டம நடத்துவது எனவும் அதற்கு அனைத்துக் கட்சியின் பொறுப் பாளர்களையும்,  பெருந்திரளான மாணவர்களையும், தோழர்களை யும், பொதுமக்களையும் அழைத்து வந்து சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டது.