எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அறிவியல் பாடமாக மட்டுமல்லாமல் வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும்

இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் படத்தை திறந்து வைத்து தமிழர் தலைவர் உரை

சென்னை, ஏப். 4- இயற்பியல் அறிஞர், பேரண்ட அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் 76 வயதில் (14.3.2018) அன்று லண்டனில் இறந்தார். அவருடைய படத் திறப்பு நிகழ்வு 31.3.2018 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் அன்னைமணியம் மையார் அரங்கில் நடைபெற் றது.

நிகழ்ச்சித் தொடக்கத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கின்ற  தி தியரி ஆஃப் எவரித்திங் (2014) படம் திரையிடப்பட் டது. ஸ்டீபன் ஹாக்கிங் படத்தை திராவிடர் கழகத் தலைவர், பகுத்தறிவாளர் கழகப் புரவலர், தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

கற்றலின் கேட்டலே நன்று என்று ஏராளமானவர்கள் இங்கே வந்துள்ளீர்கள். ஸ்டீ பன் ஹாக்கிங்குக்கும், பெரி யார் திடலுக்கும் என்ன சம் பந்தம்? விஞ்ஞானம்தான். தந்தை பெரியார் ரசல் நூல் களை மொழிபெயர்த்தவர் ஆவார். சிலருக்கு மரணத்தைவிட சாகப்போகிறோம் என்கிற மரண பயமே பெரியதாக இருக்கும். ஸ்டீபன் ஹாக்கிங் ஏ.எல்.எஸ். நோய்க்கு ஆளா னார்.  அப்போது மருத்துவர்க ளிடம், மூளை சரியாக இயங் குமா என்று கேட்டு, மூளை தான் மூலதனம் என்று நம்பிக் கையுடன் ஆய்வுகளை செய்து உலகுக்கு அறிவித்தவர். தந்தை பெரியார் மூத்திர வாளியை தானே சுமப்பார். மற்றவர்களை தூக்க விடமாட் டார். அப்படி பலவீனத்தை பலமாக்கியவர். 30, 40 ஆண் டுகளாக பற்கள் இல்லாமல் ஈறுகளை பலமாக்கி பல் போல் ஆக்கிக் கொண்டவர். முருக்கு சாப்பிடுவார். இறைச் சிகள் அப்படியே துண்டுதுண் டாகிவிடும். உடலில் பல்வேறு பாதிப் புகளுக்கிடையே, மூளையின் செயல் திறனை மட்டுமே நம்பியவர் ஸ்டீபன் ஹாக்கிங். அவர் கிராண்ட்டிசைன் நூலில் கடவுள் இல்லவே இல்லை என்பதை தந்தைபெரியார் சொன்னதைச் சொன்னவர். கடவுளை மனிதன் உருவாக் கியதாக ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார். சர்வ வல்லமை உடையவரே கடவுள் என்றா லும் அவரும் அறிவியலுக்கு உட்பட்டவரே என்று ஸ்டீ பன் ஹாக்கிங் கூறியுள்ளார்.

அம்பேத்கர் புத்தா தம்மா நூலில் கடவுள் தானாக தோன்றிட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.  கட வுள் உலகத்தை படைத்தான் என்றால், அதற்கு முன்பாக என்ன செய்தார்? என்று கேள்வி எழுப்பினார்.நகைச் சுவை உணர்வை எல்லோரும் வளர்த்துக்கொள்ள வேண் டும். மரணம்தான் இறுதியா னது, மறுபிறவி கிடையாது என்கிற தத்துவத்தை, அறி வியல் ரீதியாக ஸ்டீபன் ஹாக் கிங் கூறியுள்ளார்.

சொர்க்கம், நரகம் முடிச்சு மாறிகளின் செயல் என்றார் தந்தை பெரியார். அறிவியல் வளர வேண்டும். அறிவியல் பாடமாக மட்டுமல்லாமல் வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும். அறிவியல் என் பதே மனிதனின் நலனுக் காகத்தான் என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். மனித குலம் மகிழ்ச் சியோடு நம்பிக்கையோடு இருக்க ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு பாடம்.

இவ்வாறு தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் தமது ரையில் குறிப்பிட்டார்.

வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் அறிமுகவுரை யாற்றி அனைவரையும் வர வேற்றார். அணுத்துகள் ஆய்வாளர் சித்து முருகானந்தம், ஸ்டீபன் ஹாக்கிங் புத்தகத்தை தமிழில் மொழியாக்கம் செய்த எழுத் தாளர் நலங்கிள்ளி ஆகியோர் ஸ்டீபன்ஹாக்கிங் குறித்து அறிவியல் ஆய்வுத்தகவல் களை, வாழ்க்கை முயினை எடுத்துக்காட்டி பேசினார்கள்.

பகுத்தறிவாளர் கழக அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்செல்வன் நன்றி கூறி னார்.

டாக்டர் இராஜசேகரன், ராஜூ, புலவர் பா.வீரமணி, பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர்கள் அருட்செல்வன், ஆ.வெங்கடேசன், வழக்குரை ஞரணி அமைப்பாளர் ஆ. வீரமர்த்தினி, மாணவரணி மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு உள்ளிட்ட பல தரப்பினரும் பெருந்திரளாக ஸ்டீபன் ஹாக்கிங் படத் திறப்பு நிகழ்வில் பெரிதும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner