எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கம்யூனிஸ்ட் - விடுதலை சிறுத்தைகள்- மமக கட்சியினர் ஆளுநரிடம் மனு

சென்னை, ஆக. 31- தமிழக சட்டப் பேர வையை உடனடியாக கூட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. புத னன்று (ஆக.30) காலை 11மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்,தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது ஆளுநரிடம் அவர்கள் அளித்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

2016 இல் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 234 இடங்களில் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் 135 இடங்களை பெற்றன. இதைத் தொடர்ந்து அதிமுக ஆட்சி அமைத்தது. செல்வி ஜெயலலிதா அவர் களின் மறைவைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 233 ஆக குறைந்தது. பதவியில் உள்ள ஒரு உறுப் பினர் சட்டப் பேரவைக்கு வந்து வாக் களிக்கும் நிலையிலோ அல்லது அவை நடவடிக்கைகளில் பங்கேற்கும் நிலையிலோ இல்லை. எனவே சட்டப் பேரவை யின் உண்மையான பலம் என்பது தற் சமயம் 232 இடங்கள் என்பதாகவே இருக் கிறது. எனவே குறைந்தபட்சம் 117 இடங் கள் இருந்தால்தான் அது சரியான பெரும்பான்மையாக இருக்க முடியும்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக டிடிவி தினகரனின் ஆதரவாளர்களாக உள்ள 19 சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆளுநரிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளனர். மேலும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகைய பின்னணியில் ஆளும் கட்சி யானது தனது பெரும்பான்மையை இழந்து விட்டதாகவே தோன்றுகிறது. மறுபுறத்தில் ஒரு பிரிவு சட்ட மன்ற உறுப்பினர்கள் அருகில் உள்ள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இருத்தி வைக்கப்பட் டிருக்கிறார்கள். மற்றொரு புறத்தில் அதி முகவின் ஆளும் பிரிவானது, தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சட்டமன்ற உறுப் பினர்களை ஜனநாயக விரோதமான முறையில், இடைநீக்கம் செய்வதற்கான வழிகளில் இறங்கியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, சட்டமன்றத்தில், குட்கா ஊழல் குறித்து கேள்வி எழுப்பிய திமுகவின் சில உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவும் முயற்சித்து வருகிறது. மாநிலத்தில் மேற்கண்டவாறு நிலவுகிற இந்த சூழலானது, மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகளில் நிலை யற்ற தன்மையையும் உறுதியற்ற தன் மையையும் ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு விவகாரம், வறட்சி நிலைமை, காவிரி பிரச்சினை, மிக கடுமையான நிலையில் தொடர்கிற விவசாய நெருக்கடி, கிராமப்புற பொருளாதார நெருக்கடிகள், தொடர்ந்து சீரழிந்து வரும் சட்டம் - ஒழுங்கு நிலைமை போன்ற தமிழக மக்கள் எதிர்கொள்கிற மிகப்பெரும் பிரச்சினைகள் கவனிக்கப் படாமல் கிடக்கின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமானது செயலற்றுக் கிடக்கிறது. மாநிலத்தில் நிலவுகிற இத்தகைய அரசியல் உறுதியற்ற - நிலையற்ற தன்மையை முடிவுக்கு கொண்டு வரும் விதத்திலும் மாநிலத்தின் மக்கள் அன்றாடம் எதிர்கொள்கிற மேற் கண்ட பிரச்சனைகளுக்கு அரசு நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பொருத்த மான தேர்வுகளை உருவாக்கும் விதத்திலும் சட்டமன்றம் கட்டாயமாக உடனே கூட் டப்பட வேண்டும்; முதலமைச்சர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை கட்டாயம் நிரூபிக்க வேண்டும். அந்த அடிப்படையில் மாநில சட்டப் பேரவையை உடனே கூட் டுவதற்கும் முதலமைச்சர் தனது பெரும் பான்மையை நிரூபிப்பதற்கும் தாங்கள் ஆவன செய்திட வேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட் டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner