எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மயிலாடுதுறை, நவ.12 நாங்கள் பெரியாரின் பிள்ளைகள், அம்பேத்கரின் வாரிசுகள் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் எழுச்சிதமிழர் தொல்.திருமாவளன்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு கடந்த மாதம் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்த போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இருதரப்பினரியையே தகராறு ஏற்பட்டது. இதில் தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்து சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றக் கூடிய அளவுக்கு வளரவில்லை என்ற போதிலும் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விளங்குகிறது. விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியை பாரதிய ஜனதா கட்சியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவ தாலும், இஸ்லாமிய, கிறிஸ்தவ சமுதாயத் தினர் மற்றும் மதவாதத்தை எதிர்க்கும் இடதுசாரி கட்சிகளோடு நட்புறவோடு இருப்பதாலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளோடு மக்கள் பிரச்சினை களுக்காக கை கோர்ப்பதாலும்தான் பாஜக வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பிடிக்கவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் பெரியாரின் பிள்ளைகள்! அம்பேத்கரின் வாரிசுகள்! மாயாவதி உட்பட பல தலித் தலைவர்களை பாஜக வளைத்துப் போட்டு விட்டது. திருமாவளவனை அவர்களால் வளைக்க முடியவில்லை. அதனால் பாஜகவிற்கு நம் மீது காழ்ப்புணர்ச்சி! மெர்சல் படத்தில் விஜய் ஜிஎஸ்டி வரிவிதிப்பை விமர்சனம் செய்துள்ளார்.

அதைவிட அதிகமாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு. பணமதிப்பிழப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் யஸ்வந்த் சின்ஹா தேசத்தை அதள பாதாளத்தில் தள்ளி விட்டது என விமர்சித்துள்ளார். விஜய்யை வளைத்துப் போட பிஜேபிக்கு ஆசை இருக்கலாம் என்று கூறினேன். ஆனால் அதற்கு நிலத்தை அபகரித்ததாகவும், கட்ட பஞ்சாயத்து செய்வதாகவும், ரவுடித்தனம் செய்வதாகவும் கூறி பாஜகவினர் பிரச்சி னையை பெரிதாக்கிவிட்டனர்.

தமிழகத்தில் பிஜேபி காலூன்ற நினைக்கிறது. இது பெரியார் பிறந்த மண். இங்கு மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை. எங்களது இலக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றுவதில்லை. அம்பேத்கர், பெரியார் கனவுகளை நன வாக்குவதுதான்.

அகில இந்திய அளவில் அம்பேத்கர் பேரை சொல்லி கட்சி நடத்தும் கட்சிகளில் பிஜேபியை எதிர்க்கும் ஒரே கட்சி விடுதலைச்சிறுத்தைகள் கட்சிதான். டிடிவி தினகரன் தொடர்புடைய 187 இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப் பட்டது அவரை பயமுறுத்துவதற்காக அல்ல. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பயமுறுத்துவதற்காகத்தான். கலைஞரை மோடி சந்தித்ததை தொடர்ந்து டிடிவி தினகரனும், எடப்பாடி பழனி சாமியும் இணைந்துவிடக்கூடாது என்பதற் காகத்தான் இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மண்டல கழக தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன் மாவட்ட தலைவர் கடவாசல் ஆ.ச.குணசேகரன் மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் மாவட்ட அமைப்பாளர் நா.சாமிநாதன் ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், குத் தாலம் ஒன்றிய துணைத் தலைவர் அ.முத்தையன் செயலாளர்   ம.பாலசுந்தரம், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரெங்கன், சீர்காழி சபாபதி,  மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஞான.வள்ளுவன் செயலாளர் அ.சாமி துரை, செம்பை பகுதி அமைப்பாளர் எம்.ஜீவன்ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.அருள்தாஸ், மாணவரணி தலைவர் மூ.முகில்வேந்தன், செயலாளர் ச.மதியழகன், பி.எம்.ஜி.மணிவேல், முருக மங்கலம் இளங்கோவன், இளைஞரணி தோழர்கள் அ.விடுதலைராஜா, ரா.பிரவின்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner