எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாடுகளைவிட மனிதர்களைப் பாதுகாக்க வேண்டும்

தந்தைபெரியாரின் சமூகநீதி மண்ணில் நீட் தேர்வுக்கு

இடமில்லை போராட்டம் தொடரும்

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சென்னை, செப்.7 சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (6.9.2017) மாலை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணை வேந்தர் வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம் எழுதிய  Ôஎன் வரித்துறைப் பயணமும் வாழ்வும்Õ எனும் நூல் வெளி யீட்டு விழா நடைபெற்றது.

விழா முடிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித் தார். செய்தியாளர் சந்திப்பின்போது அவர் குறிப் பிட்டதாவது:

செய்தியாளர்: பசுப்பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரில் வன்கொடு மைகள் நடைபெறு கின்றன. அதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்று இப்போது உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதுபற்றி...?

தமிழர் தலைவர்: நீண்ட காலத்துக்கு முன்னா லேயே இதுபற்றி திராவிடர் கழகம் தெளிவான கருத்தைச் சொல்லியிருக்கிறது. அரசுகள் மாநில அரசு, மத்திய அரசு இரண்டிலுமே உள்துறை இருக்கிறது. காவல் துறை இருக்கிறது. அதைவிட்டு விட்டு தனியே மனிதரைப் பாதுகாப்பதற்கு வாய்ப் பில்லாமல், நேற்றுகூட, லங்கேஷ் என்று சொல்லக் கூடிய வரின் மகள் கவுரிலங்கேஷ் எப்படி படு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது கொடு மையான, அநாகரிகமான, வேதனைப் படக்கூடிய செய்தி வந்திருக்கக்கூடிய நேரத் தில், மனிதர்களே காப்பாற்றப்பட முடியாத அளவிற்கு, தங்கள் கருத்து களுக்காக கொல்லப்படக்கூடிய சூழ்நிலையிலே பசு மாட்டுக்குப் பாதுகாப்பு என்ற பெயராலே, தனி ஆர்மி, சேனைகளை உருவாக்கிக் கொண்டு காவிகள் குறிப்பாக இதைப் பயன்படுத்திக் கொள் வது என்பது தவறானது.

எந்த காரணத்தை முன்னிட்டும் சட்டத்தை பொதுமக்கள் கையிலே எடுத்துக்கொள்வதை யாரும் விரும்ப மாட்டார்கள். அது சமுதாயத் துக்குக் கேடு.

ஆகவே, அதில் பசுப்பாதுகாப்பு என்ற போர் வையிலே தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்களை அழிப்பதற்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இதை, உச்சநீதி மன்றம் தகுந்த நேரத்திலே கண்காணித்திருக்கிறது.

பல தீர்ப்புகளை மதிக்காததைப்போன்ற அரசு களைப்போன்ற போக்கு இல்லாமல், இதிலே உடனடியாக, இந்த பசுப்பாதுகாப்பு என்று யாரை வேண்டுமானாலும், நல்லவர் களையெல்லாம் குண்டர்கள் சட்டத்திலே போடும்போது, உண்மை யான குண்டர்களை யெல்லாம் வெளியே விட்டு வைத்திருப்பது மிகப்பெரிய கேடு. மாட்டுப்பாது காப்பு முக்கி யமல்ல, மனிதப்பாதுகாப்புதான் முக்கியம்.

செய்தியாளர்: அனிதாவின் மரணத்துக் காக நீதி கேட்டு மாணவர்கள் பெரும் போராட் டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந் நிலையில் மாணவர்கள் ஒரு கோரிக்கையை வைத்திருக் கிறார்கள். அதாவது மாணவி அனிதாவின் உருவச் சிலையை மெரினாவில் நிறுவவேண் டும். அப்படி நிறுவாத பட்சத்தில், தாங்களே ஒரு சிலையை செய்து நிறுவுவோம் நிச்சயமாக என்கிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்து...?

தமிழர் தலைவர்: அனிதாவுக்கு உருவச் சிலை நிறுவுவதெல்லாம் பிறகு இருக்கட்டும். அதைவிட முக்கியமானது எதற்காக, எதனால் அனிதா இந்த முடிவுக்கு விரட்டப்பட்டார்? அந்த நீட் தேர்வு தமிழ்நாட்டில் தலைகாட்டவே கூடாத அளவுக்கு அனிதாவின் சவம் எரிக்கப் பட்டதைப் போல, நீட் தேர்வும் தமிழ்நாட்டைப் பொருத்த வரையிலே சவப்பெட்டியிலே வைத்து கொண்டுபோய் எரிக்கப்பட வேண்டும். அதுதான் முக்கிய மானது. அதற்குத்தான் முன்னுரிமை. அதைநோக்கித்தான் நாம் போக வேண்டும். மற்றவை எல்லாம் பின் னால். சிலை எப்போது வேண்டு மானாலும் வைக்க லாம். அதற்காக தங்களின் நேரத்தை செல விடுவதை விட, ஒன்றுதிரண்ட மாணவர்கள் சக்தி முழுக்க எந்த வகையிலும் சிதையாமல், ஒரே நோக்கம் நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில், பெரியார் மண்ணில், சமூகநீதி மண்ணில் இட மில்லை என்ப தற்கு தொடர் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் பல ரூபத்திலே.

வடநாட்டிலே இருந்து மத்திய அமைச் சர்கள் இங்கே வரக்கூட முடியாத அளவுக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் மற்றவை போன்ற தொடர்ந்து நடக்கவேண்டிய செய்தி களை யோசிக்க வேண்டும்.

செய்தியாளர்: போராட்டம் ஒரு பக்கம் நடந் தாலும், நான்கு பேர் கூடினாலும்கூட, காவல்துறையினரால் அவர்கள் கைது செய் யப்படுகிறார்கள். மெரினாவிலும் தொடர்ந்து பாதுகாப்பு இந்த மாதிரி இருக்கின்ற சூழ்நிலை இருக்கிறதே?

தமிழர் தலைவர்: அறிவிக்கப்படாத நெருக் கடிகள் இங்கே வந்திருக்கின்றன என்பதை மக்க ளுக்கு அறிவித்துப் போராட வேண்டும். மனித உரிமைகளுக்காக போராட வேண்டும். நாளும் போராடுவதற்கு இந்த அரசு களிலே உண்டு. எனவேதான் வாழ்க்கையே போராட் டமாக இருக் கிறது. போராட்டமே வாழ்க்கையாக இருக்கிறது.

-இவ்வாறு செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner