எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, டிச. 3- ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ம.தி.மு.க. வின் நிலை குறித்து ஆலோ சிப்பதற்காக அந்த கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் எழும்பூரில் உள்ள தாயகத்தில் இன்று (3.12.2017) காலை நடந்தது.

கூட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருது கணேசை ஆதரிப்பது என முடிவு செய் யப்பட்டு உள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூட்டம் முடிந்ததும் வைகோ வெளியிட்டார்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் மூலம் மத்திய பாஜக அரசுக்கு பாடம் புகட்டவே திமுகவுக்கு ஆதரவு என பேசிய வைகோ, அதிமுக, பா.ஜனதா அரசின் மீது சர மாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner