எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக்.15 சென்னை கூடுவாஞ்சேரியில் புத்த மறுமலர்ச்சி மாநாடு கடந்த 8.10.2017 அன்று நடைபெற்றது.மாநாட்டில் ஜாதி, பாலின பாகு பாடுகளால் பாதிப்புக்குள்ளானதாழ்த்தப்பட்ட வர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பவுத்தத்தை தழுவினார்கள்

பெங்களூருவைச் சேர்ந்த புத்த பிக்கு வினயா ராக்கிதா பாண்டே தலைமையில் நடைபெற்ற  அம்மாநாட்டில் நூற்றுக்கணக்கான பவுத்தர்கள் பங்குபெற்றனர். மாற்றத்துக்கான பேரியக்கம் எனப்படும் புத்த சங்கம் மாநாட்டுக்கான ஏற் பாட்டினை செய்திருந்தது. ஒரு நாள் நிகழ்வில் 2000 பேர் பங்கேற்றார்கள்.  கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள்  பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், உரைவீச்சுகள் நடைபெற்றன.

பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 14.10.1956 அனறு இந்து மதத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு பவுத்தத்தைத் தழுவினார்.

டாக்டர் சத்வா

அம்பேத்கர் வழியில்  இயங்கிவருகின்ற ‘மாற்றத்துக்கான பேரியக்கத்தின்’ பொறுப்பாளர் டாக்டர் சத்வா கூறியதாவது:

நாங்கள் வரலாற்று ரீதியில் பவுத்தர்கள் என் பதை தன்னுடைய எழுத்துகளின் மூலமாக  டாக்டர் அம்பேத்கர் நிரூபித்தார். தற்போது பவுத்தத்தைத் தழுவுவதன்மூலமாக, நம்முடைய கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் மறு வரையறை மற்றும் திரும்பவும் மீட்டெடுக் கிறோம். மாற்றத்துக்கான பேரியக்கம் என்பது அரசியல் இயக்கமாக, மாநிலம் முழுவதும் பவுத்த மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளது என்று டாக்டர் சத்வா கூறினார்.

டாக்டர் சத்வா மேலும் கூறும்போது, “இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்டவர்களாகிய நாங்கள் பாதிக்கப்பட்டதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளோம்.தனிப்பட்டவகையில்ஒவ் வொருவரும் பாதிக்கப்பட்டோம். உடல் ரீதியிலான பாதிப்பாக இல்லாமல், இதுநாள் வரையிலும் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறோம். சிறந்த, சமத்துவ சமூகத்தை புத் தத்தின் வழியில் உருவாக்கிட இந்த முயற்சியை எடுத்துள்ளோம்’’ என்றார்.

உதவி பேராசிரியர்

எஸ்.சுகனேஸ்

அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் எஸ்.சுகனேஸ் கூறியதாவது:

“சக மனிதர்களை மனிதநேயத்துடன் மதிப்பது மற்றும் பண்புநலன்களை பவுத்தம் கற்பிக்கிறது.  என்னுடைய கல்லூரி நாள்களில் மறைமுகமாக பாகுபாடுகளை எதிர்கொண்டுள்ளேன். வரலாற்று  ரீதியாகவே நாம் பவுத்தர்கள்தான். ஆகவே, பவுத்தம் தழுவலை மீண்டும் பவுத்தத்துக்குத் திரும்புவதாகவே என்னால் கூறமுடியும்’’ என்றார்.

புனித பாண்டியன்

தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் தாழ்த்தப்பட்டவர்களின்விடுதலைக்காகமத மாற்றத்துக்கான முக்கியத்துவம் குறித்து பேசி னார்.

அவர் குறிப்பிடும்போது, “தாழ்த்தப்பட்ட வர்கள் தவறாக இந்துக்களாக அடையாளப் படுத்தப்பட்டு வருகின்றனர். இதன்மூலம் இழந்த அடையாளத்தை திரும்பப் பெற முயற் சித்துள்ளோம். அனைத்திற்கும் இதுமட்டுமே தீர்வு என்று நாங்கள் கூறமாட்டோம். சுயமரியாதை மற்றும் மான மீட்புக்கான போராட்டமாகும். மதமாற்றம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கவுரவத்தை சமூக அந்தஸ்தையும் அளிக்கின்றது'' என்றார்.

சூரிய புத்தமித்ர

மாநாட்டில் பங்கேற்ற சூரிய புத்தமித்ர என்பவர் கூறும்போது,

“நாங்கள் செய்ய வேண்டிய  பணிகள் ஏராளமாக உள்ளன.  பவுத்த சங்கத்தை கட்டமைத்து, பவுத் தர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறோம்’’ என்றார்.

தீர்மானங்கள்

அனைத்து மாவட்டங்களிலும் புத்த வகுப்புகள் நடத்துவது, புத்த இளைஞர் சங்கத்தின்மூலமாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கின்ற புத்தர் சிலைகளை அடையாளம் காண்பது, அரசமைப்புச்சட்டப்பிரிவு 25, இந்து மதத்தின் துணை ஜாதிப்பிரிவுகளாக சீக்கியம், புத்தம் மற்றும் சமணத்தைக் குறிப்பிடப்படுவது நீக்கப்படவேண்டும். புத்த கயாவை சுற்றுலாத் தலமாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். சிறுபான்மையருக்கான பொதுவான தேசிய ஆணையம் என்று இருப்பதை தனித்தனி ஆணையமாக உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.ஆண்டுதோறும்அக் டோபர் மாதத்தில் மதமாற்ற நிகழ்வு நடத்தப் படும் என்று  மாநாட்டு அமைப்பாளர்கள் தெரி வித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner