எழுத்துரு அளவு Larger Font Smaller Fontசென்னை, ஜூலை 9- நீட் தேர்விலிருந்துவிலக்கு அளிக்கக் கோரி மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி மாவட்டத் தலை நகரங்களில் ஜனநாயக உரி மைப்பாதுகாப்பு கூட்டமைப் பின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாணவர் அணியினர் பெருந் திரளாக பங்கேற்பீர் கழக மாணவர் அணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. எம்.பி. எழிலரசன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

அவரது வேண்டுகோள் வருமாறு: -தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பில்  இருந்தபோது 2007ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு இரத்து செய்யப்பட்டது. பிளஸ்2 மதிப்பெண்கள் அடிப் படையில் மருத்துவக் கல்லூரி யில் மாணவர்கள் சேர்க்கப்பட் டனர். நுழைவுத் தேர்வின்றி பிளஸ் 2 மதிப்பெண் அடிப் படையில் அமைந்ததால் பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற் படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கும், காலம் காலமாக வாய்ப்பு மறுக்கப் பட்ட மாணவர்களுக்கும் நல் வாய்ப்பாக அமைந்தது. இந்த வாய்ப்பினைப் பறிக்கும் வகை யில் பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்டதுதான் நீட் நுழை வுத்தேர்வு.

இதுகுறித்து கழகத்தின் செயல் தலைவர் - தமிழக எதிர்க் கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எச்ச ரித்தபடியே தற்போது வெளி வந்துள்ள நுழைவுத் தேர்வு முடிவுகள் தமிழகத்தில் உள்ள மாணவர்களின் எதிர்காலத் தையே பாழடித்து விட்டது.நடந்து முடிந்த நீட்நுழைவுத் தேர்வில் தமிழகத்தில் 38.83 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந் துள்ளார்கள். இந்திய அளவில் அதிக மதிப் பெண் பெற்ற முதல் 25 பேர்க ளில் தமிழகத்தில் ஒருவர்கூட இல்லைஎன்பதும், இத்தேர் வால் தமிழகத்தில் உள்ள சமூக நீதி பாதிக்கப்படும் என்று தள பதி அவர்கள் எச்சரிக்கை செய் ததும் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, நடத்தப்பட்ட நீட் தேர்வைஒட்டு மொத்தமாக ரத்துசெய்து விட்டு, பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்து வக் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க வேண்டும்என்று கோரி யும், தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்ட நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதாவுக்குக் குடிய ரசுத் தலைவர் ஒப்புதலை மத் திய, மாநில அரசுகள்பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தியும், தி.மு.க. திராவிடர் கழகம் உள் ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்த ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப் பின் சார்பில் ஜூலை 12ஆம் தேதி அன்று மாவட்டத் தலை நகரங்களில் நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்டத்திற்குட் பட்ட மாணவர் அணி அமைப் பாளர்- துணை அமைப்பாளர்கள்   கூட்டமைப்பினருடன் கலந்து பேசி, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி அமைப்பாளர் -துணை அமைப்பாளர்கள், மாணவர் கள், பெற்றோர்கள் ஆகியோரை பெருந்திரளாக திரட்டி ஜன நாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு நடத்திடும் இப் போராட்டத்தை சிறப்பாக நடத்திடவேண்டுமென கேட் டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தி.மு. கழக மாணவர் அணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. எம்.பி.எழிலரசன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.