எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராமேஸ்வரம், ஜன. 27- ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவகத்தில் அவரது தத்ரூப சிலை காட்சியகம் திறக்கப்பட்டது.

ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பு எனுமிடத்தில் உள்ள அப்துல்கலாம் நினைவகத்திற்குள் நான்கு புறத்திலும், 'பொக்ரான் அணுகுண்டு சோதனைக்குபிறகு கலாம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் குழந்தைகளுடன் பேசுவது, அய்.நா.,வில் கலாம் உரையாற்றுவது, கடைசியாக கலாம் பேசிய மேகாலயா ஷில்லாங்க் நிகழ்ச்சியை விளக்கும் சிலைகளை நிறுவி, பணிகள் நடந்தன.

பணி முடிவடைந்த நிலையில் குடியரசு தினமான நேற்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. நேற்றுநினைவகத் தில் அப்துல்கலாம் அண்ணன் முத்துமீரா மரைக்காயர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, கலாம் நினைவகத்தில் மரியாதை செலுத்தி சிலைக் கூடத்தை பார்வையிட்டார். அவருடன் கலாமின் பேரன் ஷக்சலீம் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

மாணவர் அமைப்பு தகவல்

மீண்டும் மெரினா எழுச்சி இயக்கம்

நெல்லை, ஜன. 27- எஸ்எப்அய் மாணவர் அமைப்பின் மாநில செயலாளர் உச்சிமாகாளி நெல்லையில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

அதிமுக அரசு அநியாயமாக உயர்த்திய பேருந்து கட்ட ணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் திரண்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் மீது தடியடி உள்ளிட்ட அச்சுறுத்தல் நட வடிக்கை களில் காவல்துறையினர் ஈடுபடுகின்றனர். தமிழ கம் முழுவதும் வருகிற 29ஆம் தேதி முதல் மாணவர்கள் போராட்டம் தீவிரம டையும். 30ஆம் தேதி சென்னையில், தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாண வர்கள் திரண்டு போராட்டம் நடத்து கின்றனர். மாணவர் களின் கிளர்ச்சி, மற்றொரு மெரினா எழுச்சி இயக்கமாக மாறும். இவ்வாறு கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner