எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார் சிலையை உடைத்தால்...

தமிழ்நாடே ஒன்று திரண்டு எதிர்கொள்ளும்!

‘‘முடிந்தால் தொட்டுப் பார்'' - எரிமலையாய்த் தலைவர்கள் எச்சரிக்கை

 

சென்னை, மார்ச் 7 தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று முகநூலில் பதிவு செய்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்து தமிழ்நாட்டின் தலைவர்கள் கொந் தளித்து எழுந்துள்ளனர். பெரியார் சிலையைத் தொட்டுப்பார் பார்க்கலாம், அதன் விளைவு விபரீதமாகும் என்று எச்சரித்துள் ளனர்.

தி.மு.க. செயல் தலைவர்

தளபதி மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டா லின் அவர்களை நேற்று (06.03.2018) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்த அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவ  மாணவியர், சட்டக் கல்லூரியை காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இடம்மாற்றம் செய்யக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (06.03.2018) அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

செய்தியாளர்: திரிபுராவில் லெனின் சிலைகள் அகற்றப் பட்டது போல, தமிழகத்தில் பாஜக ஆட்சி வந்தால் ஈ.வெ.ரா. சிலைகள் அகற்றப்படும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்து இருப்பது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

தளபதி மு.க.ஸ்டாலின்: தந்தை பெரியார் அவர்களின் சிலையை தொட்டுப் பார்க்கும் அளவுக்கு எவருக்கும் தகுதி கிடையாது. பிஜேபியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில், அடிக்கடி இதுபோன்ற கருத்துகளை பேசி வருகிறார். நியாயமாக, அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து என்றார்.

‘‘கைகளை தூள் தூளாக்குவோம்’’

வைகோ எச்சரிக்கை!

பெரியாரின் சிலையை உடைக்க வருபவர்களின் கையை உடைத்து தூள் தூளாக்குவோம் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். ம.தி.மு.க.வின்  26 ஆவது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பிறகு வைகோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திராவிட இயக்கம் வலுவாக இருப்பதால், அதை அடியோடு சிதைக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை பா.ஜ.க. எடுத்து வருகிறது. பா.ஜ.வை சேர்ந்த, பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தால் மொழி பெயர்த்து கூறும் பணியில் ஈடுபட்டுள்ள நபர் தொடர்ந்து பெரியாரை அவமதிக்கும் வகையில் அவரது சிலையை உடைக்க வேண்டும் என்று இழிவாக பேசி வருகிறார். திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதுபோல தமிழகத்தில் ஈ.வெ.ரா. சிலையையும் உடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஜாதிகளை எதிர்த்து போராடிய பெரியாரை ஜாதி வெறி யன் என்று அகங்காரத்தோடு கூறியிருக்கிறார். பெரியாரின் சிலையை இரவு நேரத்தில் கள்ளத்தனமாக வந்து உடைக்க வேண்டாம். இந்திய ராணுவம், தமிழக காவல் துறையினர் உதவியோடு எந்த நாளில் எந்த இடத்தில் சிலையை உடைப்பது என்பதை அறிவித்து விட்டு வர வேண்டும். அந்த இடத்திற்கு நானே நேரில் வருகின்றேன். உடைக்க வருபவர் களின் கையை உடைத்து தூள் தூளாக்குவோம். ம.தி.மு.க.வுக்கு வன்முறை மீது நம்பிக்கை கிடையாது. இது தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால். சிலை அருகில் வருவதற்குள் இல் லாமல் போய்விடுவீர்கள். எனவே பெரியாரை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

மருத்துவர் ச.இராமதாசு

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில்,

திரிபுரா மாநிலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் முன் னோடி லெனினின் சிலைகள் அகற்றப்படுவதை சுட்டிக்காட்டி, அதேபோல் தமிழகத்திலும் தந்தை பெரியாரின் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று முகநூல் பதிவு ஒன்றில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.இராஜா கூறி யிருக் கிறார். மேலும், தந்தை பெரியாரை ஜாதி வெறியர் என்றும் கொச்சைப்படுத்தி யுள்ளார். இது கண்டிக்கத் தக்கது.

விநாச காலே விபரீத புத்தி என்பார்கள். அதற்கான சிறந்த உதாரணம் தான் எச்.ராஜாவின் முகநூல் பதிவு ஆகும். தமிழ்நாட்டில் கோட்சேக்களின் சிலைகளை திறக்க வேண்டும் என்று கூறியவர்களிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ள எச்.இராஜா போன்றவர்கள் எதை யாவது பேசி அரசியல் விளம்பரம்  மற்றும் பரபரப்பைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தந்தைப் பெரியாரைப் பற்றிக் அநாகரிகமான விமர்சனங்களை இராஜா முன்வைப்பது இது முதல்முறையல்ல. கடந்த காலங்களில் இதேபோல் பலமுறை பேசியும் அதற்காக அவர் மீது ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே இதுபோன்று பேசும் துணிச்சல் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. எச்.இராஜா வின் இத்தகைய அநாகரிகமான செயலை இனியும் அனு மதிக்கக் கூடாது; பெரியாரால் சுயமரியாதை பெற்றவர்கள் இனி அனுமதிக்க மாட்டார்கள்.

 

தமிழகத்தில் உரிமைகள் பறிக்கப்பட்டு, அடக்கி வைக்கப் பட்டிருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுயமரியாதையையும், சமூக நீதியையும் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். அவர் போராடி இருக்காவிட்டால் தமிழகத் தில் பறிக்கப்பட்ட சமூகநீதி பறிக்கப்பட்டதாகவே இருந்தி ருக்கும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதலாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்காது. இதற்காக தந்தை பெரியாரை கோடிக்கணக்கான கரங்கள் வழிபடுகின்றன; கோடிக்கணக்கான வாய்கள் வாழ்த்துகின்றன. அத்தகைய பெரியாரின் சிலையை எச்.இராஜா போன்றவர்களால் நெருங் கக் கூட முடியாது என்பதே உண்மை.

தந்தை பெரியார் சுயமரியாதையின் அடையாளம், சமூக நீதியின் அடையாளம், பாட்டாளி மக்கள் கட்சியின் அடை யாளம். இத்தகைய வலிமை மிக்க அடையாளத்தை அழிக்க கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. இனியும் எந்தக் கொம்பனாலும் தந்தை பெரியாரின் சிலையை அகற்றுவதற்கு அல்ல.... அசைக்கக்கூட முடியாது. அதை பாட்டாளி மக்கள் கட்சியும், அதன் தொண் டர்களும் அனுமதிக்கமாட்டார்கள். இதை அறைகூவலாகவே விடுக்கின்றேன்.

தந்தை பெரியார் என்ற ஆலமரத்தின் விழுதுகளின் ஒன்று என்று கூறிக்கொள்ளும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. பெரியாரின் வழி வந்தவர்களின் ஆட்சியில் அவரது சிலையை அகற்றுவோம் என்று கூற எச்.இராஜா போன்றவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது என்பது தான் மிகப்பெரிய வினா. அதிமுக இடம் கொடுத்ததால்தான் எச்.இராஜா போன்றவர்கள் ஆட்டம் போடுகின்றனர். தந்தை பெரியாரின் சிலையை அகற்றப்போவதாகக் கூறிய எச்.இராஜா அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் நல்லிணக்கத்தையும், சட்டம் - ஒழுங்கையும் குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வரும் எச்.இராஜாவை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன் (சி.பி.எம்.) கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,

இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது, நாளை தமிழகத்தில் பெரியார் சிலைக்கும் அதுதான் என்று பகிரங்கமாக வன்முறை யைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். கடந்த காலத்திலும் இப்படிப்பட்ட வெறிப்பேச்சுக்கள் தடுக்கப்படாத தால் எச். ராஜாவின் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன என் பதை சுட்டிக்காட்டுகிறோம். பாஜகவினரின் இந்த வன்முறை - அராஜகத்தைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் உடனடியாகக் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டு மென கட்சி அணிகளை மாநில செயற்குழு அறை கூவி அழைக்கிறது. வன்முறைகளாலும், வெறிச்செயல்களாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு போதும் அழித்துவிட முடியாது. அனைத்து பகுதி மக்களையும் துன்பத்தில் ஆழ்த் துகிற பாஜகவின் மோசமான பொருளாதார கொள்கைகளை வன்முறை மூலம் மறைத்து விட முடியாது என இத்தருணத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது.

ஜனநாயகம் காக்கிற இந்தப் போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும், அரசியல் கட்சிகள், பிரமுகர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டு உரத்த குரலில் கண்டன முழக்கம் எழுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

இரா.முத்தரசன் (சி.பி.அய்.)

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

எச்.ராஜாவின் வன்மம் நிறைந்த, மோதல் உருவாக்கி, பகை வளர்க்கும் வெறி பேச்சு, தமிழ்நாட்டை கல வரபூமி யாக்கும் தீய நோக் கம் கொண்டது. பொது அமைதியை சீர் குலைத்து வரும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய் யாமல் மவுன சாட்சியாக தமிழக அரசு செயலாற்றி இருப்பது கண்டிக் கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருமாவளவன்

பெரியாரின் சிலையை அகற்ற எச்.ராஜாவின் முப் பாட்டனாலும் முடியாது என்று விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் திரு மாவளவன் தெரிவித்தார்.

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சிகளின் ஆட்சி முடிந்த வுடன் அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. அது போல் ஒரு நாள் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியும் முடிவுக்கு வரும்போது பெரியார் சிலை அகற்றப்படும் என்ற அர்த்தத்தில் ஒரு பேஸ்புக் பதிவை போட்ட எச்.ராஜா தற்போது நீக்கி யுள்ளார். அந்த பதிவில் அவர் கூறுகையில் லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனி சத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவெரா ராமசாமி யின் சிலை என்று கூறியுள்ளார். இதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில் பெரியாரின் சிலையை அகற்ற எச்.ராஜாவின் முப்பாட்ட னாலும் முடியாது என்றார்.

சு.திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் தலை வர் சு.திருநாவுக்கரசர் வெளி யிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது;-

பெரியார் பற்றி ராஜா பேசியதை தமிழ்நாட்டில் யாரும் ஏற்கவோ, ரசிக்கவோ மாட்டார்கள். ராஜா இது போன்ற தரமற்ற பேச்சுக் களை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் அவருக்கும், அவருடைய கட்சிக்கும் நல்லது. ராஜாவின் பேச்சுக்கு தமிழக காங்கிரசு சார்பில் எனது கடும் கண்ட னத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கமலகாசன்

எச்.ராஜா வருத்தம் தெரி விப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல, யாரோ ஒருவர் தனக்காக முகநூலில் பதிவு செய்து இருப்பதாக எச்.ராஜா சொல் லியிருப்பது நொண்டி சாக்கு.

விஜயகாந்த்

பெரியார்பற்றி கருத்து கூறஎச்.ராஜாவுக்குதகுதி கிடையாதுஎன்றுவிஜய காந்த் கண்டனம் தெரிவித் துள்ளார்.

பாஜக தேசிய செயலா ளர் எச்.ராஜா, பெரியார் சிலையை அகற்ற வேண் டும் என பேஸ்புகில் பதி விட்டதை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது போல, தமிழகத்தில் ஈ.வெ.ரா தந்தை பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என பாஜக வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா என்பவர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்ததை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஒரு சரித்திரம் படைத்த யுகநாயகன், அவருடைய புரட்சிகரமான கருத்துக்களை தமிழகத்தில் யாரும் கூறியது கிடையாது. அவரைப்பற்றி கருத்துக்கள் கூற எந்த தலைவருக்கும் தகுதிகள் கிடையாது. எனவே ஹெச்.ராஜா தனது பேஸ்புக்கில் பதிவிட்டதும் தவறு, கடுமையான எதிர்ப்பு வந்தவுடன் வருத்தம் அடைகிறேன் என தெரிவிப்பதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு கருத்தை பதிவிடுவதற்கு முன், அந்த தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என பல முறை ஆராய்ந்து அதன்பின் கருத்துக்களை தெரிவிக்கவேண்டும். கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல இல்லாமல், பதிவிடுவதற்கு முன் சிந்தித்து செயல்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை

பெரியாரை இழிவுபடுத் தும் செயலை ஒருபோதும் ஏற்கமுடியாது என்றுமக்க ளவை துணைத் தலை வர்தம்பிதுரைகூறியுள் ளார். டில்லியில் செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெரியார் சிலை மீது கை வைத்தால் தமிழகம் துடித்து எழும் என்றும், சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீர பாண்டியன் எச்.ராஜாவின் பதிவு குறித்து கருத்து தெரி விக்கையில்,

முதலில் லெனின் சிலை அகற்றப்பட்டு உடைக்கப் பட்டதற்கு என்னுடைய கண் டனத்தை பதிவு செய்கிறேன். லெனின் மிகப்பெரும் சிந்த னையாளர், உலகத் தலைவர். லெனினிற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு என்று ராஜா கேட்கிறார், தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, இது போன்ற பல விஞ்ஞானிகள் இருக் கிறார்கள் அவர்களுக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. அவர்களின் கண்டுபிடிப் புகளையெல்லாம் அப்புறப்படுத்தி விடலாமா. வன்முறையை உருவாக்கும் இந்த போக்கு அர சியல் நாகரிகமில்லாத வன்முறைக்குத் தான் வழித்தோன்று கிறது. பெரியார் சிலையை உடைப்போம் என்கிறார், தைரியம் இருந்தால் பெரியார் சிலையை உடைத்துப் பாருங்கள். ஆட்சிக்கு வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும், பெரியார் சிலைகளை உடைக்கச் செய்யுங்கள். வன்முறை தான் தீர்வு என்று ராஜா முடிவு செய்துவிட்டால் அதனை சந்திக்க தமிழ கம் தயாராக இருக்கிறது. வழக்கு பதிவு செய்ய வேண்டும் அட்டூழியம், பாசிசத்தை எச். ராஜா அவிழ்த்து விடுகிறார். பெரியாரை போற்றாத கட்சிகளும், ஏற்காத ஆட்சியும் இல்லை உடன டியாக எச்.ராஜா மீது குற்றவழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் சுப.வீரபாண்டியன் தெரிவித் துள்ளார்.

பேராசிரியர் ஜவாஹிருல்லா

திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில் அங்கு ஏற்கெ னவே ஆட்சி புரிந்த கம்யூ னிஸ்ட் கட்சி ஆட்சியில் கடந்த 2013ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லெனில் சிலை அகற்றப்பட்டுள்ளது, அதன் தொடர்ச்சி பாஜகவின் எச்.ராஜா திரிபுராவில் இன்று லெனில் சிலை, நாளை தமிழகத்தில் பெரியாரின் சிலை என்றும், கம்யூனிசத்திற்கும், இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை, நாளை தமிழகத்தில் ஜாதி வெறியர் ஈவெரா ராமசாமி சிலை என்றும் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். எச்.ராஜாவின் வெறுப்பு உமிழும் கருத்தை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண் டிக்கிறது. பாஜக ராஜாவின் இந்தக் கருத்து வெறும் சிலையை அகற்றுவது மட்டுமல்லாமல் தந்தை பெரியார் அவர்கள் தமிழக மக்களுக்குக் கற்றுக் கொடுத்த சமூகநீதி, மதச்சார் பின்மை, சமூக நல்லிணக்கம் போன்றவற்றை தகர்க்கும் நோக்கில் கூறப்பட்டுள்ளது என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.   உயர் வகுப்பினர் தமிழர்களின் பண்பாட்டை அழித்து அவர்களின் பண் பாட்டைப் புகுத்தி அதன் பெயராலேயே தமிழர்களை அடி மைப்படுத்திய நேரத்தில்.  வெறுமனே மொழிப் போராட்டம் மட்டுமே நடத்தாமல் பண்பாடு மற்றும் இனப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெறும்போது தான் அடிமை விலங்கு உடையும் என்றார் தந்தை பெரியார். தீண்டாமையை முழு வதும் ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட தந்தை பெரியாரின் சிலைகளையும், அவரது சமூக நல்லிணக்க கருத்துகளையும் அகற்றிவிட்டு மீண்டும் பாசிச கருத்துகளைத் தமிழகத்தில் புகுத்திட நினைக்கும் ராஜாவின் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.

5.3.2018 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பயங்கரவாதமும், மதவாதமும், இடது சாரி தீவிரவாதமும் சமுதாயத்தின் மிகப்பெரிய அச்சுறுத்த லாகும். இச்சவால்களை திறம்பட எதிர்கொள்ள, நமது புலனாய்வு அமைப்புகளைப் பலப்படுத்தி, பயங்கரவாத அமைப்புகள் உருவாகாமல் தடுத்து, ஆரம்ப நிலையிலேயே களையெடுக்க வேண்டும். அழிவு சக்திகளை கட்டுப்படுத்தி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் அனை வரும் செயல்பட வேண்டும் என உரையாற்றியுள்ளார்.

முதலமைச்சரின் அறிவிப்பு வந்த ஒரே நாளில், நாட்டின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் கருத்துக்களை தெரிவித்தும், வெறுப்பை உமிழும் பயங்கரவாதப்  பிரச் சாரத்தை செய்து வன்முறைக்கும், மோதலுக்கும் தொடர்ந்து வழிவகுக்கும்  எச். ராஜாவை உடனே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.

‘இனமுரசு’ சத்தியராஜ்

எச்.ராஜா முகநூலில் பதிவிட்ட கருத்திற்கு நடிகர் சத்யராஜ் காணொலி மூலம் கண்டனத்தை வெளியிட் டுள்ளார். இனமுரசு சத்திய ராஜ் கூறியுள்ளதாவது:

“நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கூறிய எச்.ராஜாவை தமிழக அரசு சட்டப்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பெரியார் என்பது ஒரு சிலை அல்ல. ஒரு பெயர் அல்ல. ஒரு உருவம் அல்ல. ரத்தமும் சதையும் எலும்பும் சேர்ந்த ஒரு மனிதப்பிறவி மட்டுமல்ல. பெரியார் என்பது ஒரு தத்துவம். உழைக்கும் மக்களின் விடுதலைக்காக, பெண்களின் விடுத லைக்காக, மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளை ஒழிப்ப தற்காக ஏற் படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம். அவர் சிலையாக மட்டும் வாழ வில்லை. எங்களைப்போன்றவர்களின் உள்ளத் திலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

எந்த பதவியை வைத்தும், எந்த சக்தியை வைத்தும், எந்த இராணுவத்தை வைத்தும் எங்கள் உள்ளத்தில் இருக்கும் பெரியாரை அகற்ற முடியாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேரம் குறித்து, தேதி குறித்தால் பெரியார் தொண்டர்கள் சவாலை சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள்.

எச்.ராஜா அவர்கள் மன்னிப்புக் கேட்கவேண்டும். தமிழக அரசு அவர்மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு இனமுரசு சத்தியராஜ் குறிப்பிட்டார்.

டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.

சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியி ருப்பதாவது:-

பொறுப்பற்ற வகை யிலும், முதிர்ச்சியற்ற தன் மையோடும் கருத்து சொல் லும் எச்.ராஜா, தனது போக்கை இத்தோடு மாற் றிக்கொள்ளவேண்டும். மக்களின் உணர்வுகளை காயப் படுத்தி, வன்முறையை தூண்டும் வகையில், இனி யார் கருத்து சொன்னாலும் அவர்களை சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து

பெரியார் சிலை உடைக் கப்பட வேண்டும் என்ற எண்ணமே உடைக்கப்பட வேண்டும்.

பெரியார் சிலையில் கைவைத்தால் தேனீக்கூட் டில் கைவைத்த கதையாகி விடும் என்றார் கவிஞர் வைரமுத்து அவர்கள்.

எஸ்.டி.பி.அய். கண்டனம்

இதுகுறித்து எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது;

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் முன்னரே அங்கு கலவரம் பற்றிக் கொண்டதை ஊடக செய்திகள் வெளிப்படுத்துகின்றன. இந் நிலையில், அங்கு பிலோனியா என்ற இடத்தில் நிறுவப் பட்டிருந்த லெனின் சிலையை புல்டோசர் மூலம் பாஜக குண்டர்கள் உடைத்து அகற்றினர். இந்த அராஜக செயலை பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் வர வேற்றிருந்த நிலையில், லெனின் சிலை போன்று  தமிழகத்தில் நாளை பெரியார் சிலையும் உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் சமூக வலைதளத்தில் பதியவிட்டுள்ளார். கலவரமும், வன்முறையும்தான் பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மையான முகம் என்பதை பாஜகவின் தேசிய தலைவர்களின் இந்தப் பதிவுகள் வெளிப்படுத்து கின்றன.

தமிழகத்தின் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும், வன்முறை அரசியலை தூண்டும் வகையிலும் தொடர்ந்து நச்சுக்கருத்துகளை பரப்பிவரும் பாஜகவின் தேசிய செய லாளராக இருக்கக் கூடிய எச்.ராஜா, அனைவராலும் மதிக்கப் படக்கூடிய தந்தை பெரியார் குறித்து பேசினால் அது பிரச் சினைக்கு வழிவகுக்கும் என்பதை தெரிந்தே, திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டதை உதாரணப்படுத்தி, நாளை தமிழகத்திலும் பெரியார் சிலையை உடைக்கும்  அத்தகைய சூழல் உருவாகும் என பொது அமைதிக்கு குந்தகம் விளை விக்கும் வகையில் நச்சுக் கருத்தை தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் லெனின் சிலை உடைப்பை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், திட்டமிட்டே தமிழகத்தின் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்ளும் எச்.ராஜா மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்று நடந்துகொள்ளும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்காததன் விளைவாக இன்றைக்கு அவரின் நடவடிக்கைகள் பெரும் நச்சுப் பாம்பாக உருவெடுத்து வருகிறது. அந்த நச்சுப் பாம்பின் வளர்ச்சியை தடுக்காவிடில் அது பெரும் புற்றாகி தமிழகத்தின் அமைதியான சூழலை கெடுத்து விடும் என எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன். இதனை தமிழக அரசும், காவல்துறையும் தடுத்து நிறுத்தும் வகையில் செய லாற்றிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எச்சை ராஜாவை கட்சியை விட்டு நீக்குவீர்களா?

மோடிக்கு சவால் விடும் குஷ்பு!

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரி வித்திருக்கும் குஷ்பு எச்சை ராஜாவின் கருத்துகள் அவரது சொந்தக் கருத்துகள் என்றால், பா.ஜ.க விற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால், மோடிக் கும் அமித் ஷாவிற்கு நான் சவால் விடுகிறேன். ராஜாவை உங்களால் கட்சியிலிருந்து நீக்கமுடியுமா? பெய ருக்கு தற்காலிகமாக இடைநீக்கம் செய்யக்கூடாது. கட்சியை விட்டே நீக்க வேண்டும். உங்களால் முடியுமா? என்று கேட்டுள்ளார்.

சீமான்

பரபரப்புக்கு ஆளாக வேண்டும் என்று தான் அவர் (எச்.ராஜா) இவ்வாறு பேசி வருகிறார். பெரியார் சிலையை அகற்றுவது என்பது அவரு டைய கனவிலும் நடக்காது. பெரியார் சிலையை தொட் டால் அதன்பின் தெரியும் அவருக்கு என்ன நடக்கும் என்று.

சரத்குமார்

தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்றவேண்டும் என்ற தேவையற்ற கருத்தை எச்.ராஜா கூறியுள்ளார். தொடர்ந்து காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்தி, இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிராகப் பேசி வரும் அவரை பா.ஜ.க. தலைமை கண்டிக்காததும் மிகுந்த கண்டனத்திற்கு உரியதாகும் என்றார் அவர்.

ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

ஜி.வி.பிரகாஷ் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''பெண்ணடிமையை சாதியை மூட நம்பிக்கைகளை உடைத்த இரும்பு மனிதர் பெரியார்.! அவரின் சிலைகள் அப்புறப்படுத்தப்படும் என்று சொன்னது வன்மையான கண்டனத்துக்குரியது!'' என்று தெரிவித்துள்ளார்.

 

=============

ஒரே ஒருவரைத் தவிர...

தமிழ்நாட்டில் அத்துணைக் கட்சித் தலைவர்களும் பி.ஜே.பி. எச்.ராஜாவின் தந்தை பெரியாரை அவமதிக்கும் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துவிட்டனர் - ஒரே ஒருவரைத் தவிர!

புதிய கட்சியைத் தோற்றுவித்து வெற்றிடத்தைப் பூர்த்தி செய்ய வருவதாகப் பராக்குக் கூறிய ஒருவர் மட்டுமே திருவாய் மலரவில்லை.

அவரை அடையாளம் காண இதுதான் சரியான தருணம்.

====================

திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் கைது!

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம்முன் உள்ள தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்திய முத்துராமன், பிரான்சிஸ் இருவரும் கைது செய்யப்பட்டு 294(B), 153(A) 506 (ii) pc/24 PPDC Act

பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிலையை சேதப்படுத்தியபோது திராவிடர் கழகத் தினரும், பொதுமக்களும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner