எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, டிச. 4-  திமுக செயல் தலை வரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான தளபதி மு.க. ஸ்டாலினை, சர்வதேச மாற்றுத் திறனா ளிகள் நாளினை முன்னிட்டு, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் மற்றும் அட்சயா மாற்றுத் திற னாளிகள் முன்னேற்றச் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த 300க்கும் மேற் பட்ட மாற்றுத் திறனாளிகள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது மாற்றுத் திறனாளிகளுக் கான சக்கர நாற்காலிகள், தையல் இயந் திரங்கள் மற்றும் உடைகள் ஆகிய நிவா ரண உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங் கினார். தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

கேள்வி: ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில் பல கட்சியினர் திமுகவுக்கு ஆத ரவளித்து வருகிறார்களே?

பதில்: தமிழகத்தில் கடந்த ஆறாண் டுகளாக, குறிப்பாக முன்னாள் முதல் வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, நடைபெற்று வரும் எடப்பாடி தலை மையிலான ஆட்சியை பொறுத்த வரையில் விவசாயம், தொழில்துறை, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளும் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு, அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடமானம் வைக்கக்கூடிய அடிமைத்தனமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நமது வாழ்வாதார உரிமைகள் எல்லாவற்றையும் பறிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் நடக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங் கட்சியை வீழ்த்த வேண்டும், இந்த ஆட் சிக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற உணர்வுடன் பல கட்சிகள் இன் றைக்கு திமுகவுக்கு ஆதரவு தந்து வரு கின்றன.

கேள்வி: நீண்ட காலத்துக்குப் பிறகு மதிமுக, திமுகவுடன் கூட்டணியில் இணைவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: இப்போது இணைந்திருப்ப தற்கான காரணத்தை அவர் தெளிவா கவே குறிப்பிட்டுள்ளார். அதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன். இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எல்லா கட்சிகளும் ஒருங்கிணையும் இந்த நேரத்தில் மதிமுகவும் அதில் தனது பங்கை செலுத்தும் வகையில் இணைந் திருப்பது, உள்ளபடியே பாராட்டுக்குரி யது. அதனை வரவேற்று மகிழ்ச்சியடை கிறேன்.

கேள்வி: புயல் குறித்து இந்த அரசு உரிய முன்னறிவிப்பு எதையும் வெளியிடவில்லை, அதனால் கடலுக்குள் மீனவர்கள் சென்று சிக்கியுள்ளதாக கன்னியாகுமரி மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்களே?

பதில்: இதுகுறித்து ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டு இருக்கி றேன். ஒரு மாவட்டம் முழுதாக பாதிக் கக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டும் அதுபற்றி கவலைப் படாமல் முதல்வர் எடப்பாடி பழனி சாமி உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆடம்பரமான கட்-அவுட்கள், பேனர்கள் வைத்து, மக்களுடைய வரிப்பணத்தை பாழடிக்கும் வகையில் விழா எடுத்துக் கொண்டிருக்கிறார். உடனடியாக விழாக் களை எல்லாம் ரத்து செய்துவிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறை யில் நான் கன்னியாகுமரி மாவட்டத் துக்கு செல்கிறேன். அங்குள்ள 6 சட்ட மன்ற தொகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களை சந்திக்கவிருக்கிறேன்.

கேள்வி: இடைத்தேர்தலுக்கு அமைந் துள்ள கூட்டணி சட்டமன்ற, நாடாளு மன்ற தேர்தல் வரை தொடருமா?

பதில்: இன்றைக்கு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக அவர்கள் ஆதரவளித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலின்போது அந்த தேர்தலுக்கான கூட்டணி பற்றி பேசி முடிவெடுக்கப் படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner