எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மார்ச் 31 காஷ்மீரில் ராணுவத்துக் கெதிராக கடந்த ஆண்டில்  பொதுமக்கள் கல்வீச்சு போராட்டத்தில் ஈடுபட்டு ராணுவத்துக்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அதனால், ராணுவத்தினர் அப்பகுதியில் நுழையமுடியாமல் திண்டாடி னார்கள். கடைசியில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் மனிதக் கேடயமாக  காஷ்மீரைச் சேர்ந்த அப்பாவி முசுலீம் இளைஞர் பாரூக் அகமது தார் என்பவரை ஜீப்பின் பேனட்டில் கட்டிவைத்து அந்த ஜீப்பைமுன்செல்லவிட்டு, பின்னால் ராணுவத்தினர் சென்றனர்.

ராஷ்டிரிய ரைபிள்ஸ் 53 ஆவது படைப்பிரிவின் மேஜர் நிதின் லீதுல் கோகாய் என்பவர் அப்பாவி காஷ்மீர் குடிமகனை ஜீப்பின் முன்பக்கத்தில் அவ்வாறு கட்டி வைத்துச் சென்றார்.

ராணுவத்தின் மனித உரிமை மீறல் இது என்று மனித உரிமை ஆர்வலர்கள்,  மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கொதித் தெழுந்தார்கள். இராணுவத் தின் மனித உரிமை மீறலைக் கடுமையாக கண்டித்தார்கள்.

இந்நிலையில் ஜீப்பில் மனிதக் கேடயமாக ஒரு வரை கட்டிவைத்துச் சென்ற காட்சிப் படத்தை தற்பொழுது பாஜகவைச் சேர்ந்தவர் பனிய னாக அச்சிட்டு விற்பனை செய்து வருகிறார். பனியன் விலை ரூ.495 என விலை நிர்ணயித்து, டி-சர்ட் பையா.காம் (-லீவீக்ஷீதீலீணீவீஹ்ணீ.நீஷீனீ) எனும் இணையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பாஜகவும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

காஷ்மீரில் மனிதக் கேடயமாக அப்பாவி குடி மகனைக் கட்டிவைத்துச் சென்ற படத்துடன் உள்ள பனியன் விற்பனையைத் தடுக்க   யாரா லும் முடியாது.  பாரூக் அக மதுதார் நூற்றுக் கணக்கான வழக்குகள் போட்டாலும், எங்கள் விற்பனையைத் தடுக்க முடியாது என்று பாஜக தொடர்பாளர் தஜீந்தெர் பால் சிங் பாகா கூறியுள்ளார்.