எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சேலம், டிச.15 இந்திய யூனியன் வங்கி பிற் படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் பொறுப்பாளர்கள் கோ.கருணாநிதி, ஞா.மலர்க்கொடி, டி.ரவிக்குமார், பி.சதீஷ்குமார், எஸ்.குருநாதன் ஆகியோர் சேலம் பிராந்தியத்தில் உள்ள யூனியன் வங்கியின் சில கிளைகளுக்குச் சென்றனர். நல சங்க உறுப் பினர்கள் எம்.அலெக்சாண்டர், ஏ.எம்.சரத், டி.எஸ்.சிறீபிரசாத் (பாலக்கோடு கிளை), என்.மலர் மன்னன், டி.ரங்கீலா, சந்தோஷ் (கரியாமங்கலம் கிளை), ஆர்.சார்லஸ். டி.விஜயகுமார் (ஊற்றங் கரை), பி.உமா மகேஸ்வரி, கார்த்திக் (அரூர் கிளை) எஸ்.உமாராணி (தர்மபுரி கிளை) ஆகியோரை சந்தித்து, நமது நல சங்க நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. அரூர் கிளையில்கார்த்திக், நல சங்க உறுப்பினராக படிவம் தந்து சேர்ந்தார். தர்மபுரியில், சீரிய பகுத்தறிவாளரும், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினருமான மருத்துவர் இரா.செந்தில் அவர்களைச் சந்தித்து, "69% இடஒதுக்கீடு சட்டம்,ஏன்? எப்படி? எவரால்?" எனும் நூல் அளிக்கப்பட்டது. யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்க பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.