எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தேவை

மூன்றாண்டு பிஜேபி ஆட்சி சாதித்தது என்ன?

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை, அக். 2- தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் கடந்துவிட்டது. அவர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற் றப்பட்டு இருக்கின்றனவா எனக் கேட் டால், மத்திய ஆட்சியில் இருப்பவர் களால் பதில் சொல்ல முடியாது. ஆனால், ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கொடுத்து வரும் தண்டனைகளை, அவர்களை சார்ந்தவர்களே வெளிப் படையாக சொல்லத் தொடங்கியிருப் பதில் இருந்து, மத்திய ஆட்சியின் 3 ஆண்டு கால செயல்பாடுகள் சாதனையா, வேதனையா என்பது அம்பலமாகி யுள்ளது.

வளர்ச்சி என்ற முழக்கத்தை 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் முன்வைத்து, வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, 3 வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, நாட்டை வீழ்ச்சி என்ற பாதைக்கு கொண்டு போய்விட்டது.

அடித்தட்டு மக்களும், அன்றாடம் காய்ச்சிகளும் வங்கிக் கணக்கு ஆரம் பிக்க வேண்டும், அனைத்து செயல் பாடுகளுக்கும் ஆதார் எண் கட்டாய மாகக் கொடுக்க வேண்டும், ரொக்கமாக பணம் பரிவர்த்தனை செய்வதை கைவிட்டு, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு அமல்படுத்தியுள்ள கெடுபிடியான நடவடிக்கைகள் இன் றைக்கு அனைத்து தரப்பையும் பாதித்துவிட்டது.

ஜி.எஸ்.டி. பாதிப்பு

ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்ததால் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பாதிப்பு என்றும், வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் மிகப் பெரிய வீழ்ச்சிக்கு உள்ளாகும் என்றும் தி.மு.க. போன்று, அனைத்து எதிர்க் கட்சிகளுமே எச்சரித்தோம். ஆனால், தனிப் பெரும்பான்மை இருக்கிறது என்ற அதிகார போதையில் அமல் படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டம் நாட் டின் பொருளாதார வளர்ச்சியை, அய்க் கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த 8 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகக் குறைத்துவிட்டது.

சுயவிமர்சனம் என்று சொல்வது போல சொந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே பா.ஜ.க.வின் 3 ஆண்டு கால அரசின் பொருளாதார செயல்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தை சரிசெய்து மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற் குப் பதிலாக, கட்டுரை எழுதிய கட் சிக்காரரை விமர்சித்துக் கொண்டிருக் கிறார்கள்.

பா.ஜ.க. ஆட்சியை, அக்கட்சியை சார்ந்தவர்களே விமர்சித்து வருகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார நிலை என்ன என்பதை முழுமையாக அறியும்போது அதிர்ச்சியும், வேதனை யுமே மிஞ்சுகிறது. அதுதொடர்பாக மேலும் சில பொருளாதார வல்லுநர்கள் தரும் தகவல்களை உங்களின் கவனத் திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

2014ஆ-ம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சமயத்தில், உலக அளவிலான ஜி.டி.பி. உயர்ந்து கொண்டிருந்தது. இந்தியாவில் அது வேகமெடுத்தது. ரூபாய் நோட்டின் மதிப்பு நிலைப்படுத்தப்பட்டது. ஏற்று மதி என்பது இரட்டை இலக்கத்தில் இருந்தது. இதன் அடிப்படையில் நாட் டின் பொருளாதார வளர்ச்சி குறித்து பெருமிதப்பட்ட பிரதமர் மோடி, இந்திய மக்களுக்கு நல்லநாள் வந்து கொண்டிருக்கிறது என்றார். அந்த நாள் வந்ததா, வருமா என்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் பிரதமரால் உத்தரவாதம் தர முடியாத நிலைதான் ஏற்பட்டிருக்கிறது.

தனியார் முதலீடுகளும் தகர்ந்து விட்டன. இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றுமதி பலமடங்கு சரிந்துவிட்டது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படவில்லை என்பதுடன் இருந்த வேலைவாய்ப்புகளும் பறிபோகின்றன. வணிகம் சார்ந்த நம்பிக்கைகள் பொய்த் துப் போகின்றன. வங்கிகளில் உரிய கடனுதவிகள் வழங்கப்படவில்லை. கடனுதவி இல்லாத நிலையில் வணிகம் மேம்படாது. வணிகம் மேம்படாவிட் டால் வேலைவாய்ப்புகள் பெருகாது. மோடி அரசின் பண மதிப்பிழப்பு போன்ற அபாயகரமான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் பொரு ளாதாரம் உடைந்து நொறுங்குகிறது.

ஜி.டி.பி. என்கிற மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுகோலைக் காட்டி, ஆரம்பத்தில் பிரதமர் மோடியும், பா.ஜ.க. அரசும் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டிருந்தன. அந்தக் கணக்கும் கூட, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக செயற்கையாக அமைந்ததே தவிர, இந்த ஆட்சியின் சாதனை அல்ல. பெட்ரோலிய பொருட்கள் மீது பலவித வரிகளை விதித்து, வணிக வளர்ச்சியை சிதைத்து, பொருளாதாரத்தை சீரழித்தது தான் மோடி அரசின் வேதனை மிகுந்த சாதனை. கச்சா எண்ணெயின் விலை, சர்வதேச சந்தையில் மீண்டும் உயருமா னால், இந்திய பொருளாதாரம் என்னா குமோ என்ற அச்சம் அனைத்து தரப் பையும் சூழ்ந்துள்ளது.

வளர்ச்சியும் ஏற்படவில்லை, ஊழ லும் ஒழியவில்லை, கருப்பு பணமும் ஒழியவில்லை, ஊழல் புரிந்தோரை தண்டிக்கும் லோக்பாலும் இதுவரை அமைக்கப்படவில்லை, ஏழ்மையும் நீங்கவில்லை. அதற்கெல்லாம் மாறாக, மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியில் ஏழை எளியவர்களின் நிம்மதி பறிபோயிருக்கிறது. சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியும் காணவில்லை.

ஒவ்வொருவரின் வங்கிக் கணக் கிற்கும் 15 லட்சம் ரூபாயும் வரவில்லை. வளர்ச்சி என்று கூறிவிட்டு தங்களின் காவிக் கொள்கையைப் புகுத்தி, வேற்று மையில் ஒற்றுமை காணும் இந்தியா வில், மதத்தின் பெயரால் மாட்டிறைச்சி உண்பதை தடுத்தும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களிடம் துவே ஷத்தை எழுப்பி, நாட்டுப் பற்று மிக்க வர்களைக் கூட, தேச விரோதிகள் என்று சித்தரிக்கும் போக்கினால், உழைக்கும் மக்களை முச்சந்தியில் நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு.

ஆட்சிக்குப் பெரும்பான்மை இருக் கிறது என்ற அதிகார போதையில் செயல்படும் முறையற்ற போக்கினை உடனடியாக கைவிட்டு, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பிரதமர் நரேந்திரமோடியும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட் லியும் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இவ் வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner