எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை நேற்றிரவு (21.12.2017) 8.30 மணியளவில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் அவர்கள் இல்லத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார். 2ஜி வழக்கில் வெற்றி பெற்றதற்காக மகிழ்வின் அடையாளமாக சால்வையும் அணிவித்தார்.

‘வெற்றி விழாப் பொதுக்கூட்டத்திற்குப் போகலாமா - வாருங்கள்’ என்று கழகத் தலைவர் கேட்டபோது, கலைஞர் அவர்கள் மகிழ்ச்சி பூரித்திட - ‘‘எப்போ?’’ என்று கேட்டது அனை வருக்கும் பெருமகிழ்ச்சியைத் தந்தது!

கலைஞர் அவர்களின் உதவியாளர் சண்முகநாதன் அவர்கள், ‘விடுதலை’யில் ஆசிரியர் வெளியிட்ட கருத்தினை உரத்த குரலில் படித்துக் காட்டியதை, உன்னிப்பாகக் கேட்டு மகிழ்ந்தார் கலைஞர்.

கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.  கவிஞர் வைரமுத்து அவர்களும் கலைஞருக்குச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். முன்னதாக தயாளு அம்மையார் அவர்களைக் கண்டு நலம் விசாரித்தார் ஆசிரியர். மு.க.தமிழரசு, செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner