எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜன.20 திராவிடர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா கழகத் தோழர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

விவரம் வருமாறு:

அரும்பாக்கம்

14.1.2018 முற்பகல் 11 மணி அளவில் அரும்பாக்கம் பெரியார் நெடுஞ்சாலையில் தென்சென்னை மாவட்ட துணைச்செயலாளர் சா.தாமோதரன் தலைமையில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா நடை பெற்றது.

மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிட முன்னேற்றக் கழக 105ஆவது வட்ட செய லாளர் அதியமான் விழாவை தொடங்கி வைத்தார். இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டது.

மாவட்ட துணைச்செயலாளர் கோ.வீ.ராகவன், க. தமிழ்செல்வன், க.பாலமுரளி, மு.டில்லிபாபு, க.திருச் செல்வம், த.அண்ணாதுரை, எம்.பிரகாசம், ஏ.சுந்தர், கு.பா.அறிவழகன், பா.கவுதம் சித்தார்த்தன், ந.அதியமான் (தி.மு.க.) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோயம்பேடு

14.1.2018 முற்பகல் 11.45 மணி அளவில் தென் சென்னை கோயம்பேடு பகுதியில் திராவிடர் கழகமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களும் இணைந்து தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழா தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி  கொண்டாடப்பட்டது.

திருவாரூர்

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு திருவாரூரில் தந்தை பெரியார் சிலைக்கு மாநில விவசாய அணி செயலாளர் மோகன் தலைமை யில் மாவட்ட துணைத் தலைவர் அருண்காந்தி மாலை அணிவித்தார். மாவட்ட செயலர் காமராஜ், நகரத்  தலைவர் மனோகரன், முனியாண்டி, பெல் வரதராஜன், ராஜேந்திரன், கோவிந்தராஜ் தமிழ்நேயன், ராஜமணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குன்னூர்

நீலமலை மாவட்டம் குன்னூரில் திராவிடர் கழக பொருளாளர் மருத்துவர் பிறைநுதற்செல்வி தலைமை யில் பொங்கல் விழா மற்றும் காணும் பொங்கல் விழா   பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன்  மிகச் சிறப் பாக நடைபெற்றது.

கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரியார் பிஞ்சுகள்   நடனம், பேச்சுப் போட்டி,கவிதைப்போட்டி  என தங்களது திறமைகளை  மிகச் சிறப்பாக வெளிப் படுத்தினர். நடன நிகழ்ச்சியின்போது பகுத்தறிவாளர் கழக தலைவர். இரா. கவுதமன் அவர்களின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. இறுதியாக  பொருளாளர் மருத்துவர் பிறைநுதற்செல்வி அவர்கள் பொங்கலின் சிறப்பை எடுத்துக்கூறினார். இளைஞரணி தலைவர் சத்தியநாதன் அவர்கள் நன்றி கூறினார்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா 14.1.2018 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி கொம்பாக் கத்தில் உள்ள பொறியாளர் த.சக்திவேல் தோட்டத்தில் பெற்றோ இல்லத்தில் நடைபெற்றது.

பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை பொறி யாளர் சக்திவேல் சிறப்பாக செய்திருந்தார். மகளிரணி தோழியர் சித்ரா தேவி சக்திவேல், மகளிரணி தலைவர் எழிலரசி அறிவழகன் ஆகியோர் பொங்கலிட்டனர். பொங்கல் விழா தமிழர் புத்தாண்டு பற்றிய சிறப்பு களை செயலாளர் கி.அறிவழகன், புதுச்சேரி உள்ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் புதுவை மு.ந.நடராசன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர் இரஞ்சித்குமார், புதுச்சேரி நகராட்சி கழக அமைப்பாளர் மு.குப்புசாமி, பொறியாளர் த.சக்திவேல், உழவர்கரை நகராட்சி கழக தலைவர் சு.துளசிராமன் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக பெரியார் பெருந்தொண்டர் காரை பெரியார் முரசு அவர்கள் மந்திரமா? தந்திரமா? எனும் அறிவியல் விளக்க நிகழ்வை செய்து காட்டினார்.

பொங்கல் விழாவில் பொறியாளர் சக்திவேல் அவர்களின் தந்தையார் மறைந்த கே.தட்சிணாமூர்த்தி அவர்களின் 75ஆவது பிறந்தநாளையொட்டி 75 பேருக்கு (அவரிடம் வேலை செய்த ஊழியர்கள்) புடவைகள் மற்றும் ஆயத்த ஆடைகளை சக்திவேலின் துணைவியார் சித்ராதேவி, மண்டல செயலாளர் கி.அறிவழகன், ஆடிட்டர் இரஞ்சித்குமார் மற்றும் ப.க.துணைத் தலைவர் மு.ந.நடராசன் ஆகியோர் வழங்கினர்.

பொங்கல் விழாவின் ஊடே மேலும் ஒரு சிறப்பாக ஓய்வு பெற்ற தமிழக அரசின் கல்வித்துறை அலுவலர் பெரியார் பெருந்தொண்டர் அரியூர் கே.வி.இராசன் அவர்களின் 81 ஆவது பிறந்த நாள் விழா கொண் டாடப்பட்டது. கே.வி.இராசன் துணைவியார் லலிதா இராசன், மண்டல செயலாளர் கி.அறிவழகன், பகுத் தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.ந.நடராசன், புதுச்சேரி ப.க. தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார், ப.க. அமைப்பாளர் கோ.கிருஷ்ணராசு, பொறியாளர் த.சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் கே.வி.இராசன் கேக் வெட்டினார். கழக தோழர்கள் தலைவர் தந்தை பெரியார் வாழ்க! கே.வி.இராசன் வாழ்க! என முழக்கமிட்டனர். நிகழ்வில் கலந்துகொண்ட கழக பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் கேக், பொங்கல் மற்றும் மிக்சர், பிஸ்கட் ஆகியவைகள் வழங்கப்பட்டன.கே.வி.இராசனை பாராட்டி மண்டல செயலாளர் அறிவழகன் வாழ்த்துரையாற்றினார். கழக பொறுப்பாளர்கள் சால்வைகள், பயனாடைகள் அணி வித்து வாழ்த்துக்களை பரிமாறினர். இறுதியாக கே.வி.இராசன் அவர்கள் ஏற்புரையாற்றினார். இறுதி யாக கழக இளைஞரணி தலைவர் திராவிட இராசா நன்றி கூறினார். பொங்கல் விழாவையொட்டி கழக கொடிகள் தெருவெங்கும் நடப்பட்டிருந்தது சிறப்பாக அமைந்திருந்தது.

பொங்கல் விழா நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த பொறியாளர் த.சக்திவேல், மு.ந.நடராசன் அவர்களால் சால்வை அணிவித்து பாராட்டப்பட்டார். விழாவில் கொம்பாக்கம் ஊர் தலைவர் பெ.சத்திய மூர்த்தி, புதுச்சேரி திராவிடர் கழக அமைப்பாளர் கே.குமார், உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன், பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் செ.கா.பாஷா, பிலால் உணவகம் முகமது நிஜாம், கலைவாணர் நகர் களஞ்சியம் வெங்கடேசன், இளை ஞரணி துணை தலைவர் இரா.சுந்தர், புதுச்சேரி நகராட்சி கழக செயலாளர் த.கண்ணன், புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழகம் வெற்றிவேல், கொம்பாக்கம் சிவராமன், அருண்குமார், திராவிடர் கழக மகளிரணி தோழியர்கள் கல்பனா துளசிராமன், விமலா சிவராமன், யாஸ்மின் பாஷா, பவித்ரா சிவராமன், பெரியார் பிஞ்சுகள் சத் தியபாரதி, சித்தார்த், மணிபாரதி, கு.ஈழவன், கு.இனி யவன், கி.இரா.பிரபாகரன், பா.கரிஷ்மா பானு, சர்மிளா பானு மற்றும் திரளான ஊர்மக்கள் கலந்து கொண்டனர். கிராம பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழா அனைவரையும் கவர்ந்தது.

பொங்கல் விழா தமிழ்ப்புத்தாண்டு குறித்த துண்ட றிக்கைகளை  புதுவை மு.ந.நடராசன் அனைவருக்கும் வழங்கினார்.

நெல்லை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார் (18.1.2018)

அண்ணங்காரன்பேட்டை சட்டஎரிப்பு வீரர் கிருட்டிணசாமி படத்திறப்பு

தா.பழூர், ஜன. 20 அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் அண்ணங்காரன் பேட்டை சட்டஎரிப்புப் போராட்டத் தில் சிறை சென்ற பெரியார் பெருந் தொண்டர் கிருட்டிணசாமி அவர் களின் படத்திறப்பு 6.1.2018 அன்று காலை 11 மணியளவில் நடை பெற்றது.

மண்டல தலைவர் சி.காமராஜ் தலைமையேற்க ஒன்றிய தலைவர் சொ.மகாலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன், கடலூர் மாவட்ட செயலாளர் நா.தாமோத ரன், அரியலூர் மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தா.பழூர் ஒன்றிய திமுக செயலாளர் க.சொ.க. கண்ணன் இரங்கலுரையாற்றிய பின் னர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சட்ட எரிப்புப் போராட்டம் கழகத் தொண் டர்களின் தியாகம் ஆகியவற்றை விளக்கி நினைவுரையாற்றினார். தா.பழூர் ஆசிரியர் இராசேந்திரன், கோடங்குடி இரவி, சி.தமிழ்சேகரன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.கலிய மூர்த்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்ற னர்.