எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக். 25- பண மதிப் பிழப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்ட நவம்பர் 8-ஆம் தேதியை கருப்பு நாளாக கடைப்பிடிப்பதுடன், மாவட் டந்தோறும் ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஆண்டு நவம்பர் 8 -ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்தது. 'இந்த நடவடிக்கை இமாலய தவறு என்றும், விவ சாயத்தையும், பொருளாதாரத் தையும் பாதிக்கும்' என்றும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அப்போது கூறினார்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, 'எனக்கு 50 நாள்கள் அவகாசம் கொடுங்கள். அதற்கு பிறகும் பண மதிப்பிழப்பு நட வடிக்கை பிரச்சினை தீரவில்லை என்றால் நாடு அளிக்கும் தண் டனையை ஏற்க தயாராக இருக் கிறேன்' என்று கூறினார். எனி னும், இந்த நடவடிக்கையால் மக்கள்தான் எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனரே தவிர, பொருளாதார நிலை ஏற் றம் பெறவில்லை. தற்போது பாஜகவின் முக்கிய தலைவர் களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்கா, 'பண மதிப் பிழப்பு பொருளாதார பேரழிவை ஏற்படுத்திவிட்டது' என்றே குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு முடிவுறும் நவம்பர் 8 -ஆம் தேதியை கருப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டுமென, டில்லியில் நடைபெற்ற அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

எனவே, மத்திய பாஜக அரசை கண்டித்து நவம்பர் 8 -ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் கருப்புச் சட்டை அணிந்து கட் சியின் நிர்வாகிகளும், தொண் டர்களும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் இந்த ஆர்ப்பாட் டத்துக்கு ஆதரவு அளிக்குமா றும், பண மதிப்பிழப்பு நட வடிக்கையால் பாதிக்கப்பட் டுள்ள வணிக பெருமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு அடையாள சின்னம் அணிந்து பெருமளவில் பங்கேற்க வேண் டும் என்று ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner