எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘‘நீட்’’டை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம்-

பிப்ரவரி 5 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில்!

தி.மு.க. செயல் தலைவர் - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் -

இ.யூ.முசுலிம் லீக் - சமூகநீதி இயக்கத் தலைவர்களின் அறிக்கை

சென்னை, பிப்.2 ‘நீட்‘டை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 5 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடை பெறவிருக்கிறது. இது குறித்து  தி.மு.க. செயல் தலைவர்,  ம.தி.மு.க. பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முசுலிம் லீக் மற்றும் சமூகநீதி இயக்கத் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

விவரம் வருமாறு:

தி.மு.க. செயல் தலைவர்

தளபதி மு.க.ஸ்டாலின்

சமூகநீதி கொள்கைக்கு எதிராக “நீட்” தேர்வினை கொண்டு வந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைத்துள்ள மத்திய பா.ஜ.க. அரசு,  மருத்துவ கல்விக்கான நீட் தேர்விலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல், மத்திய - மாநில அரசு உறவுகளுக்கே குந்தகம் விளைவித்து வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கான மசோதா விற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி, கடந்த 27.1.2018 அன்று சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்புக் கலந்துரையாடல் கூட்டத்தில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி;

திராவிடர் கழகத்தின் சார்பில் 5.2.2018 திங்கட்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் “கண்டனப் போராட்டம்“ நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திராவிடர் கழகத்தின் அந்த போராட் டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் பங் கேற்று, அப்போராட்டத்திற்கு வெற்றியைத் தேடித்தர வேண்டுமென கேட்டுக் கொள் கிறேன்.

- இவ்வாறு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

தமிழகத்தில் சமூக நீதிக்காகப் போராடும் அனைத்துக் கட்சிகள் - சமுதாய இயக்கங்கள் ஆகியவற்றின் வற்புறுத்தலால் நீட் தேர்வி லிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசு இரண்டு மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. அதனைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்து அதனை நிறைவேற்றவோ, இதற்காக நாடாளுமன்றத்தில் தங்கள் உறுப்பினர்களை குரல் கொடுக்கச் செய்யவோ ஆளும் அதிமுக எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை.

இந்நிலையில் நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த ஆண்டு நடைபெற உள்ள நுழைவுத் தேர்வில் மாநில கல்வித் திட்ட அடிப்படையில் வினாத் தாள்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், மூன்று நாட்களுக்குப் பிறகு அதனை மறுத்து மத்திய சி.பி.எஸ்.சி. கல்வித் திட்ட அடிப்படையில் வினாத் தாள் அமைக்கப்படும் என்று நடுவண் அரசு  அறிவித்துள்ளது.

ஏற்கெனவே மாநிலப் பட்டியலில் உள்ள கல்வித்துறையை மத்திய அரசு கபளீகரம் செய்துவிட்ட நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் ஒன்றைக் கொண்டுவந்து மேலும் மாநில அரசுகளை அவமதிக்கும் செயலில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளது.

எதிர்வருகிற மே 6 அன்று நீட் தேர்வு நடைபெறுவதாக நாள் குறிக்கப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் கூட்டிய மறுமலர்ச்சி தி.மு.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 05.02.2018 அன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க., முழுமையான ஆதரவை அளிக்கிறது.

கழகத் தோழர்கள், நிர்வாகிகள், குறிப்பாக மாணவர் அணி, மறுமலர்ச்சி மாணவர் மன்ற தோழர்கள் பெருமளவில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இ.யூ.முசுலிம் லீக் தேசியத் தலைவர்

பேரா.காதர் மொய்தீன்

திராவிடர் கழக ஏற்பாட்டில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க கோரும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்களுக்கு மத்திய அரசு - குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி எதிர்வரும் 05.02.2018 திங்கள் காலை 11 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

இம்மறியல் போராட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு ஆதரவு தெரி விப்பதோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட, நகர, பிரைமரி நிர்வாகி களும், முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, இந்திய யூனியன் மகளிர் லீக், சுதந்திர தொழிலாளர் யூனியன் ஆகிய அணிகளின் பொறுப்பாளர்களும் முஸ்லிம் லீகின் ஊழியர்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.

இப்போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஆதரவு அளித்திடுமாறு  அன்புடன் வேண்டுகோள் வைக்கின்றோம்.

இவ்வாறு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பேராயர் எஸ்றா சற்குணம்

நீட் தேர்வை எதிர்த்து வருகின்ற 5.2.2018 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கிறோம்.

இந்திய சமூகநீதி அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டத்தில்கலந்துகொள்ளவிழை கிறோம் என்று இந்திய சமூகநீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் வெளிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள் ளார்.

குறிப்பு: சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெறும்.