எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.22 திராவிட முன் னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க் கட்சித் தலைவருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22.-08.-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

செய்தியாளர்: அதிமுக அரசு மீது நம்பிக்கை இல்லாததால், தங்கள் ஆதரவை திரும்பப் பெறுவதாக அதிமுகவை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் மனு அளித்து இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

மு.க.ஸ்டாலின்: அவர்கள் மட்டு மல்ல, அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றுள்ள 3 கட்சிகளைச் சேர்ந்த தமீமுன் அன்சாரி, தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோரும் தங்கள் ஆதரவைப் திரும்பப் பெறு கிறோம் என்று எழுதிக் கொடுத்திருப் பதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஆகவே, 22 பேர் மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாகக் கடிதம் கொடுத் திருப்பதாக கேள்விப்படுகிறேன். ஏற் கனவே, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்பு 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் மாண்புமிகு ஆளுநரிடம் கடிதம் கொடுத்தபோது, உடனடியாக தேதியை முடிவுசெய்து, நம்பிக்கைக் கோரும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் அவர்கள் உத்தரவிட்டார்.

அதேபோல, இப்போது 22 பேர் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும், தங்களுடைய ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வ தாக கடிதம் கொடுத்திருக்கிறார்கள். எனவே, உடனடியாக நம்பிக்கைக் கோரும் வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்திரவிட வேண்டும். அதற்குரிய வகையில் உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். அதனை அவர் செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

தி.மு.க. முயற்சிக்குமா?

செய்தியாளர்: இப்போதைய நிலை யில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கும், இந்த ஆட் சியை கலைப்பதற்கும் திமுக முயற்சி மேற்கொள்ளுமா?

மு.க.ஸ்டாலின்: ஊழலுக்கு எதிராகப் போர் தொடுத்திருக்கிறேன், என்று இந்திய நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் சுதந்திர தினத்தன்று வீர உரையாற்றி இருக்கிறார். ஆனால், இன்றைக்கு தமிழகத்தில் ஊழலின் உறைவிடமாக இருக்கக்கூடிய, ஊழ லில் திளைக்கும் இரு அணிகளை ஒன்றாக்கி, அந்த ஊழல் அணிகளை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்துவதற்கு அவர் இன்றைக்குத் துணை நின்றிருக் கிறார். அதற்கு சாட்சியாக அவரே வாழ்த்து சொல்லியும் இருக் கிறார். இந்தநிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தினைப் பொறுத்த வரையில், இந்த ஆட்சிக்கு தந்து கொண்டிருக்கும் ஆதரவை 22 பேர் திரும்பப் பெற்றுக் கொண்டு இருப்ப தாக மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் கடிதம் கொடுத் துள்ள நிலையில், நம்பிக்கைக் கோரும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ஆளுநர் அவர்கள் அதற்கான முயற்சி யில் ஈடுபட வேண்டும், அப்படியொரு நிலை வருமென்று சொன்னால், தமிழ் நாட்டின் உரிமைகளை எல்லாம் இன்றைக்கு டெல்லியின் காலடியில் கொண்டு போய் வைத்திருக்கும் இந்த ஆட்சியை அகற்றுவதற்கு ஏற்றவகை யில், வாக்கெடுப்பு நடத்தும் சூழ்நிலை வரும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆழ்ந்து பரிசீலித்து, நிச்சயமாக ஒரு நல்ல முடிவை, உரிய வகையில் எடுக்கும்.

செய்தியாளர்: அடுத்த 6 மாதங் களுக்கு சட்டபேரவையை கூட்டப் போவதில்லை, அப்படி கூட்டுவதற்கு 40 எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை அளிக்க வேண்டும் என்ற நிலையில், உங்கள் நிலைப்பாடு என்ன?

மு.க.ஸ்டாலின்: இன்றைக்கு 22 உறுப்பி னர்கள் ஆதரவை திரும்பப் பெற்றுள்ள நிலையில், ஆளுநர் அவர்கள் நியாய மாக நம்பிக்கை கோ ரும் வாக்கெடுப்பு நடத்த சட்டப் பேரவையை உடனே கூட்டுமாறு உத்திரவிட வேண்டும். அப்படி உத்தர விடவில்லை என்றால் நீங்கள் கேட் டுள்ள கேள்வியை திமுக நிச்சயம் பரிசீலிக்கும்.

இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.


கிரிமிலேயர்


பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு இடஒதுக்கீட்டில் திணிக் கப்பட்டிருக்கும் கிரீமிலேயருக்கான உச்சவரம்பு ஆண்டுக்கு ரூபாய் 6 லட்சத்திலிருந்து ரூபாய் 15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறார்.