எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலூர் ஆக.7- நவம்பர் புரட்சியின் நூற்றாண்டுவிழாப் பொது கூட்டம் வேலூரில் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ஜிஎஸ்டி அமல்படுத்தினால் சேவை வரி, மதிப்பீட்டு வரி, கலால் வரி இருக்காது என்றும் விலைகள் குறையும் என்றும் இதன் மூலம் புதிய இந்தியா உருவாகும், என பிரதமர் மோடி கூறியது வெறும் வார்த்தை ஜாலம் என்றார்.

மத்திய-, மாநில அரசுகள் விதித்த ஜிஎஸ்டி வரியால் சிவ காசியில் பட்டாசு தொழிலே அழியும் நிலைக்கு தள்ளப்பட் டுள்ளது. கோவில்பட்டி தீப் பெட்டித் தொழில் உலகப் புகழ் பெற்றது. இன்றைக்கு அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். அதேபோல் தான் பீடித் தொழிலும் அழியும் விளிம்பில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், மாவு அரைக்கும் எந்திரம் தயாரிக்கும் தொழிலுக்கு புகழ் பெற்றது. மாவு எந்திரத்துக்கு ஜிஎஸ்டி வரி4 விழுக்காட்டிலிருந்து, 28 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள் ளது. இதனால் 150 ரூபாயிலிருந்து 850 ரூபாய் அதிகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரம் அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் நகரமாகும். மத்திய- மாநில அரசுகளுக்கு அந்நிய செலாவணி மூலம் அதிகம் வருவாய் கிடைக்கும் நகரமும் கூட. ஆனால், அங்கு தயாரிக்கப்படும் தையலாடை, உற்பத்தியாகும் டி சர்ட், பனி யன் உள்ளிட்ட தொழிலை அழிக்கும் நிலைக்கு ஜிஎஸ்டி கொண்டு வந்துள்ளது.

நடை பயிற்சி செய்யும் மாற்றுத்திறனாளி பயன்படுத் தும் வாக்கிங் ஸ்டிக் மீது வரி போட்டதால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களை கண்ணீர் வடிக்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ள பிரதமர் மோடிக்கும், முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமிக் கும் மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் என்றும் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த பின்னர் ஜி.ராமகிருஷ்ணன்,  காட்பாடிவெடிமருந்து நிறுவனம், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி பரோல் கோரிய மனு மீது நீதிமன்றம் சட்டப்படி முடிவெடுத்து மனி தாபிமான முறையில் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner