எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஆக.31  புதுச்சேரி வளர்ச்சிக்கு தடையாக ஒரு கூட்டமே செயல்படுகிறது என முதல்வர் நாராயணசாமி இன்று சாடி னார்.

புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பத் துறை, மாசுக்கட்டுப்பாட்டு குழுமம், புதுவை பல்கலைக்கழகம், தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் லாஸ்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் மய்யத்தில் நிலையான திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

இதில் முதல்வர் நாராயணசாமி பேசிய தாவது:

மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரி வளர்ச்சிக்காக நாங்கள் பலவகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததும், நேரில் சென்று பலமுறை வலியுறுத்தி வருகிறோம்.

குறிப்பாக வரும் 2018- ஆம் ஆண்டுக்குள் புதுவையை திறந்தவெளி கழிப்பிடமற்ற பகுதியாக மாற்றும் வகையில் தீவிர நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் கழிப்பிடம் இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்ட ரூ.20 ஆயிரம் மானியம் தரப்படுகிறது.

புதுவையில் மக்கும், மக்காத குப்பை கள் தொடர்பாக போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்கள் அதை கடை பிடிப்பதில்லை. மாதந்தோறும் குப்பைகள் ரூ.1.87 கோடி செலவில் அள்ளப்படுகின்றன. காரைக்காலில் மாத மாதத்துக்கு ரூ.55 லட்சம் செலவாகிறது. புதுவையின் சேகரிக் கப்படும் குப்பைகள் அனைத்தும் குரும் பாபேட்டில் உள்ள 15 ஏக்கர் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. அங்கு குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற் றுவது, வேறுவகையில் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் தங்கள் திட்ட வரைவை சமர்ப்பித்துள்ளன. இதற்கு அரசும் ரூ.16 கோடி ஒதுக்கி உள்ளது.
ஆனால் இதற்கு எதிராக சில சக்திகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தடை யாணை பெற்றுள்ளனர். இதனால் அத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இத்தடையை நீக்க மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

மாநில அரசை தண்டிக்க வேண்டும் என அரசின் அங்கமாக விளங்குபவரே கடிதம் எழுதுகிறார். அவ்வாறு தண்டித்தால் அவருக்கும் தண்டனை கிடைக்கும் என்பதை அறியாமல் கடிதம் எழுதியுள்ளார்.

அதே போல் சென்னை துறைமுகத்துடன் சரக்கு போக்குவரத்தை கையாள்வது தொடர்பாக புதுவை துறைமுகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப் பட்டது. துறைமுக வளர்ச்சித் திட்டத்தை தடுக்க சிலர் நீதிமன்றத்தில் தடையாணை பெற முயற்சித்து வருகின்றனர்.

இவ்வாறு புதுச்சேரி வளர்ச்சிக்கு தடையாக ஒரு கூட்டமே செயல்படுகிறது. அதனை முறியடித்து மக்களுக்கான திட் டங்களை செயல்படுத்துவோம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner