எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, டிச.18 ‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் நாள் தமிழகத்தில் எந்நாளோ’’ என்ற தலைப்பில் கருத் தரங்கம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக் குழு சார்பில் சனிக் கிழமையன்று (டிச.16) சென்னை கேரள சமாஜத்தில் நடைபெற்றது.

கேரள மாநிலத்தின் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேசு கையில்,

சுற்றுச்சூழல், பொது சுகாதாரம் காப்பதில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு சர்வதேச நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. கேரள மாநிலத்தின் இறப்பு விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, கல்வி, அறிவியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை நோக்கி வேகமாக நகர்கிறது என்றார். ஜாதிய ஒடுக்குமுறை உச்சத்தில் இருந்தபோது சுவாமி விவேகானந்தர் கேரளா ஒரு பைத்தியக்கார நாடு என விமர்சித்தார்.

ஆனால், 60 ஆண்டுகளில் அதை மாற்றிக்காட்டியது இடது ஜனநாயக முன்னணி அரசு என்றால் மிகையாகாது. இந்தப் புரட்சிகர மாற்றம் ஏதோ பெயர்ப் பலகை வைத்து மாற்றியதல்ல, சமூகத்தில் இடதுசாரிகளின் அளப்பரிய பணியால் கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சபரி மலைக்கு அனைத்துத்தரப்பு பெண்களும் யாத்திரை மேற் கொள்ளலாம் என்ற உரிமையை இடது ஜனநாயக முன் னணி அரசு வழங்கியுள்ளது. கோயில் களில் பெண்கள் சுடிதார் அணியக்கூடாது என்பதை ஏற்கவில்லை. சுடிதாரும் பெண்களுக்குப் பாதுகாப்பான உடை தான் என அமைச்சர் கூறினார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு பாதிக்காமல் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பி னருக்கும் சலுகைகள் வழங்கவும், சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்களின்வாரிசுகளை ஜாதி யற்றவர்கள்என்ற பட்டியலில்வைத்து சலுகைகள் வழங்கவும் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

முதல் மாநிலம்!

இந்தியாவிலேயே சமூகநீதியைக் கடைப்பிடிக்கும் முதன்மை மாநிலமாக கேரளாவை மாற்றுவதே எங்கள் நோக்கமாகும். வைக்கம் மண்ணில் ஜாதிய வன்கொடுமைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பெரியாரின் வழிவந்தவர்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரால்தான்மதுரை உத்த புரத்தில் ஜாதிச் சுவற்றை தகர்க்கமுடிந்தது என்றும்தெரிவித்தார்.கால் நடைகளை விட கீழ்த்தரமாக கருதப்பட்ட தலித் மக்களை தீண்டாமைக் கொடுமை யிலிருந்து முழுமையாக விடுவித்தது இடது ஜனநாயக முன்னணி அரசு.

பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய தலித் மக்களை முன்னேற்றும் கடமையை கேரள அரசு செவ்வனே செய்து வருகிறது. கருவறை தீண்டாமை ஒழிப்புக்கு இந்தியாவிற்கு கேரளம் வழிகாட்டுகிறது என்று கூறிய சுரேந் திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக விளங் குகிறது என்றும் கூறினார்.

அறியாமை நுழையக்கூடாது! டாக்டர் சொக்கலிங்கம்

50 ஆண்டுகளாக இதய சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சேவை செய்து வரும் நானும், மறைந்த அப்துல்கலாமும் இணைந்து மாணவர்களின் அறிவுத்திறன், உடல்திறன் மேம்பாட்டை வலியுறுத்தி பல கூட்டங்களில் பேசியுள்ளோம். ஆமை புகுந்த வீடு விளங்காது என கூறு வதுதவறான கூற்றாகும். இல்லாமை, கல்லாமை, அறியாமைதான் வீட்டில் நுழையக்கூடாது என்றார்.

மிரட்டும் இந்துமத அமைப்புகள்!

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் வா.அரங்கநாதன், அர்ச்சகராகஇருப்பவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு, மீசை வைக்கத் தடை விதிப்பு, ஆகமவிதி என்ற பெயரில் பார்ப்பனர் அல்லாதவர்களை புறந் தள்ளும் போக்கு நடைபெறுகிறது.

பிற ஜாதியினர்க்கு வேத மந்திரம் சொல்லிக்கொடுக்க ஆசிரியர்கள் வருவ தில்லை. தென்னிந்திய பார்ப்பனர் சங்கத்தினர் எங்கள் மாணவர்களுக்கு வேதம் சொல்லிக்கொடுக்கக் கூடாது என தீர்மானம் போட்டுள்ளனர். ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்பினர் எங்களைத் தாக்குகின்றனர். இதைத் தட்டிக்கேட்ட என்னை கொலை செய்ய முயற்சி செய்தனர். இதனால் இந்து அடையாளத்தைத் துறந்தேன். கோயில் கருவறை குறித்து காவல்துறையும், அரசும் மவுனம் காக்கிறது. மாற்றங்கள் நீதிமன்றத் தீர்ப்பால் வருவதைவிட அர சாணையாக வருவதே நல்லது என்றார்.

கேரள அரசுக்கு பாராட்டு!

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி உரையாற்றுகையில், கேரளாவில் பிற ஜாதி ஆண்கள்அர்ச்சகரானதுபோல் பெண்களையும் அர்ச்சகராக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை என்று கூறிய அவர், இளம்பெண்கள் சபரிமலைக்கு செல்லக் கூடாது என்று கூறும் இந்து மதக் கட்டளையை உடைத்த இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு நன்றியை தெரிவித்தார்.

திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன், ஜாதி, மதவெறி உணர்வுஆன்மீக ரீதியில் பிணைக்கப்பட்டுள்ளது. இதனை அறிவுசார் கொள்கையால்தான் மாற்ற முடியும்.

தொழில் முறை ஜாதிய கட்டமைப்பு நொறுக்கப்பட்டால்தான் முழு விடுதலை பெற முடியும் என்றார்.

இந்தக் கருத்தரங்கிற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்டத் தலைவர் சு.பால்சாமி வர வேற்றார். செயலாளர் வி.ஜானகிராமன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், பா.பாரதி அண்ணா உள்ளிட்ட பலர் பேசினர்.

நினைவுப் பரிசாக

பெரியார் சிலை!

கேரள மாநில அமைச்சர் சுரேந்தி ரனுக்கு அழகிய உலோகத்திலான பெரியார் சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. நிறைவாக தென் சென்னை மாவட்டச் செயலாளர் சுந்தரம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner