எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ.28  சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க.வே வெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு, இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கே திராவிடர் கழகத்தின் ஆதரவு என்று  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிக்கை (27.11.2017) வெளியிட்டார்.

இன்று (28.11.2017) காலை தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் பெரியார் திடலுக்கு வருகை தந்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து நன்றியைத் தெரிவித்தார்கள்.

தமிழர் தலைவர் பேட்டி

அப்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:

மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது. எந்த அளவுக்கு கள்ள வாக்குப் பதிவுகளையெல்லாம்  தடுக்க முடியுமோ, அதற்காக வாக்காளர் பட்டியலிலே 45ஆயிரம் வாக்காளர்கள் போலி வாக்காளர்கள் என்பதைக் கண்டறிந்து, தி.மு.கழகத்தினுடைய   தோழர்கள் இடையறாது அந்த முயற்சியை எடுத்து செய்திருப்பது, இந்திய தேர்தல் வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கும். அந்த வகையிலும் ஆர்.கே.நகர் முன்னோட்டமாகத்தான் இருக்கிறது. எனவே, அடுத்து உதயசூரியன் உதிப்பான். அதுமட்டுமல்ல, மற்றதுக்கும் இந்த ஆர்.கே.நகர்தான் முன்னோடியாக அமையும்.  எனவே, வெற்றி வேட்பாளருக்கு அனை வரின் சார்பாக அன்பான வாழ்த்துகள்.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  குறிப்பிட்டார்.

திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம்,  வழக்குரைஞர் கிரிராஜன், மாதவரம் எஸ். சுதர்சனம் உள்ளிட்டவர்கள் உடனி ருந்தனர்.