எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.2 மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்அனிதாவின் தற்கொலைக்கு, மத் திய அரசும், அதற் குத் துணை நின்று மாணவர்களை ஏமாற்றிய மாநில அரசுமே முழுப் பொறுப்பு. அனிதா மட்டுமல்ல, இன்னும் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள், கிராமப்புற மாண வர்கள் தங்களின் மருத்துவக் கனவு சீர ழிந்து போன சோகம் தாங்க முடியாமல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காத மாணவ - மாணவி யர்கள் யாரும் தயவுசெய்து மாணவி அனிதா போன்று விபரீத முடிவினை எடுத்திட வேண்டாமென்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் உரிமைகளைப் போராடி வென்றெடுப்போம்.

விசிக: தொல்.திருமாவளவன்நீட் தேர்வை தமி ழகத்திற்கு மட்டும் விலக்களிக்க வேண் டும் என்றில்லாமல் அகில இந்திய அள வில் ரத்து செய்ய வேண்டுமென குர லெழுப்ப வேண்டிய தேவையை அனிதாவின் சாவு நமக்கு உணர்த்துகிறது. தொடக்கத்திலிருந்தே அகில இந்திய அளவில் இதை ரத்து செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத் தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது. தற்போது பிறமாநிலங்களுக்கு முன்னோ டியாக இருக்கும் வகையில் தமிழகம் நீட் தேர்வை முழுமையாக இந்திய அளவில் ரத்து செய்ய வலியுறுத்தி  போராட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக் கிறது.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்  மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராட வேண்டுமே தவிர தம்மை தாமே மாய்த்துகொள்ளும் நட வடிக்கைகளில் ஒருபோதும் முயற்சித் தல் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோஇந்தக் கொடுந் துயருக்கு முழுக்க முழுக்க மத்திய அரசுதான் பொறுப் பேற்க வேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ளாமல் வாழ்க் கையில் எதிர்நீச்சல் போட வேண்டும் என்று மாணவ சமுதாயத்துக்கு கூற வேண்டிய கடமை இருந்தாலும், அனிதாவைப் போல் எத்தனை ஆயிரம் மாணவ, மாணவிகள் மனவேதனையில் இருப்பர் என எண்ணத் தோன்றுகிறது. மத்திய அரசு இந்தப் போக்கை மாற்றிக் கொண்டு, அந்தந்த மாநில அரசுகள்தான் கல்வித் துறை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்மாணவர்களைப் பற்றி கவலைப்படா மல் தங்களது பதவி யையும், அதிகாரத் தையும் தக்க வைத் துக் கொள்வதில் ஆட்சியாளர்கள் கவ னம் செலுத்தியதன் விளைவு, இன்று அனிதாவின் உயிர் பறிபோயுள்ளது. நீட் தேர்வை பற்றி மாணவர்களுக்கு தெளிவாக அறிவுறுத்தி இருந்தால், இதுபோன்று தற்கொலை ஏற்பட்டிருக்காது. எனவே, அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப் பேற்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்மத்திய அரசு கடைப்பிடித்துவரும் கொள்கைகளால் தமிழகத்திற்கு ஏற் பட்டுள்ள பாதகங் களின் மற்றுமொரு கோரமான வெளிப் பாடே, அனிதாவின் மரணம். அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளின் போக்கே காரணம். இதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்அரியலூர் மாணவி அனிதா தற்கொலை சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக வும், சமூக நீதிக்காக மாணவ சமுதாயம் போராட முன்வர வேண்டும் என்றும், அவரது மரணத்திற்கு மத்திய அர சும், மாநில அரசுமே முழுக் காரணம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - சுப.வீரபாண்டியன்    அனிதாவின் தற்கொலைக்குக் காரணமான, நீட் தேர்வை எதிர்த்து   05.09.17 செவ்வாய் காலை 11 மணிக்கு, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் பேரவையின் பொதுச் செய லாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். சமூக நீதி காக்க அனைவரும் அணி திரள்வோம்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாநீட் தேர்வுக்கு எதி ராக உச்சநீதி மன்றம் வரை சென்று பேரா டிய அனிதா, விபரீத முடிவை எடுத்து தனது வாழ்வை முடித் துக் கொண் டுள்ளது வேதனைக் குரியது.  பிரச்சினைகளுக்கு மரணம் முடிவாகாது என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும். இதுபோன்ற செயலில் வேறு யாரும் ஈடுபடக்கூடாது என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கெள்கிறேன்.
சமூக நீதியையும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களையும் பாதிக் கும் நீட் தேர்வுக்கு விலக்குபெற திரா ணியற்ற எடப்பாடி தலைமையிலான மாநில அரசும், விலக்கு அளிப்பேம் என்று ஏமாற்றிவந்த மத்திய அரசும் இந்த தற்கொலைக்கு பெறுப்பேற்க வேண்டும். இந்த சோக சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டுமென மனித நேய மக்கள் கட்சி கோருகின்றது.

தெகாலான் பாகவிதற்கொலை முடிவு என்பது ஏற் றுக் கொள்ள முடி யாத, ஆரோக்கிய மான முடிவல்ல என் றாலும், மாணவி அனிதாவின் தற் கொலைக்கான காரணிகளை ஒரு போதும் மறுத்துவிட முடியாது. அரசு மற்றும் நீதித்துறைக்கு அழுத்தம் தர வல்லது மக்கள் புரட்சி என்பதை கருத்தில்கொண்டு, இதுபோன்ற தற் கொலை எண்ணங்களை தவிர்த்துவிட்டு, சமூக நீதிக்கொள்கைக்கெதிராக பேசு வோரை புறந்தள்ளிவிட்டு, ஜனநாயக வழியிலான ஒரு பெரும் போராட் டத்திற்கு மாணவர்களும், மக்களும் தங்களை தயார் செய்துகொள்ள முன் வரவேண்டும் என எஸ்.டி.பி.அய். கட் சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜி.ஆர்.ரவிந்திரநாத்


நீட்' தேர்விலி ருந்து நிரந்த விலக் குப் பெறுவதே, இந் தத் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதாவுக்கு நாம் செலுத்தும் உண்மை யான மரியாதையாக இருக்கும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர் பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கை:
நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காத தால் அனிதா தற்கொலை செய்து கொண் டுள்ளார். இதற்கு மத்திய, மாநில அரசு களே பொறுப்பேற்க வேண்டும். அனி தாவின் குடும்பத்துக்கு உரிய இழப் பீட்டை அரசுகள் வழங்க வேண்டும். நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகம் நிரந்தர விலக்குப் பெறுவதும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத் துவ இடங்களை, தமிழகத்தைச் சேர்ந்த வர்களுக்கு மட்டுமே வழங்கிடவும் உரிய சட்டத்தைக் கொண்டு வருவதுமே அனிதாவுக்கு நாம் செலுத்தும் உண்மை யான மரியாதையாக இருக்கும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner