எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவில்பட்டி, ஆக.16 நீட் தேர்வி லிருந்து தமிழகத்துக்கு முழுமையான விலக்கு அளிக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை 22 ஆண்டுகளுக்கு முன்பே நானும், இயற்கை விஞ்ஞானி நம்மாழ் வாரும் எதிர்த்தோம். இந்தத் திட் டத்தால் அதனைச் சுற்றியுள்ள 6 மாவட்டங்கள் அழிந்து விடும்.

இந்த திட்டத்தை எதிர்த்துப் போராடிய திருமுருகன் காந்தி, பேராசிரியர் ஜெயராமன், மாணவி வளர்மதி உள்ளிட்டவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இது ஜனநாயக ஆட்சியா? குண்டர் ஆட்சியா?. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கடைசி வரையிலும் போராடுவேன். இதற்காக நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடுவேன்.

கிராமப்புற, நடுத்தர மாண வர்கள் நீட் தேர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமி ழகத்தில் நீட் தேர்வில் ஓராண் டுக்கு மட்டும் விலக்கு அளிக்கா மல், முழுமையான விலக்கு அளிக்க வேண்டும்.

ஒரே இந்தியா, ஒரே மொழி என்று மத்திய பா.ஜ.க. அரசு பிரசாரம் செய்கிறது. இது தொடர்ந்தால் 100- ஆவது சுதந்திர தின விழா கொண்டாடுவதற்குள் இந் தியா பிளவுபட்டுவிடும்.

கேரள மாநிலத்தில் தமிழகத் தைச் சேர்ந்த கட்டட தொழி லாளிக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்து உள்ளார். அந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு இதுவரையிலும் அரசு எந்த உதவியும் செய்ய வில்லை. கட்டட தொழிலாளியின் குடும்பத்துக்கு உதவ அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner