எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 28 -காஞ்சி சங்கராச் சாரி விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரிய வில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி சாடியுள்ளார்.

சென்னையில் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், நிகழ்ச் சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் பன்வாரிலால் உட்பட அனைவரும் எழுந்து நிற்க, அவர் மட்டும் அமர்ந்திருந்தார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத அவரது செயலுக்கு சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாது அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து நடிகர் விஜய் சேதுபதியும் கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி படைக்கலன் தொழிற்சாலை பொன்விழா ஆண்டு விழா திருவெறும்பூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந் தினராக விஜய் சேதுபதி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், பல்வேறு விசயங்களைப் பற்றிப் பேசினார். அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்துப் பேசுகையில், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது, எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை என்று சாடினார். முன்னதாக. திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் ஆயுத உற்பத்தி விசயத்தில் மத்திய அரசு பாராமுகமாக நடந்து கொள்கிறது என்றும் பாஜக மீது குற்றச்சாட்டு வைத்தார்.