எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, டிச.18  சென்னை பெருங்குடி ஏரியை ஆக்கிரமித்து சட்ட விரோத கோயில்கள் கட்டப்பட்டுள்ளதால், பெருங் குடி ஏரியில் நீர்நிலை மாசுகேடுகள், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள், சுற்று சூழல் ஆபத்துகள் மலிந்து வருகின்றன.

சென்னை பெருங்குடி ஏரிப்பகுதியில் முத லில் உடைந்த செங்கற்கள் கொட்டப்பட்டு சேறுகளால் மறைக்கப்பட்டிருந்தன. இரண்டு மாதங்களில் உடைந்த செங்கற்கள் குவியல் கோயிலாக உருப்பெறுகிறது. சிமெண்ட் தரையும், ஆஸ்பெஸ்டாஸ் கூரை யும் அமைக்கப்பட்டன. சாம்பல் மற்றும் சந்தன கலவைகொண்டு செங்கற்கள்மீது பூசப்பட்டு, திரிசூலமும் நடப்பட்டுள்ளது.

57 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலைப் பகுதியான பெருங்குடி ஏரியையொட்டிய பகுதிகளாக காமராஜ் நகர், குறிஞ்சி நகர், டெலிபோன் நகர் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன.

தற்போது அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத கோயிலுடன் ஏற்கெனவே இரண்டு சட்ட விரோத கோயில்கள் பெருங்குடி ஏரியில் உள்ளன. இந்த சட்ட விரோத கோயில்களையடுத்து, குப்பைகள் பெருங் குடி ஏரிப்பகுதி முழுவதும் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன.

அப்பகு வாழ் மக்களின் கூட்டமைப் பாக பெருங்குடி ஏரிப்பகுதி சுற்று சூழல் மாற்றத்துக்கான சங்கம் (Perungudi Lake Area Neighbourhood Environmental Transformation (Planet) association)
செயல்பட்டு வருகிறது. மரக்கன்றுகள் நடுதல், குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்துதல் என்று அரசு செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் அவ்வமைப்பின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெருங் குடி ஏரி பாழாக்கப்படுவதிலிருந்து கண் காணிப்பதற்கான முயற்சிகளை எடுத்து, ஏரிப்பகுதியைப் பாதுகாப்பது என்பது மிகவும் கவலையளிக்கக்கூடியதாக இருப்ப தாக அவ்வமைப்பைச் சேர்ந்த பாலமுருகன் கூறுகிறார்.

பெருங்குடி ஏரியில் அமைக்கப்பட்டுள்ள கோயில்களின்புரவலர்களாகஅப்பகுதியில் உள்ள ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் உள் ளனர் என்றும், ஏரியோ பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளதாகும் என்றும் வேத னையுடன் அப்பகுதிவாழ்மக்கள் தெரி விக்கின்றனர்.

வர்தா புயலின்போது பெருங்குடி ஏரியின் மேற்குப்பகுதி சுற்று சுவர் சேதமடைந்தது. சுற்று சுவரையொட்டிய நடைபாதையும் சேதமானது. பராமரிப்பு, கண்காணிப்பு போதிய அளவில் இல்லாததால், அப்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது என்கின்றனர்.

பலமுறை முறையிட்டும்

பலன் ஏதும் ஏற்படவில்லை

பணியிலிருந்து ஓய்வு பெற்ற அலுவலர் ஒருவர் குறிப்பிடும்போது, “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஏரி சுற்று சுவர் கட்டுவதற்காக ஒரு கோடிக்கும் மேலாக நிதி ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து பொதுப் பணித்துறையிடமும், சென்னை மாநகராட்சி அலுவலர்களிடமும் பொது மக்கள் பலமுறை முறையிட்டும் பலன் ஏதும் ஏற்படவில்லை’’ என்றார்.

சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கூறுகையில், பெருங் குடி ஏரிப்பகுதியை அளவியல் துறையினரைக் கொண்டுமுழுமையாகஅளக்கவேண் டும் என்று வட்டாட்சியரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.