எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஏப். 18- தமிழக ஆளு நராக பொறுப்பேற்ற பன்வாரி லால் புரோகித் மாவட்டந் தோறும் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வது டன், பொதுமக்களிடமும் குறை களை கேட்டறிகிறார். அதிகாரி களுடனும் ஆலோசனை நடத்துகிறார். அவரது இந்த செயல்பாடுகளுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிக ளும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றன. ஆளுநரின் நடவ டிக்கை மாநில உரிமைகளை பறிப்பதாக  உள்ளது என்றும் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில், தமிழக ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக குற்றம்சாட்டி தி.மு.க. சார்பில் இன்று (18.4.2018) ஆளு நர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. சைதாப்பேட் டையில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல். ஏ.க்கள் உள்ளிட்ட  ஏராளமா னோர் ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டனர்.

அப்போது, ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக் கங்கள் எழுப்பியபடி சென்ற னர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையை முற்று கையிட முயன்றதாக, மா.சுப் பிரமணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப் பட்டனர். அப்போது பேசிய மா.சுப்பிரமணியன், தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என வலியுறுத் தினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner