எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக். 11- திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரு மான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 10.-10.-2017 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

செய்தியாளர்: முரசொலி காட்சி அரங்கம் நிரந்தரமாக அமைக்கப்படும் என சொல்லி இருக்கிறீர்கள், இதுவரை எத்தனை பேர் பார்வையிட்டு இருக் கிறார்கள்?

மு.க.ஸ்டாலின்: முரசொலியின் பவள விழாவையொட்டி ஆகஸ்ட் 10 அன்று காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு, இன் றோடு இரண்டு மாதங்கள் நிறைவடை கிறது. இன்றுடன் அதனை நாங்கள் முடித்து வைக்க இருக்கிறோம். நேற்று வரையில் ஏறக்குறைய 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்து இருக் கிறார்கள். இன்றும் ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவியர் வந்திருப்பதாக செய்தியறிந்தேன். ஆகவே, இன்றோடு முடிக்கப்பட்டாலும், தொடர்ந்து நிரந் தரமாக முரசொலி நூற்றாண்டு விழா கொண்டாடுகிற நேரத்தில் அதனை நிரந்தரப்படுத்தும் வகையில், அந்தக் காட்சியரங்கை அமைப்பதற்கு நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.

செய்தியாளர்: பண மதிப்பிழப்பு நட வடிக்கையால் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் கள், குறிப்பாக அமித் ஷாவின் குடும் பத்தினர் அதிக பயனடைந்து இருப்ப தாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?

மு.க.ஸ்டாலின்: பாஜக ஆட்சியைப் பொறுத்தவரையில் எதிர்கட்சிகள் மீது ஏதேனும் குற்றச்சாட்டு வந்தால், அது உண்மையோ அல்லது உண்மைக்கு புறம்பானதோ, உடனடியாக அமலாக் கத்துறை, வருமான வரித்துறை சோத னைகள் எல்லாம் நடந்து கொண்டிருப் பது உங்களுக்குத் தெரியும். அதுபோல், பாஜகவின் தலைவர் அமித் ஷாவின் மகன் மீது இந்தக் குற்றச்சாட்டு இப் பொழுது வந்திருக்கிற நேரத்தில், அது போன்ற சோதனைகள் நடைபெறுமா என்பதுதான் என் கேள்வி. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வளாக இருக்க வேண்டும், என்பது போல், பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் அதனை நிரூபிக்கிற வகையில் உரிய நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்தியாளர்: டெங்குவால் நாள் ஒன்றுக்கு பத்துக்கும் மேற்பட்டோர் இறந்து கொண்டிருக்கும் சூழலில், சுகா தாரத்தைக் கூட தமிழக அரசால் சரிவர  செயல்படுத்த முடியவில்லையே?

மு.க.ஸ்டாலின்: இதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு துளிகூட கவலையில்லை. அதனால் தான் நான் நேற்று கூட, இந்த ஆட்சியே ஒரு டெங்கு ஆட்சிதான், என்று குறிப்பிட்டுச் சொன்னேன்.

செய்தியாளர்: டெங்கு பிரச்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன?

மு.க.ஸ்டாலின்: இதுகுறித்து நட வடிக்கை எடுப்பதில் எல்லாம் அவர்கள் அக்கறை செலுத்துவது இல்லை. அவர் களுடைய அக்கறை எல்லாம் ஏற்கனவே ஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா விவகாரத்தில் வரு மான வரித்துறையிடம் இருந்து எப்படி தப்பித்துக் கொள்வது,  குட்கா ஊழலில் புகாரில் இருந்து எப்படி தப்பித்துக் கொள்வது, என்பதில் தான் அவர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் கள். அதையும் தாண்டி மைனாரிட்டியாக இருக்கும் இந்த ஆட்சியை எப்படி நிலைநிறுத்திக் கொள்வது என்பதில் தான் அக்கறையுடன் உள்ளார்கள்.

செய்தியாளர்: சிவாஜி கணேசன் மணிமண்டபத்தின் கல்வெட்டில் தலை வர் கலைஞர் அவர்களின் பெயர் இடம் பெறுவதற்கு வாய்ப்பில்லை என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்களே?

மு.க.ஸ்டாலின்: அரசியல் காழ்ப் புணர்ச்சியோடு வேண்டுமென்றே திட் டமிட்டு செய்யப்பட்ட செயல் என ஏற் கனவே நான் அதனைக் கண்டித்து இருக் கிறேன். இந்த ஆட்சியைப் பொறுத்த வரையில், அரசியல் நாகரிகத்தை இவர் களிடத்தில் எந்தக்காலத்திலும் எதிர்ப் பார்க்க முடியாது.

செய்தியாளர்: எம்.ஜி.ஆர் சிலை உட்பட தியாகிகள் சிலைகள் மீதெல் லாம் காக்கை எச்சம்படும் நிலை இருக் கும்போது, சிவாஜி சிலை மீது மட்டும் காக்கை எச்சம் படக்கூடாது என்பதால் மணிமண்டபத்தில் வைத்திருக்கிறோம் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்து இருக்கிறாரே?

மு.க.ஸ்டாலின்: இந்த அபூர்வமான கருத்தைச் சொன்னவரிடம் தான் இந்த கேள்வியைக் கேட்டு, அதனை மக்களுக்கு வெளிபடுத்துங்கள்.

செய்தியாளர்: முதல்வர் கலந்துகொள்ளும் விழாக்களில் குறிப்பாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படு கிறது என புகார்கள் வருகிறதே? டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் சூழலில் இந்த விழாக்கள் தேவையா?

மு.க.ஸ்டாலின்: இந்த விழா தேவையில்லாதது என நான் சொன்னால் ஏதோ அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சொல் கிறேன் என்பார்கள். நான் எம்.ஜி.ஆரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கிறேன் எனச் சொல்வார்கள் அதற்கு நான் பதில் சொல்ல தயாராக இல்லை. இருந்தா லும், அதிலே காட்டும் அக்கறையை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளிலும் காட்ட வேண்டும். கொசு மருந்து அடிப்பதில் கூட ஊழல் செய்திருக்கிறார்கள். இதற்கு தலைமைச் செயலாளரே பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆளுநர் அவர்க ளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். இன் றைக்கு, தலைமைச் செயலாளரே எம். ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி அடிக் கும் கொள்ளைக்கும், கூத்திற்கும், கும் மாளத்திற்கும் கைகோர்த்திருக்கும் சூழல் தான் தொடர்ந்து இருந்து வரு கிறது. இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner