எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான சாலை மறியல் போராட்டம்

எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது

சென்னை. ஜன.29 பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 20ஆம் தேதி உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் நேற்று திடீரென குறைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் நடத்திய போராட்டம் காரணமாகவே குறைக்கப்பட்டது. அதுவும் சிறிதளவு மட்டுமே குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மு.க.ஸ்டாலின் பேரணி

பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை கொளத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணியாக சென்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம் தொடரும்

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறா விட்டால் அடுத்தக் கட்ட போராட்டம் தீவிரமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று கூறினார்.