எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 23- நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை செலவழித்து பல்வேறு வசதிகளை செய்ய தத்து எடுத்த கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்துக்கு தன்னிடம் உள்ள 500 புத்தகங்களை கனிமொழி எம்.பி. நன்கொடையாக வழங் கினார்.

கனிமொழி எம்.பி. உடன டியாக தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள சிறீவெங்கடேஷ்வரபுரம் கிராமத்தை தத்து எடுத்தார். கடந்த 3 ஆண்டுகளாக அந்த கிராமத்துக்கு தேவையான பல அடிப்படை வசதிகளை செய் தார். சில மாதங்களுக்கு முன்பு 68 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஒரு குளம் தூர்வாருவதற்கு நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து இல்லாமல், தன் சொந்த பணத்தில் இருந்தும், பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டியும் பணிகள் மேற் கொள்ள ஏற்பாடு செய்தார்.

ஆசீர்வாதபுரத்தில் உள்ள டி.டி.டி.ஏ. குருகால்பேரி மேல் நிலைப் பள்ளிக்கூடத்துக்கு தன் னிடம் உள்ள 500 புத்தகங்களை நன்கொடையாக அளித்தார்.

இந்த பள்ளிக்கூட ஆட்சி மன்ற உறுப்பினர் பி.ஸ்டா லின், உடற்கல்வி ஆசிரியர் ஏ.பொன்னையா சாமுவேல் ஆகியோர் இந்த புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்.

நிச்சயமாக எனது பதவி காலத்தில் சிறீவெங்கடேஷ்வர புரம் கிராமத்தை அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட ஒரு மாதிரி கிராம மாக உருவாக்கப் பாடுபடுவேன் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.