எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரூர், அக். 24- கரூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மறியல் செய்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கரூரில் பாஜக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடை பெறும் மண்டபத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழிசையை கண்டித்து முழக்கமிட்டனர். அப்போது இரு கட்சியினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கரூரில், அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் தொடங்கியுள்ளது. பாஜக மாநில தலைவர் தமி ழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட மாநில நிர் வாகிகள் பலர் இந்த கூட்டத் தில் பங்கேற்றுள்ளனர்.

கூட்டம் நடைபெறும் மண்டபத்தின் முன்பாக கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழிசையை கண்டித்து முழக்கமிட்டனர். அப்போது அங்கிருந்த பாஜக தொண் டர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களுக்கு எதி ராக முழக்கமிட்டனர்.

இதனையடுத்து இரு தரப் பினருக்கும் இடையே கைக லப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதா னப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் பாஜக தொண்டர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் கொடியை பிடித்து இழுத்து காலில் போட்டு மிதித்தனர். இரு தரப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது காவல்துறையினர் மறியல் செய்த அனைவரையும் கைது செய்தனர்.