எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 25 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசு நடத்தியதால் தமிழகத்தில் 50 சதவீத இடங்கள் நிரம்பவில்லை.

நாடுமுழுவதும் உயர் சிறப்பு மருத் துவப் படிப்புகளுக்கு (ஞினீ, விநீலீ) 1,215 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 192 இடங்கள் உள்ளன. தமிழ கத்தில் உள்ள இடங்கள் நுழைவுத் தேர் வின் மூலமாக தமிழக மாணவர்களைக் கொண்டே நிரப்பப்பட்டு வந்தன.

கடந்த ஆண்டு மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சேரலாம் என்ற நிலை உருவானது. ஆனாலும் அரசு டாக்டர் களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங் கப்பட்டது. இந்த ஆண்டு நாடு முழுவ தும் நடந்த உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட்-எஸ்எஸ் தேர்வை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதினர். தமி ழகத்தில் மட்டும் அரசு மருத்துவமனை களில் பணியாற்றும் டாக்டர்கள் 1,200 பேர் உட்பட சுமார் 3 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர். நாடுமுழுவதும் தேர்வு எழுதியவர்களில் 6,709 பேர் தகுதி பெற்றனர்.

தமிழகத்தில் நீட்-எஸ்எஸ் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் உயர் சிறப்பு படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்க இருந்தது. அப்போது, “மாநில அரசுகள் இந்த கலந்தாய்வை நடத்த முடியாது. மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தும்” என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால் தமிழகத் தில் எம்டி, எம்எஸ் படித்து முடித்த வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் அதிக அளவில் சேர்ந்து விடுவார்கள் என்பதால், மத்திய அர சின் இந்த அறிவிப்புக்கு டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

டாக்டர்களின் ஆலோசனைப்படி, “தமிழகத்தில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேருபவர்கள் படித்து முடித்ததும் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் அல்லது ரூ.2 கோடி செலுத்த வேண்டும்” என்று தமிழக அரசு நிபந் தனை விதித்தது. இதனைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக இணையதளத்தில் கலந்தாய்வு நடைபெற்றது.

இரண்டு கட்ட கலந்தாய்வின் முடி வில் நாடுமுழுவதும் சுமார் 30 சதவீத இடங்கள் நிரம்பவில்லை. தமிழகத்தில் மட்டும் 50 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக் குநர் (டிஎம்இ) டாக்டர் ஏ.எட்வின் ஜோவிடம் கேட்டபோது, “காலியாக உள்ள 50 விழுக்காடு இடங்களை கலந் தாய்வு மூலம் தமிழக அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கக் கோரி நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது” என்றார்.

இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு அரசு மருத் துவர்கள் சங்கத்தின் அமைப்புச் செய லாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு 192 இடங்கள் உள்ளன. ஆந்திரா, பீகார் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு ஓரி டம் கூட இல்லை. தமிழகத்தில் 50 சதவீத இடங்கள் காலியாக இருப்பதற்கு மத்திய அரசுதான் காரணம். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு நடத்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் டாக்டர்களுக்கு, அவர்கள் விருப்பப் பட்ட படிப்பு கிடைத்தது.

அதனால் தமிழகத்தில் 100 சதவீத இடங்களும் நிரம்பின. ஆனால் தற் போது நீட் தேர்வால் டாக்டர்களுக்கு விரும்பிய படிப்பு கிடைக்கவில்லை. நீட் தேர்வில் அரசு டாக்டர்கள் அதிக அளவில் தகுதி பெறவில்லை.

மேலும் வெளிமாநில மாணவர்கள் படித்துவிட்டு உடனடியாக செல்வதை தடுக்க 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் அல்லது ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை தமி ழக அரசு விதித்திருந்தது. இதனால்தான் தமிழகத்தில் 50 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.

- இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner