எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.14 ‘முரசொலி’ பவள விழாவையொட்டி ‘முரசொலி’ வளாகத்தில் அமைக்கப்பட்ட காட்சி அரங்க திறப்பு விழா மிகவும் நேர்த்தி யாக உருவாக்கப்பட காரணமாக இருந் தவர்களுக்கும், பவள விழா மலரை சிறப்பாகத் தயாரித்தவர்களுக்கும், கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பெருமக்களுக்கும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:

பவள விழா மலரை அரிய வர லாற்று ஆவணமாக வடிவமைக்க அல் லும் பகலும் அயராது பாடுபட்ட திராவிட இயக்க ஆய்வாளர் அண்ணன் திரு. க.திருநாவுக்கரசு அவர்களுக்கும், அவருக்கு ஒத்துழைப்பாக இருந்த திரு. முத்து வாவாசி, திரு. எஸ்.ராமு, அரசு ஆர்ட்ஸ் திரு. கோபி ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முரசொலி பவள விழாவின் முதல் நிகழ்வாக, ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று, காட்சி அரங்கத் திறப்புவிழா நடை பெற்றது. தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யா திரு. கி.வீரமணி அவர்கள் தலைமை யில், இந்திய பத்திரிகையுலகில் தனக்கென தனி அடையாளத்துடன் விளங்கும் ‘இந்து’ குழுமத்தின் தலை வர் திரு. என்.ராம் அவர்கள் காட்சி அரங்கத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.

முரசொலி வளாகத்தில் பழைய முரசொலி அலுவலகங்களின் முகப் புடன் அமைந்திருந்த காட்சி அரங்கத் தின் உள்ளும் புறமும் காட்சிப்படுத்தப் பட்டிருந்த வரலாற்று நிகழ்வுகளைக் கண்டு எல்லோருமே அதிசயித்து விட்டனர்.

தலைவர் கலைஞர் அவர்கள் 'சேரன்' என்ற புனைப்பெயருடன் வெளியிட்ட 1942ஆம் ஆண்டின் முரசொலி இதழில் தொடங்கி, இன்றைய முரசொலி வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் வளர்ச்சியை விளக்கும் வகையில் பல புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

அன்றைய அச்சு இயந்திரம், எழுத்து கோர்க்கும் மேசை இவற்றைப் பார்த்து ஆசிரியர் அய்யா திரு. கி.வீரமணி அவர்களும், 'இந்து' திரு. என்.ராம் அவர்களும் மகிழ்ந்து தங்கள் பத்திரிகை அனுபவத்தின் பழைய இனிய நினைவு களில் மூழ்கினர்.

தலைவர் கலைஞர் அவர்களின் முரசொலி அலுவலக அறை அப்படியே வடிவமைக்கப்பட்டிருந்ததுடன், தலை வர் கலைஞர் அவர்கள் உட்கார்ந்தி ருப்பது போன்ற மெழுகு சிலையின் கலைநயம் கண்டு அனைவரும் உரு கினர். நெருக்கடி நிலைக்கால இடர்ப் பாடுகள், சட்டமன்றத்தில் முரசொலி மீதான உரிமை மீறலுக்காக அமைக்கப் பட்ட தனிக்கூண்டு உள்ளிட்ட அனைத் தும் காட்சி அரங்கத்தில் கண்முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த காட்சி அரங்கத் திறப்பிற்கு தலைமையேற்ற ஆசிரியர் அய்யா திரு. கி.வீரமணி அவர் களுக்கும், திறந்து வைத்த 'இந்து' திரு. என்.ராம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு மாத காலத்திற்கு இந்தக் காட்சி அரங்கத்தை கழகத்தினரும், பொதுமக்களும் காண்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் அய்யா திரு. கி.வீரமணி அவர்கள் வேண்டு கோள் விடுத்ததுபோல, இதனை நிரந்தரக் காட்சி அரங்கமாக மாற்றும் வாய்ப்பும் ஆலோசிக்கப்படுகிறது.

கடந்த காலத்தின் வரலாற்றை நிகழ்காலத்தில் கண்முன் நிகழ்த்தும் வகையில், இதனை வடிவமைப்பதில் முழு ஈடுபாட்டுடன் இரவு பகல் பாராது பணியாற்றிய கலை இலக்கியப் பகுத்தறிவு அணிச் செயலாளரும், காட்சி அரங்க ஒருங்கிணைப்பாளருமான திரு. உமாபதி அவர்கள், அரங்க வடிவமைப்பாளர் திரு. சிவா அவர்கள், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கார்த்திகேயன் அவர்கள், கலை இயக் குநர் திரு. செல்வம் அவர்கள் உள்ளிட்ட தோள் கொடுத்து உதவியவர்களுக்கும், விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்த சென்னை மேற்கு மாவட்ட செயலாள ரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஜெ.அன்பழகன் அவர்களுக்கும் மன மார்ந்த நன்றியை வெளிப்படுத்துகிறேன்.

இவ்வாறு தளபதி மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner