எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்யா, அண்ணா கொள்கைகளை இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்து செயல்படுவோம்

மதவாதத்தை நாட்டிலிருந்து விரட்டுவோம்!

திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கம்

ஈரோடு, செப். 3- தந்தை பெரியார், அறி ஞர் அண்ணா வழியில் தி.க.வும் திமுக வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இணைந்து நாட்டை அச்சுறுத்தும் மதவாதத்தை விரட்டுவோம் என்றார் திமுக செயல் தலைவர் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் 31.8.-2017 அன்று ஈரோட்டில், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்து ஆற்றிய உரை விவரம் வருமாறு:

தந்தை பெரியார் அவர்கள் பிறந்த இந்த மண்ணில், தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலையையும், தந்தை பெரியார் அவர்களால் உரு வாக்கித் தரப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையையும் இன்று திறந்து வைத்து, உங்களை எல் லாம் சந்தித்து சில கருத்துகளை எடுத் துச் சொல்லும் சிறப்பானதொரு வாய்ப்பு எங்களுக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. இந்தச் சிலை புதுப்பிக்கப்பட்டு அமைக் கப்பட்டிருக்கிறது என்றால், நமது ஆசிரியர் அவர்கள் சொன்னதுபோல, 17-.9-.1971இல் தந்தை பெரியார் அவர் களின் சிலையும், 20-.2.-1971இல் பேரறி ஞர் அண்ணா அவர்களின் சிலையும், தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே, இந்த இடத்துக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கின்றது. சாதாரண வரலாறு அல்ல, திராவிட இயக்கத்தோடு பின் னிப் பிணைந்த வரலாறு.

றிமீணீக்ஷீறீ's றிணீக்ஷீளீ என்ற பெயரில் 1.9.1939இல், அன்றைய பொதுப் பணித் துறை அமைச்சர் பி.டி.ராஜன் அவர் களால் இந்தப் பூங்கா தொடங்கப்பட்டது. அதன் பிறகு, நீதிக்கட்சியின் தலைவர் களில் ஒருவரான சர் பி.டி.பன்னீர் செல்வம் அவர்களின் பெயரில் அந்தப் பூங்கா செயல்பட்டுக் கொண்டிருக்கின் றது. தந்தை பெரியார் அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்ட நேரத்தில், அந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்களும் கலந்து கொண்டு, நிகழ்ச் சிக்கு முன்னிலை வகித்திருக்கிறார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலை மையில் நடந்த அந்த நிகழ்ச்சியில், தலைவர் கலைஞர் அவர்களால் சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, இன்றைக்கு அந்த இரு தலைவர்களின் சிலைகள் புதுப்பிக்கப் பட்டு திறந்து வைக்கப்பட்டு இருக் கின்றன என்றால், இந்த சிலை இங்கு அமைக்கப்பட்டு இருக்கின்ற காரணத் தால் இந்த சாலைக்கு, குறிப்பாக இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு 29 அடி கூடுதலாக இட வசதி உருவாக்கப்பட்டு நன்மை கிடைத்திருக்கிறது. இந்தப் பூங்கா அழகுபடுத்தப் பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தப் பகுதியில், வட்டாரத்தில் இருப்பவர்கள், அய்.ஏ. எஸ், அய்.பி.எஸ், அய்.எஃப்.எஸ்., அய். ஆர்.எஸ். உள்ளிட்ட உயர் படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், ஏறத்தாழ 3,000 புத்தகங்கள் கொண்டுள்ள ஒரு சிறப்பான நூலகம் இங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. அதை எண்ணிப் பார்க்கின்றபோது, நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகி றேன், பெருமைப்படுகிறேன். இந்தப் பணியில் ஈடுபட்ட நமது மாவட்ட கழக செயலாளர் அன்புக்குரிய முத்து சாமி அவர்களுக்கு எனது இதயபூர்வ மான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அய்யா, அண்ணா வழியில்...

இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக் கூடிய சூழல், ஒட்டுமொத்த இந்தியா வுக்கே ஏற்பட்டு இருக்கக்கூடிய கொடுமை, மதத்தின் பெயரால் மதவாதத்தை மக்க ளிடத்தில் புகுத்தி, அதன் மூலமாக நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை உரு வாக்கிக் கொண்டிருக்கும் இந்தச் சூழ் நிலையில், நாம் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து, ஒன்றிணைந்து நம்மு டைய கடமைகளை நிறைவேற்ற உறுதி யெடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியாக இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன். தந் தைப் பெரியார் அவர்கள் எந்தக் கொள் கையை நமக்கு வகுத்துக் கொடுத்திருக் கிறாரோ, பேரறிஞர் அண்ணா அவர்கள் எந்த லட்சியத்தை நமது உள்ளத்தில் பதிய வைத்திருக்கிறாரோ, அந்தக் கொள் கைகளின் வழிநின்று, லட்சியங்களைக் காப்பாற்ற, உடனடியாக நாம் ஒவ் வொருவரும் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ள நான் விரும்புகிறேன்.

தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகள் அரு கருகில் மிகவும் பொருத்தமாக அமைக் கப்பட்டு இருக்கின்றன என்று சொன் னால், தங்கள் கொள்கைகளை அவர்கள் என்றைக்கும் விட்டுக் கொடுத்ததில்லை. தந்தை பெரியார் அவர்கள் ஒரு கொள் கையை, லட்சியத்தை, கோட்பாட்டை எடுத்துச் சொல்கிறார் என்றால், அவர் எதைப் பற்றியும் கவலைப்பட மாட் டார். தனது மனதில் பட்டதை அப்ப டியே எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் தந்தை பெரியாருக்கு உண்டு என்பதை நாடு நன்றாக அறியும்.

இன்றைக்கும் தாய்க்கழகமாக உள்ள திராவிடர் கழகத்தோடு, சேய்க்கழகமாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக நாம் இணைந்து செயல்படுவோம் என்ற உறுதியை எடுக்கவே இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது. எனவே, உங்கள் அனைவரையும் இந்த விழா வில் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியை யும் நன்றியையும் தெரிவித்து விடைப் பெறுகிறேன். நன்றி, வணக்கம்.

இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner