எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ. 19- சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மறைவுற்ற இரா.மோகனின் படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார்.

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (விஹியி) பொதுச் செயலாளராகவும், தினகரன் நாளிதழின் மூத்த செய்தியாள ராகவும் பணியாற்றி வந்த பத் திரிகையாளர்களின் போர்க்குரல் நினைவில் வாழும் இரா.மோகன் அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வு நேற்று (18.11.2017) மாலை 4.30 மணிக்கு சென்னை லயோலா கல்லூரி பெர்ட்ரம் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பத்திரிகை யாளர் பகவான்சிங் தலைமை வகித்தார். நக்கீரன் கோபால், தீக்கதிர் பாலு ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

பத்திரிகையாளர்களின் போர்க்குரல் இரா.மோகன் அவர்களின் படத்தை தி இந்து என்.ராம், தினகரன் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தினமணி கே. வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி, தமாகா மூத்த தலை வர் ஞானதேசிகன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதயதுல்லா, மதிமுக துணைப் பொதுச் செய லாளர் மல்லை சத்யா, மனித நேய மக்கள் கட்சியின் தலை வர் ஜவாஹிருல்லா, பத்திரிகை யாளர்கள் மாலன், பார்த்திபன், சண்முக சுந்தரம் மு.குணசேக ரன், தீக்கதிர் குமரேசன், கவாஸ் கர், திருவேங்கி சரவணன், கார்த்திகை செல்வன், ஈவெரா, ரங்கராஜன், கார்ட்டூனிஸ்ட் பாலா, சிந்து பாஸ்கர், இயக் குநர் வ.கவுதமன், அருண்ராம், கே.அசோகன், மணிகண்டன், பா.சிவக்குமார், சகாயராஜ், வி.இங்கர்சால், ஜேம்ஸ், பிரபு தாசன் மற்றும் பல்வேறு பத்தி ரிகை சங்க நிர்வாகிகள், செய்தி வாசிப்பாளர்கள் புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்று நினை வேந்தலை தெரிவித்தனர்.

இந்நிகழ்வை சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பீர்முகமது, துணைத் தலைவர்கள் வே.சிறீதர், இ. முருகேசன், இணை செயலாளர் எல்.ஆர்.சங்கர், பொருளாளர் வி.மணிமாறன், நிர்வாககுழு உறுப்பினர்கள் ஜே.வி.கே. வேதன், சே.கார்த்திகேயன், ஜி.சசிரேகா, ஆர்.என்.ஆனந்த், எம்.அய்யனார் ராஜன், எஸ். பிருந்தா, கே.அண்ணாமலை ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.

இந்நிகழ்வில் பத்திரிகையா ளர்களின் போர்க்குரல் மறை வுற்ற இரா.மோகன் அவர்களின் தாய், தந்தை, மனைவி, மகன் கள் மற்றும் குடும்பத்தினர் பங் கேற்று ஆறுதல் பெற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner