எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக். 29- தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் மு.கரு ணாநிதி பொற்கிழி விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளை கலை அரங்கத்தில் நேற்று (28.10.2017) மாலை நடைபெற்றது. விழா வுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார்.

பிரபஞ்சன் (புனைகதை), கலாப்பிரியா (நவீன இலக்கி யம்), சுப.வீரபாண்டியன் (கட் டுரை), தீபம் எஸ்.திருமலை (இலக்கியம்), கே.ஜீவபாரதி (இதழாளர்), ஆலந்தூர் கோ. மோகனரங்கன் (கவிதை), பி.எல்.ராஜேந்திரன் (சிறுவர் இலக்கியம்) ஆகியோருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விரு தினை எஸ்.ஜெகத்ரட்சகன் வழங் கினார். விருது பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் எஸ்.ஜெகத்ரட் சகன் பேசியதாவது:

தி.மு.க. தலைவர் கலைஞர் பெயரில் விருது வழங்குவதை பெருமையாக கருதுகிறேன். பேனாவில் நிரப்பிய மை அனைத்தையும் தமிழாக்கிய ஒரே தலைவர். சேரன், சோழன் மற்றும் பாண்டியன் ஆகிய மூவரின் ஒரே வடிவமாக கலைஞர் திகழ்கிறார்.

எழுதுகோலுக்கும், செங்கோலுக்கும் வரலாற்றில் இடம் பிடித்துத் தந்த ஒரே தலைவர். பனை ஓலையில் இருந்த தமிழுக்கு, பச்சை ரத் தம் பாய்ச்சியவர். உடன் பிறப்பு என்ற ஒற்றை சொல் லில் உல கத்தையே கட்டிப்போட்டிருக் கிறார்.

எதிர்ப்புக்கு அஞ்சாத இளம் தமிழகத்தின் ஒரே தலைவர் கலைஞர்தான். ஒரு கோடி பக்கங்கள் எழுதிய ஒரே தலைவரும் அவர்தான். தமிழ் நாட்டில் பிறக்காமல், வெளி நாட்டில் பிறந்திருந்தால் நோபல் பரிசு பெற்றிருப்பார். அரசி யல்வாதி, எழுத்தாளர் என பன் முகத்தன்மை கொண்ட கலை ஞரிடம் பேசினால், பல்கலைக் கழகங்களில் படித்த ஞானம் கிடைக்கும்.

கலைஞரின் எழுத்தும், பேச்சும் வந்த பிறகுதான் அர சியல் குடிசைக்கு வந்தது. கலை ஞர் பெயரில் விருது வழங்கும் விழா பெரிய அளவில் நடத்தவேண்டும் என்பது என் ஆசை.  இவ்வாறு அவர் பேசி னார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரும், தி.மு.க. மாநில செய்தித்தொடர்பு இணை செயலாளருமான தமிழன் பிர சன்னா சிறப்புரை நிகழ்த்தி னார். விருது பெற்றவர்கள் சார் பில் பிரபஞ்சனும், சுப.வீர பாண்டியனும் ஏற்புரை நிகழ்த் தினர்.

முன்னதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலை வர் காந்தி கண்ணதாசன் வர வேற்புரையாற்றினார். செயலா ளர் கே.எஸ்.புகழேந்தி நன்றி யுரை நிகழ்த்தினார்.

விழாவில், தி.மு.க. வர்த் தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner