எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆண்டாளைப்பற்றிப் பேசினால் சோடா பாட்டில் வீசுவோம்; கல்லெறிவோம்!

சிறீவில்லிபுத்தூர் ‘ஜீயரின்' ரவுடித்தனப் பேச்சு

விருதுநகர், ஜன 27 கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு எதிரான கண்டன கூட்டத்தில், எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும்,கல் எறியத்தெரியும், என சிறீ வில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பேசியுள்ளார்.

‘தினமணி' நாளிதழ் நடத்திய நிகழ்ச்சியொன்றில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து உரையாற்றினார். அதில், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவரின் கட்டுரையை மேற்கோள் காட்டி பேசினார். அந்த உரையில், வைரமுத்து ஆண் டாள் குறித்து தரமற்ற வார்த்தைகளில் பேசியதாக கூறி, வைரமுத்துவிற்கு எதிராக இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக, ஜீயர் சடகோப ராமானுஜர், வைரமுத்து சிறீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் பேசினார்.

இந்நிலையில், வைரமுத்துவுக்கு எதிராக ஆண் டாள் கோவிலில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் மீண்டும் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது, ‘‘குளத்தூர் பகுதியில் ஆண்டாள் குறித்து 3 ஆம் தேதி ஒருவன் பேசப் போறானாம்; ஏற்கெனவே ஒருத்தன் (வைரமுத்து) ராஜபாளையத்தில் பேசிவிட்டுச் சென்று விட்டான். அதற்கான பலனை அனுபவிக்கிறான். இப்போது குளத்தூரில் பேசப்போகிறானாம்.

சோடா பாட்டில் வீசுவோம்!

குளத்தூரில் மட்டுமல்ல, உலகின் எந்த இடத்திலும் ஆண்டாளைப்பற்றிப் பேசக்கூடாது; எந்த ஒரு இந்துக்கடவுள் குறித்தும் பேசக்கூடாது. இனி யாரும் கடவுள் குறித்து ரோட்டில் மேடை போட்டுப் பேசக் கூடாது. அப்படிப் பேசினால் நாம் அங்கே போகணும். இத்தனை நாள் சாமியார் எல்லாம் சும்மா உட் கார்ந்திருந்தோம். இனிமேல் நாங்களும் கல்லெறிய முடியும், கண்ணாடி உடைப்போம், சோடா பாட்டில் எறிவோம்.

குடியரசு தினம், குடிப்பதற்குத்தான் இருக்கிறது. இன்று 26 ஆம் தேதி, குடியரசு தினம். ஆனால், டாஸ்மாக் கடைகள் திறந்து இருக்கின்றன'' என்றார்.

அப்போது, அருகிலிருந்தவர்கள் உற்சாகமாக சிரித்தனர். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது..

ஜீயரின் இந்த ரவுடித்தனப் பேச்சுக்காக பூணூல் அறுப்புப் போன்ற எண்ணம் இயக்கத் திற்கு அப்பாற்பட்டவர்களிடம் எழுந்தால் என்ன செய்வது என்று கவலைப்பட வேண்டியுள்ளது. வன்முறை இருகூர் உள்ள ஆயுதம் அல்லவா!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner