எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மதுரை,  ஜன. 21-  மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் 6 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்த னர்.

தமிழகம் முழுவதும் பேருந்து கட்ட ணம் உயர்த்தப்பட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. இதனால் அனைத்து தரப்பினரும் அதிருப்தி அடைந்தனர். இதனால் வெளியூர்களில் இருந்து இரவு பயணம் மேற்கொண்டவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் இந்த திடீர் கட்டண உயர்வால் ஆத்திர மடைந்த பயணிகள் சிலர் பெரியார் பேருந்து நிலையத்தில் நடத்துநர் மற் றும் ஓட்டுநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சிலர் பெரியார் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அருகே அமர்ந்து பேருந்துகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தில் வாகனங்கள் நகர முடி யாமல் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டது.

இதையடுத்து பேருந்து ஓட்டுநர் களுக்கும், நடத்துநர்களுக்கும் அங்கே இருந்த பொதுமக்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி யதையடுத்து பொதுமக்களுக்கும், போக் குவரத்து ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தின் அருகேயும், கட்ட பொம்மன் சிலை அருகேயும் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போராட்டக்காரர்கள் தமிழக அர சுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி னர். இதையடுத்து காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினர்.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடு பட்ட சிலரை  காவல்துறையினர் வலுக் கட்டாயமாக அங்கிருந்து அப்புறப் படுத்த முயன்றனர். இதையடுத்து மறி யலில் ஈடுபட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 6 பேரை  காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner