எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திண்டுக்கல், நவ.3  தமிழகத் தில் ஏற்கெனவே வெள்ள பாதிப் பும் ஏற்பட்டும் அரசு அதிலி ருந்து பாடம் கற்றுக் கொள்ள வில்லை என, காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வியாழக்கிழமை திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,  பின்னர் செய்தியாளர்களிடையே மேலும் தெரிவித்ததாவது:

தமிழக அமைச்சர்கள் அனை வரும் மறுபடியும் கீழ்நிலைப் பாடங்களை படித்து வர வேண்டும். டெங்கு கொசுவை ஒழிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் வருவதாக, அமைச்சர் திண்டுக் கல் சீனிவாசன் கூறியுள்ளார். கொசுவைக் கட்டுப்படுத்த அரசும், சுகாதாரத் துறையும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் காய்ச் சலைத் தான் குணப்படுத்து வார்கள்.

தமிழகத்தில் முன்னரே வெள்ளம் வந்தும் இந்த அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. செய்யவேண்டிய பணிகளை விட்டு விட்டு, மணல் கொள்ளை, தார் ஊழல் என நாள்தோறும் எவ்வளவு சம் பாதிக்க வேண்டும் என திட்டமி டுகின்றனர். இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். அப்போது, முதல்வர் உள்ளிட்ட அனைவரும் மாமியார் வீட் டுக்கு நிச்சயமாகச் செல்வார்கள்.