எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, ஜன. 19 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்ப்பண்பாட்டு மய்யம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சியை 11.1.2018 அன்று பிற்பகல் 3 மணிக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கின் உள்கருத்தரங்க அறையில் நடத்தியது.

அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை யேற்று உரையாற்றுகையில், நமது கலாச்சாரமும், பண்பாடும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற் காகவே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில், அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மய்யம் துவங்கப்பட்டு அருங்காட்சியகமும் அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்கள் நமது கலாச்சாரத்தையும் பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடியும். தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை மாணவர்கள் அனை வருக்கும் உண்டு எனத் தெரிவித்தார்.

மகிழ்ச்சி பொங்கட்டும்

தேவகோட்டை ச.மகாராஜன் மகிழ்ச்சி பொங்கட்டும் என்ற தலைப்பில் சிறப்புச்சொற்பொழிவாற்றினார். அவர் தமது உரையில், நமது வாழ்க்கை முறையில் உணவு, உடை, நடை ஆகிய அனைத்தும் மாறிக் கொண்டே வருகிறது. சமுதாயம் எவ்வளவு மாறினாலும் நாம் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் போற்ற வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பையும், நட்புணர்வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் ஆண்டுதோறும் கொண்டாடி வரும் பொங்கல் பண்டிகை நம் வாழ்க்கையோடு ஒன்றிய கால்நடைகளை போற்றும் விழாவாகும். நமது கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய கடமை இளைஞர்களுக்கு உரியதாகும்.

முன்னதாக, பேரா. ஹா. குருமல்லேஷ் பிரபு, பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம் வாழ்த்துரை வழங்கினார்.

முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை, இயக்குநர், தமிழ்ப்பண்பாட்டு மய்யம் அனைவரையும் வரவேற் றார். முனைவர் சு. இராசாராம், ஒருங்கிணைப்பாளர், நாட்டு நலப்பணித்திட்டம் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner