சென்னை, அக்.29 டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையின் சார்பில் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி-மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அவரது நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், பள்ளி மற்றும் கல் லூரி மாணவர்களுக்கான பல் திறன் போட்டிகள் அண்மை யில் (அக். 26 மற்றும் 27) நடை பெற்றன.
இவற்றைத் தொடங்கி வைத்துப் பேசிய மயிலாப்பூர் சட்ட மன்றத் தொகுதி உறுப் பினரும், முன்னாள் டி.ஜி.பி. யுமான ஆர். நட்ராஜ், எம்.ஜி. ஆர். தாம் முதல்வராகப் பதவி வகித்த காலத்தில் செய்த சாத னைகள் பலப்பல.
சத்துணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி மாண வர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர உதவியது மட்டுமல்லாமல், தனியாரையும் ஊக்கப்படுத்தி பொறியியல், மருத்துவக் கல் லூரிகளைத் தொடங்க அனு மதித்தவர் அவர்.
இதன் பலனாகவே, உயர்கல்வி படிப்போரின் எண் ணிக்கை தற்போது தமிழகத்தில் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற இதன் நிறைவு விழாவில், தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலாளர் வெ. இறையன்பு, அய்ஏஎஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, ஊமை நடிப்புப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியன நடைபெற்றன.
இதில் சுமார் 100 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 673 மாணவர்கள் கலந்து கொண் டனர் என இக்கல்லூரியின் தாளாளர் முனைவர் லதா ராஜேந்திரன் தெரிவித்தார்.