எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒரு மனிதன் பிறந்தான், வாழ்ந்தான், மறைந்தான் என்று சுருக்கி கொண்டு இந்த  மண்ணில் வாழ்ந்தவர்களை விட, ஒரு மனிதன் பிறந்தான், வாழ்ந்தான், இதை, இதை எல்லாம் செய்தான், மறைந்தான் என்பதுதான் அந்த மனிதன் இந்த மண்ணில் பிறந்ததற்கான சான்று, அடை யாளம் எல்லாம். அந்த மனிதர்களைதான் எத்தனை ஆண்டுகள் கடந்து போனாலும் அவர்கள் சாதித்துவிட்டு சென்ற சாதனைகள் பல நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும். அதை பல தலைமுறைகள் ஒன்றன்பின் ஒன்றாக போற்றி புகழ்ந்து கொண்டிருக்கும்.

அப்படியான ஒரு மனிதர், தான் வாழ்ந்த காலத்தில் சாதித்துவிட்டு சென்ற சாதனைகளையும், அவர் நிகழ்த்தி விட்டு சென்ற தொண்டுகளையும், அவர் மறைந்து அவரது உடல் உருத் தெரியாமல் மண்ணாகி போய், நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டபின்னும் அவரது புகழ் மங்கா விளக்காக, மறையா விளக்காக, இக்காலத்திலும் ஒளிரும் விளக்காக தமிழக மக்கள் பாதுகாத்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அத்தனை வலிமை யான ஒரு மாமனிதர் அய்யா பெரியார் அவர்கள். அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகிப்போனாலும் அவரை நேசிக்கும் பருவத்தினர் யார் என்றால், பதி னான்கு, பத்தொன்பது வயதுடைய இளைஞர்கள். அவரது அடையாளமான கருப்பு சட்டையை போட்டுக் கொண்டு அந்த தொண்டு செய்து பழுத்த பழத்திற்கு தன்னை தொண்டனாக அடையாளப்படுத்திக் கொண்டு அவருக்கு ஒரு இழிச்சொல், பழிச்சொல் என்று வந்தால் அதை துடைத்தெறிய இந்த இளைய கூட்டங்கள் துணிவுடன் களத்திற்கு வந்து நிற்கிறார்கள் என்றால் அந்த இளைய உள்ளங்களிலும் தனது தொண்டுகளை பதித்து வைத்துக் கொள்ளும் வகையில் அவரது சேவை கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கிறது என்பதற்கான அடையாள குறியீடுகள்தான் அவை. இத்தனை புகழ் வாய்ந்த பெரும் மனிதரை உலகில் வாழுகின்ற தமிழர்கள் அனைவருமே போற்றி கொண்டாடப் பெறுகின்ற பார்புகழ் போற்றும் பேரறிவாளர் பெரியார் அவர்களை, அவர்களது ஆற்றல் தெரியாமல், அவரது ஆளுமை தெரியாமல் அல்லது அறிந்திருந்தும், தெரிந்திருந்தும் அரசியல் வாழ்விற்காக ஒரு ஈன பிழைப்பிற்காக பெரும்பலம் பொருந்திய சக்திவாய்ந்த ஆலமரத்தை வெட்டி வீழ்த்த தகர பிளேடுகளால் அறுத்தெறிந்திட முடியுமா? தங்களுக்கு ஒரு விளம்பரம் வேண்டும் என்றால் அதற்கு பெரியார்தான் பெரிதாக தரச்செய்வார் என்ற சூட்சமத்தை அறிந்து கொண்டு அவரது சிலையை உடைப்பேன் என்று சொன்ன அந்த எச்.ராஜா என்னும் பெயர் கொண்டவன் சொன்னதின் விளைவாக தமிழ கத்தில் எழுந்த எரிமலை சீற்றத்தால் எங்கள் பெரியார் மீது கை வைப்பேன் என்று சொன்னவனும், அவரை இழித்தும், பழித்தும் பேசியவர்களும் அரண்டு மிரண்டு போனார்கள். தமிழகத்தில் தங்களை விரிவு படுத்திக் கொள்ள அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு மேலே எழ முயல அதற்கு பெரியாரை மய்யப்படுத்தி எதிர்ப்பு கிளம்ப, ஏதோ பெரியார் மண், பெரியார் மண் என்று சொல்லி தமிழகத்தில் பா.ஜ.க கால் பதிக்க நினைப்பதை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஏளனமாக அசால்டாக அவர்களது மத்திய அரசியல் தலைமையும், மத்திய ஆட்சி தலைமையும், அவர்களது கட்சியால் வளர்ந்துக் கொண்டிருக்கின்ற ஒரு உருப்படாத உருப்படி பெரியார் சிலையை உடைப்பேன் என்று சொல்லிவிட்டு டில்லிக்கு ஓடிவிட்ட பிறகு, தமிழகத்தில் எழுந்த அதற் கான அதிர்வு அலைகளை கண்டவர்கள் அச்சத்தில் நடுங்கிப் போனார்கள். அதன்பிறகு அவர்களது அரசியல் தலைமையும், ஆட்சி தலைமையும் தமிழகத்தின் அதிர்வு காரணமாக, அதனால் எழுந்த அச்சத்தின் காரணமாக, அவசர அவசரமாக தங்களது கண்டனத்தை பதிவு செய்கின்ற நிலையாகிப் போனது.! அவர்கள் நடுங்கி போனார்கள் என்பதை அவர்களது கண்டனத் தின் மூலம் தமிழகம் அறிந்து மகிழ்வு கொண்டது. தங்களது தலைமையையே மிரட்டிவிட்டார் பெரியார் என்பதை அறிந்து தனது வாய்க் கொழுப்பால் பேசிய இந்த ராஜா அவசர அவசரமாக டில்லிக்கு  பயந்து ஓடிபோய் "நான் வருந்துகிறேன். அந்த பதிவை நான் போடவில்லை என்னை அறியாமல் என அட்மின் போட்டுவிட்டார்" என்று ஒரு பல்டி அடித்துவிட்டார் இந்த ராஜா, இவருக்கு தெரியாமல் இவரது அட்மின் எப்படி போடமுடியும்? அதிலும் இவர் வழக்கமாக பெரியாரை சொல்லும் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்ற வரிகளோடு? இவர்தான் அந்த பதிவை போட்டுள்ளார். தமிழ் நாட்டில் கிளம்பிய எதிர்ப்பால் பின்வாங்கி அட்மின் மீது பழியை போட்டுத் தப்பித்து விட்டார்.

இவரது படுக்கை அறையில் எனக்கு தெரியாமல் யாரோ வந்து புழங்கிவிட்டு போய் விட்டார்கள் என்று இவரால் சொல்லமுடியுமா? அப்படி ஏதேனும் நடந்தால் விட்டு விடுவாரா? இதைவிட இன்னும் மோசமாக (இவருக்கு தெரியாமல் அட்மின் போட்டுவிட்டார் என்ற பேச்சுக்கு, நமது தமிழக தலைவர்களுக்கு, பெரியாரின் பெருந்தொண்டர்களுக்கு கேட்க முடியும். பெரியார் கற்று தந்த பாடம் எல்லாம் அநீதிக்கு எதிராக போர் புரியுங்கள். அநாகரீகம் கூடாது என்பதுதான். பெரியாரை யார் என்று நினைத்து விட்டீர்கள்? அவர் செய்துவிட்டு சென்ற தொண்டு என்பது சாதாரணமானதா? ஒரு ஆதிக்க சாதியினர் நிரம்ப உள்ள கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒரு சூத்திரகுல பெண்மணி மாநில தலைவராக இருக்கிறார் என்றால் இதே தமிழ்நாட்டில் பிறந்த ஒரு சூத்திரர் ஆதிக்கர்கள் நிறைந்த கூட்டத்தில் அதிகாரம் நிரம்பிய டில்லி பட்டணத்தில் மத்திய அமைச்சராக வலம் வருகிறார் என்றால் அது பெரியாரின் பெரும் போராட்டத்தின் பலன். பயன். இதை எல்லாம் மறந்து போய் பதவி போதைக்கு மயங்கி, கண் மங்கி பெரியார் என்கின்ற அந்த பெரும் போராளிக்கு எதிராக கோஷம் போடுகிறார்களே என்பதுதான் பெரியாரால் உயர்வு பெற்றவர்களின் வேதனை..!

இந்த நாட்டில் பெரும் நோய்களை விட மிக மிக கொடிய நோய் சாதியும், மதமும்தான். நோய்தீர மருந்து போட்டுக்கொண்டால் நோய் தீர்ந்துவிடும். ஆனால், என்ன மருந்து போட்டாலும் தீராத வியாதி சாதியமும், மதவாதமும். அதற்கு தன்னால் மருந்து போட்டு மறைக்க முயற்சி செய்தவர் தந்தை பெரியார்.! உதாரணமாக..

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், இன்றைய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், இன்றைய நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (பானர்ஜி ஒரு சாதி) ஆனால் நமது தமிழக முதல்வர் பழனிசாமிதான். பழனிசாமி கவுண்டர் இல்லை..! பொன்னப்ப நாடார் மகன் பொன்.ராதாகிருஷ்ணன் தான். ராதாகிருஷ்ணன் நாடார் இல்லை..! கருப்பையா மூப்பனார் மகன் வாசன். வாசன் மூப்பனார் இல்லை..!

இங்கே சாதியை வைத்துக்கொண்டு எவரும் வெளியே நடமாட முடியாது.

இங்கே சாதியைக் காட்டி, மதத்தைக் காட்டி தலைவர்கள் - கூட தனது பெயருக்கு பின்னால் சாதி பெயரை போட்டுக்கொண்டு உலாவர முடியாது..!

வடநாட்டில் பள்ளி மாணவர்கள் பெயருக்கு பின்னால் சாதிபெயர் இருக்கும். பெண்களுக்கு பின்னால் அங்கே சாதிபெயர் இருக்கும். யாரையும் கேட்காமலே அவர்கள் பெயரை வைத்தே இவர்கள் இன்ன சாதி என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் இங்கே.. ஒருவரை அழைத்து நீ என்ன சாதி.. என்று எளிதில் கேட்டுவிட முடியாது. இதை , உருவாக்கியவர் பெரியார்.

இதுமட்டுமல்ல. மற்ற மனிதனின் காலில் ஒரு மனிதன் விழுவதை சுயமரியாதை கேடு என்று சொன்னவர் பெரியார். உனது அன்பை வெளிப்படுத்த கட்டி அணை, முத்தமிடு, கை குலுக்கு, அன்பை செலுத்துகிறேன் என்ற பெயரில் மற்றவனின் காலில் விழுவது கேவலச் செயல் என எச்சரித்தவர். அப்படி அறியாமல் விழுபவனை தடுக் காமல் வேடிக்கை பார்ப்பவன் மனித குலத்தின் இழிபிறப்பாளன் என்று கடிந்தவர் பெரியார். இன்றைக்கு நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். உயர் பொறுப்புகளை வகிக்கிறார்கள். ஆற்றல் மிக்கவர்களா கவும், ஆளுமை மிக்கவர்களாகவும், தமிழிசை டாக்ட ராகவும், கட்சியின் தலைவராகவும், வானதி சீனுவாசன் வக்கீலாகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் உயர்ந்து நிற்கிறார்கள் என்றால் பெரியாரின் துணிவு மிக்க தொண்டே காரணம், பெண்கள் எப்படி நடத்தப் பட்டார்கள், ஒடுக்கி வைக்கப்பட்டார்கள், இழிவாக்கப்பட் டார்கள் கேவலத்திற்குரியவர்களாக பார்க்கப்பட்டார்கள் என்றால்,  "ஸ் தி ரி க ளுக் கு  எதற்கு சொத்து? ஓடிப் போயிடுவா..  ஸ்திரிகளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? ஸ்திரிகளுக்கு பாத்தியமோ, -சம்பாத்தியமோ இருக்க கூடாது என வேதத்தில் சொல் லியிருக்கு", பெண்களுக்கு இயற்கையான மாதவிடாயை, "உலகிலேயே மோசமான பொல்யூஷன். அந்த நாட் களில் பெண்கள் வெளியில் வருவதால்தான் நாட்டில் மோசமான நாசங்கள் ஏற்படுகின்றன. வேலைக்கு போகும் பெண்கள் சுத்தமானவர்கள் கிடையாது." மேலே உள்ளவைகள் எல்லாம் சங்கராச்சாரியார்கள் சொன்ன பிற்போக்குத் தனமான பெண் அடிமை கருத்துக்களில் சில...

(தொடரும்)

- சி.வி. புரட்சி வேந்தன், புதுச்சேரி நன்றி: நீதிக்கான விடியல் ஏப்ரல் 2018

இப்படி பேசியவர்கள் காலத்தில்தான் பெண்கள் மீதான மத அடக்குமுறைகள் மிகுந்த காலகட்டத்தில் பெண்களுக்கு கல்வி கொடு. பெண்களுக்கு சொத்துரிமை கொடு. சம உரிமை கொடு. பெண்களை இழிவுப்படுத்தும் தேவதாசி முறையை ஒழி. விதவைகளுக்கு மொட்டை அடித்து மூலையில் உட்கார வைக்காதே.. விதவை கைம்பெண்களுக்கு மறு திருமணம்.. இப்படியான கலகக்குரல் உறு மியவர் அய்யா பெரியார் அவர்கள். பெண்களின் வளர்ச்சிக் கும், முன்னேற்றத்திற்கும் பெ ரி யார் ஆற்றிய தொண்டினை பாராட்டி 1938ல் தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டில்தான் அவருக்கு பெரியார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. 1938ல் தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை மீனாம்பாள் சிவராஜ் பண்டித நாராயணி, வ.பா. தாமரைகண்ணி, நீலாம்பிகை, மூவலூர் ராமாமிர்தம், மருத்துவர் தரும்மாம்பாள் உட்பட பெண்கள் குழு முன்னின்று நடத்திய து. இந்த மாநாட்டில் பெரியார் எனப் பெண்கள் பெயரிட்டு அழைத்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்தியாவில் இதுவரை சீர்திருத்த - தலைவர்கள் செய்யாமல் போன வேலைகளை நமது தலைவர் ஈ.வெ. ராசாமி அவர்கள் செய்துவருவதால், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் வேறு ஒருவர் இல்லை என்பதைக் கருத்தில் கண்டு அவருடைய பெயரை சொல்லாலும், எழுத்தாலும் பெரியார் என்ற சிறப்பு பெயரால் அழைக்க வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ப ரி ய ர் அ வர் க  ள ப் ப ற் றி சொல்லவேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகலாம். அது எண்ணில் அடங்காதவைகள். எனது எழுத்து குறிப்பில் மட்டும் அனைத்தையும் அடக்கிவிட முடியுமா என்ன? அது ஒரு சாதனைக்கடல். அவருக்கு நிகராக எவரும் ஏற முடியாத சரித்திர 200ல, ஆனால் பெரியாரை ஏதாவது குற்றம் சொல்லி அவரை சறுக்கிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் சொல்லுகின்ற குற்றச்சாட்டு பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்று இதன்மூலம் தமிழையும் குறையாக்கி, பெரியார் அந்த தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்று தமிழர்களுக்கும் பெரியாருக்கும் உள்ள பற்றை பகையாக்கி பார்க்கும் ஆரிய சூழ்ச்சி... தமிழை இப்படி சொன்னார். இப்படி சொன்னார் என்று

1துக் கூட்டங்களிலும், டிவி விவாதங்களிலும் சொல்பவர்கள் யார் என்று பார்த்தால் இந்த பி.ஜே.பி காரன். இந்து பெயரால் அமைப்பு நடத்துகிறவன் மொத்தத்தில் பெரியாருக்கு எதிரானவர்கள். அவரை பிடிக்காதவர்கள். இந்த வியாக்கியான வாதிகள் தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னார் என்பதை 42ட்டும் கண்டுபிடித்து, இந்த குருட்டு புத்தியாளர்கள் ஏன் அப்படி சொன்னார்கள் என்கின்ற எதிர்பதத்தை ஆராயாமல் விட்ட அறிவிலிகள். ஏன் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்? அந்த கால கட்டத்தில் பழமையான மொழி, நவீன காலத்துக்கு ஏற்ப மாற்ற மடையா மொழி. வெறும் பக்தி மற்றும் இலக்கியம் மட்டுமே இருந்த மொழியை, அதை நவீன காலத்துக்கு

ஏற்ற மொழியாக தமிழ் மாற்றமடைய வேண்டும் என்ற அர்த்தத்தில் பெரியார் அவர்கள் இந்த தமிழை முற்றிலும் ராமகாவியம், கிருஷ்ணன் கதா என்று இல்லாத கற்பனைகளை எல்லாம் இம்மொழியில் திணித்து தமிழை காட்டுமிராண்டி மொழியாக வைத்துள்ளார்கள் என்றார்.

பெரியாரை குறை கூறும் கோமாளிகள் தமிழை ஆக்கிரமித்துள்ள ராமகாவியம், கிருஷ்ண கதா போன்ற ஆன்மீகம் சார்ந்து இருப்பதைதான் பெரியார் தமிழை இப்படி சொன்னார் என்பதை மறைத்து மொட்டையாக தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார் என்று வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். அத்துடன் பெரிய 7 ) இன்னொன்றையும் சொன்னார். நான் தமிழை திட்டுவதால் கோபமடைந்த புலவர்கள் யாராவது நல்லதமிழில் அறிவியல் நூல்களை எழுதி கொடுத்தால் அதை எனது சொந்த செலவில் வெளியிட்டு அவர்களுக்கு பாராட்டும், பரிசும் அளிக்க தயாராக உள்ளேன். என்றும் சொன்னார் பெரியார்.

வெறும் தமிழ் மொழிப்பற்று, மொழியில் புலமை மட்டுமே தமிழினத்தை உயர்த்திவிடாது. ஆங்கில அறிவு கல்வி அசியம், அப்போதுதான் தமிழர் வாழ்வு ஏற்றமடையும் என சொன்னார் பெரியார். இன்றைய நிலைமையை பார்த்தால் பெரியாரின் தொலைநோக்கு புரிகிறது. தமிழ்நாட்டினர் பிற மாநிலத்தலைவர்களை விட கூடுதலாக பெற்றுள்ள ஆங்கில மொழி அறிவால்தான் கணினி தொழில் நுட்ப வேலைகளில் கோலாச்சுகிறார்கள்.

பெரியாரை அறியாதவர்கள், அவர் யார் என்று புரியாதவர்கள், பெரியரை படிக்காதவர்கள் பெரியார் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என நக்கலாய் பேசுபவர்களுக்காவும் பெரியார் யார் என புரிந்துகொள்ள சில சொற்ப தகவல்கள்.

1. பெரியார் தான் வகித்த 29 பதவிகளை துறந்து பதவிகள் ஏதுமின்றி 60 ஆண்டுகளுக்கு மேலாய் தனது 94ஆம் வயது வரை மக்கள் பணியில் ஈடுபட்டவர்.

2. செல்வ குடும்பத்தில் பிறந்தும் (1900 ஆம் ஆண்டுகளிலேயே சுமார் 25 கோடிகளுக்கு பெரியார் அதிபதி சமூகத்தின் அடிதட்டு மக்களின் துயரங்களை சிந்தித்து அதற்காக தன் ஆயுளை செலவிட்டு இறுதியில் தன் சொத்துக்களை மக்களுக்கே விட்டுச் சென்றவர்,

3. மக்கள் செல்வாக்கு இருந்தும் தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றாதவர். அரசியலில் இல்லாமலேயே மக்கள் பணி செய்தவர். தனது வாழ்நாளில் ஏறக்குறைய 8,200 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து சுமார் 11000 நிகழ்ச்சி கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியவர். முதிர்ந்த வயதிலும், சிறுநீரக பாதிப்பால் மூத்திர வாளியை கையோடு பிடித்துக்கொண்டு சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களில் பேசியவர்.

4. அக்காலத்திலேயே விதவை மறுமணத்தை வலியுறுத்தியவர். பெண்களுக்கு சொத்து உரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்.

5. மனிதர்கள் அனைவரும் சமம். அவனுக்குள் மேல் சாதி, கீழ்சாதி என்ற பிரிவினை இருக்கக்கூடாது என ஜாதியத்தை கடுமையாய் எதிர்த்தவர்.

6. ஜாதிகள் மதத்தினால்தான் தோன்றுகின்றன. எனவே மதத்தை தூக்கி எரிந்தவர், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று சொன்னவர்.

7. இல்லாத கடவுளையும், சாஸ்திரங்களையும் சொல்லி மதங்கள் மனிதர்களை மூடனாக்குகிறது என்பதை உரக்கச் சொன்னவர். அவர் வாழ்ந்த காலத்தில் மதத்தின் பெயரால் குறிப்பிட்ட சமூக மக்கள் பிற சமூக மக்களின் மீது செலுத்திய ஆதிக்கத்தை, மதத்தின் பெயரை சொல்லிக்கொண்டு அவர்கள் மட்டுமே அனுபவித்த சலுகைகளை கண்டு கொதித்துதான் பெரியார் கடவுள் மறுப்பு கொள்கையை தீவிரமாக்கினார்.

8. பெரியார் புதிய உலகின் தொலைநோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி என்று ஐக்கியநாடுகள் அமைப்பின் யூனெஸ்கோ அமைப்பால் பாராட்டப்பட்ட - பெரு மனிதர்.

9. தம் இயக்க தோழர்களை சாதி மறுப்பு மத மறுப்பு விதவை திருமணங்களை செய்து கொள்ள ஆதரித்தவர்.

10. பெரியாரிடம் பலர், உங்களின் எல்லா கொள்கையும் பிடித்திருக்கிறது. கடவுள் மறுப்பை தவிர என சொல்லியபோது, கை நல்லா இருக்கு. கால் நல்லா இருக்கு, மூக்கு முழி எல்லாமே நல்லா இருக்கு, உயிர் மட்டும்தான் பிடிக்கவில்லை எனச் சொல்வதுபோல் இருக்கிறது. நீங்கள் சொல்வது என - பதிலளித்து அவர்களின் வாயை அடைத்தவர்.

11. கடவுள் இல்லை என்பதற்கு அவர் சொல்லும் விளக்கம். நீ உணரும் பசியை நானும் உணர்கிறேன். அதனால் பசி இருக்கிறது என ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீ உணரும் கடவுளை என்னால் உணரமுடியவில்லை . அதனால்தான் கடவுள் இல்லை என மறுக்கிறேன் என்று கடவுள் மறுப்புக்கு விளக்கம் அளித்தார். பெரியார் சிந்தனைகள் இதுபோல் நிரம்ப உண்டு. இது சொற்பமே.. அய்யா பெரியார் அவர்கள் சாதனை நாயகர். வரலாற்றின் பொக்கிஷம். அவரை அறியாத, அவரது ஆளுமை திறன்களை புரிந்திராத வெற்று வீணர்கள், தீமை புத்தி படைத்த தீய சக்திகள் பெரியாரை செருப்பால் அடிப்பேன். அவரது சிலையை உடைப்பேன் என்று சொல்பவர்களே..,

பெரியார் சிலை என்பது கல்லும் மண்ணுமல்ல. அது மானமும் அறிவும் கொண்டது. அது வாழிபாட்டிற்கல்ல. வழி காட்டுதலுக்கு..

நீங்கள் வழிபட்டுக்கொண்டிருக்கின்ற சிலைகளை எல்லாம் அகற்றிவிட்டு சொல்லுங்கள். பெரியார் சிலை வேண்டாம் என்று. அகற்றிவிடுவோம்.

அதேபோல் எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற சமூக நீதியை வழங்கிவிட்டு சொல்லுங்கள் பெரியார் சிலை வேண்டாம் என்று. அகற்றிவிடுகிறோம்.

சூத்திர இழிவை துடைக்க எங்களது சந்ததிகளை அர்ச்சகர்களாக்கிவிட்டு சொல்லுங்கள். பெரியார் வேண்டாம் என்று. அப்புறப்படுத்திவிடுவோம்.

சாதி இழிவும் மதவாதங்களும் ஒழிந்து, பெரியார் கண்ட திராவிட இயக்கத்தின் நோக்கங்கள் நிறைவேறவே அய்யா பெரியார். அண்ணல் அம்பேத்கர் சிலைகளே தவிர, அதை வைத்து மணி, அடித்து, விபூதி பூசி, பூச்சூட்டி, பத்தி கொளுத்தி, கற்பூரம் ஏற்றி வழிபட அல்ல... என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அய்யா பெரியார் அவர்கள் விதையாக விதைக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்தால் அரை நூற்றாண்டுகள் ஆகிவிடும். இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும் அவர் சிலையாக இருந்தாலும் உயிர்ப்புடன் இருந்துகொண்டு தமிழக மக்களை அவர்பால் உணர்வுடன் இருக்கச் செய்து கொண்டிருக்கிறார். அவர் முழங்கிவிட்டு சென்ற கொள்கை முழக்கங்களை மங்காமல் பாதுகாத்து கொண்டிருக்கிறார். எந்த நேரத்தில் அதற்கு பங்கமும், பாதிப்பும் வரும்போது அதற்கான எதிர் வினைகள் எப்படி தமிழகத்தில் எதிரொலிக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நான்கு ஆண்டுகளில் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து நின்ற போதெல்லாம் வாய் திறக்காமல் மௌனம் காத்திருக்கும் பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று சொன்னதின் விளைவாக தமிழகம் தீ பிழம்பானதைக் கண்டு 24 மணி நேரத்தில் அவர்கள் பயந்து தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்கள். இதுபோன்று அவர்கள் இப்படி அவசர அவசரமாக வாய் திறந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்களா? பெரியார் என்கின்ற பெரும் சக்தி அவர்களை மிரட்டி உள்ளது. அவர்களும் மிரண்டுதான் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்கள் என்றுதானே அர்த்தம்? பெரியார் என்ன பெரிய ஆளா? என்று ஏளனமாக பார்த்தவர்களே.. பழித்தவர்களே... இப்போது புரிகிறதா? பெரியாரை யார் என்று நினைத்தீர்கள்..?

- சி.வி. புரட்சி வேந்தன், புதுச்சேரி நன்றி: நீதிக்கான விடியல் ஏப்ரல் 2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner