எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.30  நீட் தமிழக மாநில தரவரிசைப் பட்டியலில் வெளி மாநில மாணவ, மாணவியர்கள் முறைகேடுகள் மூலம் பெற்ற இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில் உரிய நீதி விசாரணை தேவை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் உள்ள அரசு மருத் துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்து வப்படிப்பில் சேருவதற்கான மாநில தரவரிசைப்பட்டியலை தமிழக சுகா தாரத்துறை சமீபத்தில் வெளியிட்டது. தமிழக மாணவ, மாணவியர்கள் சேரு வதற்குரிய மருத்துவ இடங்களின் தரவரிசைப்பட்டியலில் கேரளா உள் ளிட்ட பிற மாநில மாணவ, மாண வியர்களின் பெயர்கள் இடம்பெற்றி ருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நீட் திணிப்பின் மூலம் ஏற்கெனவே மருத்துவக் கனவு தகர்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தமிழக மாணவச் செல்வங்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குரிய தரவரிசைப் பட்டியலில் கிட்டதட்ட 150 வெளி மாநில மாணவ/மாணவியர் பெயர்களும் தனியார் நிர்வாக ஒதுக் கீட்டு இடங்களுக்குரிய தரவரிசைப் பட்டியலில் கிட்டத்தட்ட 1000 மாணவ/மாணவியர்கள் பெயர்களும் இடம் பெற்றிருப்பது தனி மனித தவறு தலாலோ கணினி தொழிற்நுட்ப தவறுதலாலோ நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இதில், அரச நிர்வாகத்தினர் உட்பட சுகாதாரத்துறை அமைச்சர் வரையிலான தொடர்பு இருக்கவே வாய்ப்பு உள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு ஒரு கோடி வரை செல வாகும். தமிழக அரசு மருத்துவமனை களில் மிகக் குறைந்த செலவே ஆகும் என்ற நிலையில் போலி இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழகத் தரவரிசைப் பட்டியலில் பிற மாநில மாணாக்கர்கள் இடம்பெற்றிருப்பதைக் காணும் பொழுது, மிகப்பெரிய ஊழல் நடந்தி ருக்குமோ என்று எண்ணத் தோன்று கிறது.

நீட் தேர்வு ஏற்கனவே சமூகநீதி, மாநில உரிமைகள் என அனைத்தையும் குழித்தோண்டிப் புதைத்துக்கும் என்று நாம் போராடிக்கொண்டிருக்கும் நேரத் தில் நம் மாணாக்கர்கள் பாதிக்கப் படுவதோடு நம் மாநில நிர்வாகம் மற்றும் கல்வித்தரம் மிகக் கீழ்த்தரமாக செயல்பட இத்தகைய ஊழல்கள் வழி வகுக்கும் என்ற கவலையும் வருகிறது.

தரவரிசைப்பட்டியலில் இத்தகைய முறைக்கேடு சாத்தியம் என்றால் நீட் தேர்வு நடத்துவதிலும் முறைகேடுகள் சாத்தியம்தானோ என்ற சந்தேகிக்கத் தோன்றுகிறது.

போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து விண்ணபித்த 9 மாணவர் களை சுகாதாரத்துறை நிர்வாகம் காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்தது வெறும் கண்துடைப்பு நாடகமே! வெளிமாநிலத்தை சேர்ந்த 1000 மாணவ, மாணவியர்கள் தமிழகத் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறித்து முறையான நீதி விசாரணைத் தேவை.

அதுவரை தமிழக அரசுக்கல்லூரி களில் மருத்துவ கல்விக்கான கலந்து ரையாடலை நிறுத்தி வைக்க வேண் டும். இம்முறைகேடுகளால் தங்களுக் குரிய மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கப்பெறாமல் பாதிக்கப்பட்டு பெறும் மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ள தமிழக மாணவ, மாணவி யர்களுக்கு உரிய இழப்பீடை தமிழக சுகாதாரத்துறை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner