எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார் முயற்சியால் 1951 இல் அரசமைப்புச் சட்டம் திருத்தப்படாமலிருந்தால்

இட ஒதுக்கீட்டின் பலன்  நம் மக்களுக்குக் கிடைத்திருக்குமா?

நவோதயா கண்டனக் கூட்டத்தில் பேராசிரியர் அருணன் (சி.பி.எம்.) அரிய உரை

சென்னை, அக்.3- 1951 இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட தந்தை பெரியார் போராடா திருந்தால் இட ஒதுக்கீட்டின் பலன் நம் மக்களுக்குக் கிடைத் திருக்காது என்றார் மார்க்சிஸ்ட் பேராசிரியர் அருணன் அவர்கள்.

14.9.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘மாநில உரிமையைப் பறிக்கும் இந்தியைத் திணிக்கும் நவோதயாவுக்குக் கண்டனப் பொதுக்கூட்டத்தில்’’மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சார்ந்த பேராசிரியர் அருணன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

வாழும் பெரியார் தமிழர் தலைவர் வீரமணி

இந்தக் கண்டனப் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கக்கூடிய வாழும் பெரியார் தமிழர் தலைவர் வீரமணி அய்யா அவர்களே,

எழுச்சித் தமிழர் தொல்.திருமா அவர்களே,

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி அவர்களே, அன்புத் தோழர் முத்தரசன் அவர்களே,

வரவேற்புரை நல்கி அமர்ந்திருக்கின்ற எனது அன்பு நண்பர் கலி.பூங்குன்றன் அவர்களே, கருஞ்சட்டை வீரர்களே, பெரி யாரின் அணுக்கத் தொண்டர்களே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்.

தமிழ்நாட்டின் தனித்துவம்!

இப்பொழுதெல்லாம் நான் ஒரு வாக்கியத்தைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே வருகிறேன்.

எல்லா மாநிலங்களும் ஒப்புக்கொண்டன நீட்டை - தமிழ்நாடு மட்டும் ஏன் ஒப்புக்கொள்ளமாட்டேன் என்கிறது.

எல்லா மாநிலங்களும் நவோதயாவை ஏற்றுக்கொண்டு இருக்கின்றன. தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

எல்லா மாநிலங்களும் ஒப்புக்கொண்டாலும், தமிழ்நாடு ஏற்காது - அதுதானய்யா, தமிழ்நாட்டின் தனித்துவம்.

இன்று, நேற்றல்ல - சமூகநீதிக்காகவும், தாய்மொழி வளர்ச் சிக்காகவும், தமிழகம் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்திருக்கிறது. தென்னகத்தைப் பொறுத்தவரை ஆதிகாலத்திலிருந்தே அதுதான் நிலைமை.

உத்தரகாண்டத்தில் ஒரு காட்சி வரும் - ஒரு பிராமணர் வருவார், ராமனைப் பார்த்து சொல்வார், ‘‘ராமா, உன்னுடைய ஆட்சியில் ஏதோ தவறு நடக்கிறது; யாரோ ஒரு சூத்திரன் தவம் இருக்கிறான். இது வருணாசிரமத்திற்கு எதிரானது; ஆகவே, என்னுடைய பிள்ளை, பிராமணப் பிள்ளை மாண்டுக் கொண் டிருக்கிறான். அவன் பிழைக்க வேண்டும் என்றால், எங்கே அந்த சூத்திரன் இருக்கிறான் என்று கண்டுபிடித்து, அவனுடைய தவத்தை நீ தடுக்கவேண்டும்’’ என்று வேண்டுகோள் வைத்தார்.

ராமன் காலத்திலேயே

தென்னகம்தான் சிக்கல்!

ராமன் கிளம்பினான்; கிழக்கு நோக்கிப் பார்த்தான், எந்த சூத்திரரும் தவமிருக்கவில்லை. மேற்கு திசைக்குப் போனான், எந்த சூத்திரரும் தவமிருக்கவில்லை. வடக்குத் திசைக்குப் போனான், எந்த சூத்திரரும் தவமிருக்கவில்லை. தெற்கு திசைக்குப் போனான், அங்குதான் சம்பூகன் தவமிருந்தான்.

பிராமணியத்திற்கு, ராமன் காலத்திலேயே தென்னகம்தான் சிக்கல். இதுதானய்யா, எங்களுடைய தனித்துவம்.

1950 ஆம் ஆண்டுகளில் அரசியல் சாசனம் வந்தவுடன், அதில் இருக்கக்கூடிய சில நல்ல வார்த்தைகள் - ஜாதியின் அடிப்படையில் பாகுபாடுகள் காண்பிக்கப்படக் கூடாது என்கிற சில சொல்லாடல்கள்.

தந்தை பெரியார் நடத்திய பேரணி!

அதை வைத்து, இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தது. அந்த ஆபத்தை எதிர்த்து, சென்னையில் ஒரு மகத்தான பேரணியை, 1950-1951 ஆம் ஆண்டுகளில் நடத்திக் காட்டியவர் தந்தை பெரியார் அவர்கள்.

அந்தப் பேரணியைப்பற்றி தன்னுடைய பத்திரிகையில் எழுதுகிறார்,

இந்தப் போராட்டத்தைப் பொறுத்தவரையிலும், எல்லோரும் கலந்துகொண்டார்கள். திராவிடர் கழகத் தோழர்கள் தங்களது கொடியுடன் வந்தார்கள்; கம்யூனிஸ்டுகள் தங்களது கொடியுடன் வந்தார்கள்; தி.மு.க.வினர் தங்கள் கொடியுடன் வந்தார்கள்; காங்கிரசுகாரர்களும் வந்தார்கள், கொடியில்லாமல் வந்தார்கள் என்று நாசுக்காக எழுதியிருப்பார்.

ஏனென்றால், அவர்கள்தான் அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

அரசியல் சாசனம் திருத்தப்படாமல்

போயிருந்தால்...

நான் நினைத்துப் பார்க்கிறேன், அன்றைக்கு மட்டும் அந்தப் போராட்டத்தின் காரணமாக, அரசியல் சாசனம் திருத்தப்படாமல் போயிருந்தால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு, அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டுமல்ல, முழு இந்தி யாவுக்கும் இல்லாமல் போயிருக்கும். இந்தியாவிற்கு வழிகாட் டியது சென்னை மாகாணம் - சமூகநீதி விஷயத்தில்.

ஆகவே, எல்லா மாநிலங்களும் ஒப்புக்கொண்ட பிறகு, தமிழ்நாடு மட்டும் என்றால், கட்டபொம்மன் திரைப்பட வசனம் தான் எனது ஞாபகத்திற்கு வருகிறது.

நம் பக்கம் நியாயம் இருக்கிறது;

நீதி இருக்கிறது.

‘‘எல்லா பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள்; பலன டைகிறார்கள்; நீ ஒருவன் மட்டும் பணியாதது உனக்கு நட்டமா?’’ என்று.

நட்டம்தான் என்கிறேன். தமிழகம் திமிறி நிற்கிறது; முடியாது, சமூகநீதியை விட்டுத்தர முடியாது; இந்தித் திணிப்பை ஏற்க முடியாது. அத்துணை மாநிலங்களும் ஏற்றாலும், தமிழகம் ஏற்காது. காரணம், நம் பக்கம் நியாயம் இருக்கிறது; நீதி இருக்கிறது.

திராவிடர் கழகம் - எந்த ஒரு மாநிலத்திலும் இல்லையே, தமிழ்நாட்டைத் தவிர!

ஆகவேதான், நான் நினைத்துப் பார்க்கிறேன், நவோதயா பள்ளி வருகிறது என்று சொன்னவுடன், அதனைக் கண்டித்து உடனடியாக ஒரு கண்டனப் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்கிற அமைப்பு, திராவிடர் கழகம்தான். வேறு யாரும் செய்ய வில்லையே!

சிவில் சமூகத்தில், சமூகநீதிக்காக இந்தித் திணிப்பை எதிர்த்து விடாமல் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம். 1925 ஆம் ஆண்டில் உதயமான சுயமரியாதை இயக்கம் -இன்னும் 8 ஆண்டுகளில் அதனுடைய நூற்றாண்டு விழா வரப் போகிறது. இத்தகைய ஒரு சுயமரியாதை இயக்கம், இத்தகைய திராவிடர் கழகம் - இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லையே, தமிழ்நாட்டைத் தவிர!

தமிழர் தலைவர் வெளியிட்ட அறிக்கை!

ஆகவேதான், தமிழ்நாடு இதிலே முன்கை இடுகிறது. நண்பர்களே, நீட்டைப்பற்றி நிறைய பேசியாகி விட்டது. தமிழர் தலைவர் அவர்களின் அறிக்கையைப் பார்த்தேன், மிகப் பிரமாதமாக சொல்லியிருக்கிறார்கள்.

எப்படி சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தைச் சார்ந்தவர்கள் பலனடைந்திருக்கிறார்கள்? எப்படி முன்னேறிய ஜாதியினர் பலன டைந்திருக்கிறார்கள்? எப்படி தனியார் பள்ளிகள் பலனடைந் திருக்கின்றன? என்பதை யோசித்துப் பார்க்கிறேன்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பலனடைந்திருக்கிறார்கள் என் றால், என்ன பொருள்? அநேகமாக அவர்கள் எல்லாம் மேட் டுக்குடி மாணவர்கள். ஆகவே, பொருளாதார ரீதியாக அது வர்க்க அநீதி.

மாநில பாடத் திட்ட மாணவர்களுக்குக் கிடைக்கவேண்டிய இடங்கள் கிட்டத்தட்ட 1200 இடங்கள் பறிபோயிருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் ஜாதியைச் சார்ந்தவர்களுக்குக் கிட்டத்தட்ட 500 இடங்கள் பறிபோயிருக்கின்றன. அந்த இடங்கள் முழுவதும் முன்னேறிய ஜாதியினருக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.

அன்றைக்குத் தீட்டு - இன்றைக்கு நீட்டு!

ஆகவே, ஜாதி அடிப்படையில் பார்த்தால், இது சமூக அநீதி. முன்பு ஏற்கெனவே ஆண்டுதோறும் அரசு பள்ளி மாணவர் களுக்கு 30 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்தன, சராசரியாக10 ஆண்டுகளில் 300 சொச்சம். இந்த ஆண்டில், வெறும் 5 இடங்கள் மட்டும்தான். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

கனம் நீதிபதி அவர்கள் சொல்லியிருக்கிறார், இந்த ஆண்டு வெறும் 5 இடங்கள்தானாம்; இப்படி குறைந்து போனதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்கிறார்கள்.

எனக்குப் புரியவில்லை, நீதிபதிகள்மீதெல்லாம் நமக்கு மரியாதை இருக்கவேண்டும்; கடந்த ஆண்டு என்னவாக இருந்தது - அதற்கு முன்பு என்னவாக இருந்தது என்பதை எண்ணிப்பார்த்தீர்களா கனம் நீதிபதி அவர்களே!

ஆண்டுதோறும் 30 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர் களுக்கு. இந்த ஆண்டுதான் 5 என்றால், இந்த ஆண்டுதான் நீட் வந்திருக்கிறது. நீட்தான் அதற்குக் காரணம். அன்றைக்குத் தீட்டு - இன்றைக்கு நீட்டு!

இதை மிக அருமையாக, நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

திட்டமிட்டு, இந்தியைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள்

நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், இதற்குள் இன்னொரு சூட்சுமமும் இருக்கிறது; இந்தித் திணிப்பும் இருக்கிறது நீட்டைக் கொண்டு வருவதில். இப்பொழுது நீட் கேள்விகள் முழுவதும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில்.

பிள்ளைகள் முழுவதும் என்ன செய்யப் போகிறார்கள், நீட் உறுதியானது என்றால், நிரந்தரமாகி விட்டது என்றால், மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாறு வார்கள். அங்கே இந்தி கட்டாயமாக்கி விட்டார்கள். எப்படி வருகிறது பாருங்கள், இந்தித் திணிப்பு தமிழ்நாட்டிற்குள்.

மிகத் தீவிரமாக, கவனமாகத் திட்டமிட்டு, இந்தியைத் திணித் துக் கொண்டிருக்கிறார்கள். எங்கேயாவது இப்படி ஒரு கூத்து நடக்குமா? விமானத்தில் இந்திப் பத்திரிகை மிகவும் அவசியம் என்று இந்த அரசு சொல்கிறது. அது எப்படி அமுலாகியிருக்கிறது என்பதை என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்தேன்.

மொழிப் பிரச்சினை என்பது,

உயிர்ப் பிரச்சினை

சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு ஒரு தனியார் விமானத்தில் நான் பயணம் செய்தேன். அங்கே ஒரு அம்மையார் வந்து, விபத்து ஏற்பட்டால், எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை, முதலில் இந்தியிலும், பிறகு ஆங்கிலத்திலும் சொன்னார். தமிழில் சொல்லவே இல்லை. நாங்கள் போவது எங்கே? சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு. டில்லிக்கா செல்கிறோம். ஆங்கிலமும் தெரியாத, இந்தியும் தெரியாத பல தாய்மார்கள் அந்த விமானத்தில் இருக்கிறார்கள்; பல ஆண்கள் அங்கே இருக்கிறார்கள். எனக்கு என்ன தோன்றியது என்றால், ஆபத்து ஏற்பட்டால், அவர்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பதை அவர்களுடைய தாய்மொழியில்கூட நீங்கள் சொல்லவில்லையே!

மொழிப் பிரச்சினை என்பது, உயிர்ப் பிரச்சினையாக எனக் குப்பட்டது. உன்னுடைய இந்தித் திணிப்பு என்பது எவ்வளவு கேவலமான வடிவம் எடுத்திருக்கிறது என்பதை தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.

இப்படி மிகத் தீவிரமாக அவர்களுடைய காரியங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில்தான், நவோதயா பள்ளிகள் -அதற்கு நீதிமன்றம் சில முன்னெடுப்புகள், சில கருத்துகள் - அதைப்பற்றி அய்யாதான் சொல்லவேண்டும். அது தீர்ப்பா? கருத்தா? அது ஏற்கத்தக்கதுதானா? என்று.

இது ஒரு அரசின் கொள்கை முடிவு. நவோதயா பள்ளி நமது மாநிலத்திற்கு வேண்டுமா? வேண்டாமா? கொள்கை முடிவிலே நாங்கள் தலையிடமாட்டோம் என்று எத்தனையோ தீர்ப்புகள். ஆனால், இந்த நீதிபதி, இப்படி ஒரு தீர்ப்பு அளித்திருக்கிறார்.

முகநூலில் இப்பொழுது எப்படி செய்தி வருகிறது என்றால், அவர் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார், அதுவும் தாமரை சின்னத்தோடு இருக்கக்கூடிய ஒரு புத்தகத்தை. இதுதான் இந்த நாட்டினுடைய நிலைமை.

ஏன் நவோதயா பள்ளியை

எதிர்க்கிறீர்கள்?

பொதுவாக நண்பர்கள் என்னிடம் கேட்பது, ‘‘ஏன் நவோதயா பள்ளியை எதிர்க்கிறீர்கள்? 30 ஏக்கர் நிலம் கொடுத்தால் போதுமே, ஒரு பள்ளி வந்துவிடுமே - 200 ரூபாய்தானே கட்டணம். எல்லா வசதிகளோடும் தமிழ்நாட்டுப் பிள்ளைகளும் படிக்கட்டுமே!’’ என்று.

இத்தகைய கேள்வியைக் கேட்பவர்கள் தமிழகத்திலும் இருக்கிறார்கள் என்பதை நானறிவேன். நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

இங்கே கலி.பூங்குன்றன் அவர்கள் மிக அழகாகச் சொன் னதுபோல,

தேர்வு செய்யப்பட, நுழைவுத் தேர்வே நாம் வேண்டாம் என்கிறோம். அய்ந்தாம் வகுப்பில் நுழைவுத் தேர்வு வைத்துதான் தேர்வு செய்யப் போகிறார்கள். 6 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்புவரை. வரிசையாக நுழைவுத் தேர்வு வைத்து, வடிகட்டி வடிகட்டி தேர்ந்தெடுப்பார்களாம்.

அனைத்துப் பள்ளிகளுக்கும்,

அனைத்து மாணவர்களுக்கும்!

முதலில் நீங்கள் கல்வியை ஒழுங்குபடுத்தவேண்டும்; ஆயிரக்கணக்கான பள்ளிகள் இந்த நாட்டிலே கழிப்பறை இல்லாமல் இருக்கிறது; குடிநீர் வசதிகள் இல்லாமல் இருக்கிறது; கரும்பலகைகள் இல்லாமல் இருக்கிறது; விளையாட்டு மைதானம் இல்லாமல் இருக்கிறது; பரிசோதனைக் கூடங்கள் இல்லாமல் இருக்கிறது; இவற்றை முதலில் உருவாக்குங்கள் - அனைத்துப் பள்ளிகளுக்கும், அனைத்து மாணவர்களுக்கும்.

அதை முழுவதும் செய்துவிட்டு, அதைவிட கூடுதல் வசதி யோடு நாங்கள் ஒரு பள்ளியைக் கொண்டு வருகிறோம்; அதில் நவீன வசதிகள் பல இருக்கும்; ஆனால், சில பேரை மட்டும்தான் தேர்ந்தெடுப்போம். அவர்களுக்கு மட்டும்தான் அதற்கு அனுமதி என்று சொன்னால்கூட அதுபற்றி யோசிக்கலாம்.

ஆனால், இந்தக் கல்வி என்பது இந்தியாவில் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கின்றது என்பதற்கு நிறைய புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன.

இரண்டு வாரங்களில் 113 குழந்தைகள் மாண்டு போயிருக்கிறார்கள்

கல்வியைப்பற்றி கவலைப்படாதவர்கள், சுகாதாரத்தைப்பற்றி கவலைப்படாதவர்கள் - உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இரண்டு வாரங்களில் 113 குழந்தைகள் மாண்டு போயிருக் கிறார்கள். அந்தத் தொகுதியில் 20 ஆண்டுகளாக எம்.பி.,யாக இருந்த சாமியார் இப்பொழுது முதலமைச்சராக இருக்கிறார்.

அடிப்படை வசதியான கல்வியும், சுகாதாரமும் நம்முடைய பிள்ளைகளுக்குத் தரப்படவில்லை. ஆனால் தேர்ந்தெடுக் கப்படுகிற 250 பேர்களுக்கு மட்டும், நம்முடைய வரிப் பணத்தி லிருந்து கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்யப் போகிறோம் என்று சொல்கிறீர்களே, இது மேட்டுக்குடி மனப் பான்மையா, இல்லையா? இது அடிப்படையான கேள்வி.

இன்னொரு புறம், இதில் எப்படி இந்தித் திணிப்பு இருக்கிறது என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

நான் இணைய தளத்தில் சென்று பார்த்தேன், நவோதயா வித்யாலயா சமிதி என்கிற அமைப்புதான் அதனை நடத்திக் கொண்டிருக்கிறது.

அதில் இரண்டே வரியைப் படிக்கிறேன் கேளுங்கள்,

னீமீபீவீuனீ ஷீயீ வீஸீstக்ஷீuநீtவீஷீஸீ ஷ்வீறீறீ தீமீ னீஷீtலீமீக்ஷீ tஷீஸீரீuமீ/க்ஷீமீரீவீஷீஸீணீறீ றீணீஸீரீuணீரீமீ ஷீயீ 7tலீ ஷீக்ஷீ 8tலீ நீறீணீss. ஜிலீமீக்ஷீமீ ணீயீtமீக்ஷீ நீஷீனீனீஷீஸீ னீமீபீவீuனீ ஷ்ஷீuறீபீ தீமீ பிவீஸீபீவீ / ணிஸீரீறீவீsலீ வீஸீ ணீறீறீ ழிணீஸ்ஷீபீணீஹ்ணீ ஸ்வீபீஹ்ணீறீணீs

பயிற்று மொழி ஒன்று ஆங்கிலம் அல்லது இந்திதான்!

பாருங்கள், ஆறாம் வகுப்பிலிருந்துதான் இந்த நவோதயா பள்ளியை ஆரம்பமாகிறது. 6, 7, 8 வகுப்புகளில்தான், பயிற்று மொழி என்பது, அந்தந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய மொழி இருக்கும். 9 ஆம் வகுப்புக்குச் சென்றுவிட்டால், பயிற்று மொழி ஒன்று ஆங்கிலம் அல்லது இந்திதான். அதுவரையில் தமிழ் பயிற்று மொழியாக இருந்தாலும், அதன்மூலமாகப் பாடம் சொல்லித் தருவது என்பது இருக்காது.

நான் ஆங்கில வழியில்தான் பாடங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அல்லது இந்தி வழியில்தான் பாடங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், நான் ஏன் என்னுடைய தாய்மொழியைப் படிக்கவேண்டும்?

ஆனால், தாய்மொழியை மறப்பது, உதறுவது என்பது நம்முடைய அறிவையே முடமாக்குவது.

இன்றைக்கு அரசு பள்ளிகளில்கூட, தமிழ் வழிப் பள்ளி யோடு, ஒரு சில வகுப்புகள் ஆங்கிலவழி வகுப்பும் இருக்கிறது என்பதை நான் அறிவேன். அதுவே, சிக்கல்!

பக்கத்து வீட்டில் ஒரு பையன் படித்துக் கொண்டிருந்தான்.

‘‘காரிகாலன் கன்ஸ்ட்ரக்ட் த கிராண்ட் அணைக்கட்.’’

என்னப்பா, ‘‘காரிகாலன்’’ என்கிறாய், என்றேன்.

அவன் திரும்பவும் சொன்னான், காரிகலன் கன்ஸ்ட்ரக்ட் த கிராண்ட் அணைக்கட் என்று.

ஏனென்றால், ‘கி’வை ஒரே மாதிரியாகத்தானே போட்டிருக்கிறீர்கள். தமிழ்நாட்டு வரலாற்றையே ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்தால், எத்தகைய இழிநிலை வரும் என்பதற்கு, இந்த எளிய உதாரணத்தைச் சொல்கிறேன்.

அரசு கொள்கைகளிலேயே சில சிக்கல்கள்

என்ன கொடுமை - போகிற போக்கைப் பார்த்தால், தமி ழையே இங்கிலீசில் சொல்லிக் கொடுப்பார்கள் போலிருக்கிறது.

ஏற்கெனவே சில இடங்களில் இருக்கக்கூடிய நிலைமை - அரசு கொள்கைகளிலேயே சில சிக்கல்கள் இருக்கின்றன.

ஆனால், நவோதயா பள்ளிக்கூடங்களில், 9, 10, 11, 12 வகுப்பு களில் தமிழ்ப் பயிற்சி மொழி கிடையாது. ஒன்று, நீங்கள் ஆங்கில வழியில்தான் படிக்கவேண்டும் அல்லது இந்தி வழியில்தான் படிக்கவேண்டும். இதுதான் அடிப்படையான விஷயம்.

நவோதயா பள்ளிகள்

தமிழகத்திற்குத் தேவையில்லை

ஆகவேதான், 1986 ஆம் ஆண்டிலிருந்து விடாமல், இந்த 30 ஆண்டுகாலத்திற்கு மேலாக, இந்த நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்குத் தேவையில்லை - அவை இல்லாமலேயே தமிழகம் சில துறைகளில், கல்வித் துறையில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது- குறிப்பாக வட மாநிலங்களை ஒப் பிடும்பொழுது.

நான் ஏற்கெனவே இங்கே சொன்னேன்  - தமிழ் வழி வகுப்பும் இருக்கு - ஆங்கில வழிவகுப்பும் இருக்கு. ஆனால், நவோதயா பள்ளியில், ஆங்கில வழி வகுப்பும், இந்தி வழி வகுப்பும்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டினுடைய இருமொழிக் கொள்கையை அவர்கள் எதிர்க்கிறார்கள். நான் கேட்கிறேன், நவோதயா பள்ளிகளிலும் இருமொழிக் கொள்கைதானே இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் என்றுதானே உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். இது என்ன நியாயம்? அதனால்தான் நாம் அதனை எதிர்க்கிறோம்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு

இட ஒதுக்கீடு கிடையாது

நான் அதனைப் படித்துப் பார்த்தேன் - இடங்கள் ஒதுக்கப் பட்டிருக்கின்றன நம்முடைய பட்டியல் ஜாதியினருக்கும், மலைவாழ் மக்களுக்கும் - ஏட்டளவில் - நடைமுறையில் எந்த அளவில் இருக்கிறது என்பது ஆய்விற்குரிய விஷயம் - இருந்தாலும், அதனை வரவேற்கிறேன்.

ஆனாலும், நண்பர்களே, நவோதயா பள்ளியில் பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது.

ஒன்று சமூகநீதிக்கு ஆபத்து அல்லது தமிழுக்கு ஆபத்து - இது இரண்டும்தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.

இந்த இரட்டை ஆபத்தை எதிர்த்து இன்றைக்கு நாம் போராட வேண்டியிருக்கிறது.

எனது வரிப்பணத்திலிருந்து நடக்கிற நவோதயா பள்ளியில், எனது மொழிக்கு இடமில்லையா?

சில நண்பர்கள் ஏன் நவோதயா பள்ளிகளை நீங்கள் ஏற்கக் கூடாது என்று கேட்கின்றவர்களைப் பார்த்து, நான் வைக்கின்ற வினா இதுதான்.

தயவு செய்து நீங்கள் போய், பா.ஜ.க.வினரிடம், ஆர்.எஸ்.எஸ்.காரனிடம், நவோதயா பள்ளி வேண்டும் என்கிறவர்களிடம்,

‘‘ஏனய்யா, தமிழ் வழிவகுப்புப் படிப்பு வரக்கூடாது நவோ தயா பள்ளியில். தமிழ்நாட்டிலேதானே அந்தப் பள்ளி வர வேண்டும் என்கிறீர்கள். மத்திய அரசு பணம் என்றால், அதுவும் தமிழர்கள் கொடுத்த வரிப் பணம்தானே - எனது வரிப்பணத்திலிருந்து நடக்கிற நவோதயா பள்ளியில், எனது மொழிக்கு இடமில்லையா? இது என்ன அநியாயம், அக்கிரமம். தமிழ் வழிப் படிப்பு உண்டு என்று சொல்லத் தயாரா இவர்கள் என்று கேளுங்கள்!

அதேபோல, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று அந்த சமிதியினுடைய வலைதளம் சொல்கிறது. இது என்ன நியாயம்?

ஏற்கெனவே மண்டல் குழுவிற்குப் பிறகு இட ஒதுக்கீடு வந்திருக்கிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு - ஏன் நவோதயாவில் மட்டும் இப்படி வைத்திருக்கிறீர்கள். ஆகவே, அவர்களுக்கும் இட ஒதுக்கீடு கொண்டு வாருங்கள்; அப்படி கொண்டு வருவது மட்டுமல்ல, பட்டியல் ஜாதியினர்  மற்றும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு ஏட்டளவில் மட்டுமல்ல, நடைமுறை அளவிலும் அந்தப் பயன்பாடு வரவேண்டும்.

இளம் பிள்ளைகள் நெஞ்சிலேயே

இந்தியைத் திணிப்பது

இந்த இரண்டு கேள்விகளைக் கேளுங்கள். அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று கேட்டு எங் களுக்குச் சொல்லுங்கள். பிறகு நாங்கள் யோசிக்கிறோம், நவோதயா பள்ளிகளை ஏற்பதா? இல்லையா? என்று.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். அவர்களுடைய நோக்கமே, நவோதயா மூலம் தமிழ்நாட்டிலும், இளம் பிள்ளைகள் நெஞ்சிலேயே இந்தியைத் திணிப்பது. அவர்களுடைய லட்சியம் என்பது சமஸ்கிருதம் - அதேநேரத்தில், இந்தித் திணிப்பு நிச்சயம் என்று வைத்தி ருக்கிறார்கள்.

அவர்களுடைய கல்விக் கொள்கை ஒன்றை வெளியிட் டிருக்கிறார்கள். வேறு எந்த மொழியைப்பற்றியும் அதில் எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், சமஸ்கிருதத்தைப்பற்றி மட்டும், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், சமஸ்கிருதம் சொல்லித் தர அனைத்து ஏற்பாடுகளும், உதவிகளும் செய் யப்படும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள், தெரியுமா நண்பர்களே!

எதிர்ப்புத் தொடரும்

ஆக, அவர்களுடைய லட்சியம் சமஸ்கிருதத் திணிப்பு, நிச்சயம் இந்தித் திணிப்பு என்று வருகிறது. நவோதயா பள்ளியும், அது ஏதோ பெரிய அறிவை ஊட்டுவதாகத் தெரியவில்லை. இந்தித் திணிப்புக் கூடமாகத் தெரிகிறது. ஆகவேதான், நாம் அதனை எதிர்க்கிறோம்.

கண்டிப்பாக இந்த எதிர்ப்புத் தொடரும் - மக்களிடம் இந்த உண்மைகளைச் சொல்வோம் எனக் கேட்டுக்கொண்டு, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராசிரியர் அருணன் அவர்கள் உரையாற்றினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner