எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விருதுநகர், நவ. 5 -பாபர் மசூதி இடிப்பு தொடர்பாகசமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவ தாக சிறீசிறீரவி சங்கர் நாடக மாடி வருகிறார் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விருதுநகரில் தெரிவித்தார்.

விருதுநகர் அருகே உள்ள ஆவுடையாபுரத்தில்  மனித நேய மக்கள் கட்சியின் தலை வர் ஜவாஹிருல்லா செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சிறீசிறீரவி சங்கர் நாடகமாடி வருகிறார். முன்னாள் பிரதமர் சந்திரசேகர் ஆட்சி காலத்திலிருந்து சமரச பேச்சு வார்த்தை நடத்தி வந்தாலும் இதுவரை முடிவு ஏற்பட வில்லை. எனவே, இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாது. காந்தியார் படுகொலைக்குப் பின்பு, டிச.6 தான் பயங்கர வாதத்தின் முக்கிய நாள். 1992 இல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி பாபர் மசூதி இடிக்கப் பட்டது. இதை கண்டித்து டிச. 6இல் அனைத்து மாவட்டங்களி லும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இந்த விஷயத்தில் நீதிமன்ற தீர்ப்பு தான் இறுதியானது.கடந்த 2015 - இல் வெள்ளம் காரணமாக சென்னை நகர மக்கள் அடைந்த இன்னல்களை முன்னுதாரணமாக வைத்து கூட தமிழக அரசு எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. முறையாக குளம், ஏரி, கால் வாய் போன்றவை பராமரிப்பு செய்யாததே இதற்குக் காரணம். பருவமழை தொடங்குவதற்கு முன்பு, எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை வெள் ளத்தில் தத்தளித்து வருகிறது. மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசாக உள்ளது.

தமிழக பாஜக நிர்வாகி எச். ராஜா, இஸ்லாமியர்களை இழி வாக பேசி வருகிறார். அவர் மீது விரைவில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள ஆறுகளி லிருந்து மணல் அள்ளி கேர ளாவில் விற்பனை செய்கின் றனர். இதனால், ஆற்றுப் படு கையில் நீர் வரத்து செல்வது கேள்விக்குறியாக உள்ளது. குடிமராமத்து பணியில் நடை பெற்ற ஊழல் குறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியது போல் அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner