எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 8 ‘நீட்’ தேர்வை எதிர்த்து ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்ட மைப்பு சார்பில் ஜூலை 12ஆம் நாள் மாவட்ட தலை நகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என மாநிலச் செயலாளர் இரா. முத்துரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

மத்திய அரசின் நீட் தேர்வி லிருந்து தமிழ்நாட்டிற்கு விதி விலக்கு அளிக்க கோரும், இரு மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்பு தலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு மாதங்கள் பல கடந்துவிட்டன. இது வரையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனை கண்டித்தும், விதி விலக்கு கோரும் இரு மசோ தாக்களுக்கும் ஒப்புதல் அளித் திட வலியுறுத்தியும், வரும் ஜூலை 12ஆம் நாள் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்ட மைப்பு சார்பில் மாவட்ட தலை நகர்களில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும். கட்சி தோழர்கள், மாணவர்கள், இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்.