எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 22- உலகப்புத்தக நாளை முன்னிட்டு ஏப்ரல் 20 முதல் 25 வரையிலான 6 நாள்கள் புத்தகத் திருவிழா சென்னை பெரியார் திடலில் நடை பெற்று வருகிறது.

எளிய மக்களுக்கான புத்தக திரு விழாவாக மாறியிருக்கும் சென்னை புத் தக சங்கமம், கரும்பு தின்ன கூலி தரு வது போல, கோடையில் நடைபெறும் குளிர்பதன வசதி கொண்ட புத்தகக் காட்சி, 50% தள்ளுபடியில் கிடைக்கும் அறிவுப்புதையல். நுழைவுக் கட்டணம் இல்லாத அதிசயம்; புத்தக வங்கி திட்டம்; அதற்கு புத்தகக் கொடைஞர் சான்று, புத்தகர் விருது, அறிவுச்சாரல் பொழியும் கருத்தரங்கங்கள். நாள் தோறும் எஸ்.எம்.சில்க்ஸ் வழங்கும் ஒரு புடவையும், பவார் லைப்ஃப் ஸ்டைல் வழங்கும் ஒரு செல்பேசியும் பரிசு, வேறென்ன வேண்டும்!

கலகலப்பு ஊட்டிய பெரியார் பிஞ்சுகளின் கதை சொல்லல்!

வீட்டில் குழந்தைகளுக்கு கதை சொல்லிக்கொடுப்பது யார்? என்ற கேள்வியை பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணன், குழந்தைகள் மத்தியில் கொளுத்திப் போட்டார். அவ்வளவு தான், சரசரவென சரவெடி மாதிரி வெடித்துக் கிளம்பின. அதாவது, பெரும் பாலும் தாத்தா பாட்டிதான் கதைகளைச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்ற நிலைதான் வந்தது. சில குழந்தைகள் நாங்கள்தான் அப்பா அம்மாவுக்குக் கதைகள் சொல்லிக் கொடுக்கிறோம் என்று சொல்லி, அனைவரையும் சிரிக்க வைத்தனர்.

குழந்தைகளிடம் கதை சொல்வதில் வல்லவரான கலைவாணன் அவர்கள் குழந்தைகளிடம், "நீங்கள் கிளியாக இருந்து, உங்களை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்தால் எப்படி தப்பிப் பீர்கள்?" என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ஒரு பெரியார் பிஞ்சு சட்டென்று, "கூண்டில் அடைத்தவனிடம், நீ சொல் வதையெல்லாம் கேட்கிறேன், திறந்து விடு என்று கேட்பேன். அவன் திறந்து விடுவான். நான் படபடவென்று சிறகு களை விரித்து பறந்து விடுவேன்" என்று சொன்னதும் கைத்தட்டல் ஒலி பலமாகக் கேட்டது.

அதேபோல, குயில் தூக்கணாங் குருவி கதை சொல்லி, அது குறித்து கருத்துகள் கேட்டதும், மடைதிறந்த வெள்ளம் போல சொந்தமாக மளமள வென்று உயர்ந்தது. கதை கேட்டு, சொந்தமாக சிந்தித்து பதில் சொன்னதை உடன் வந்த பெற்றோரும் பெருமை யுடன் பார்த்தார்கள்.

இறுதியில் குழந்தைகள் அனைவ ருக்கும் சான்றிதழும், புத்தகமும் தரப் பட்டன. அனைவரும் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். பிஞ்சுகள் அனைவரும் சேர்ந்து கதை சொல்லி கலைவாணன் அவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் சார்பில் புத்தகம் வழங்கி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியை 4 மீமீணீக்ஷீ தீபிகா ஏற்பாடு செய்திருந்தார். பிரின்சு என்னாரெசு பெரியார், உடு மலை, பவானி, ஞானப்பிரகாஷ் ஆகியோர் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டி ருந்தனர்.

புத்தக வங்கித் திட்டம்

சென்னை புத்தக சங்கமம் வேறு எந்த புத்தகக் காட்சியை விட கூடுதல் சிறப்புகளை பெற்றுள்ளது என்பதற்கு புத்தக வங்கித் திட்டமும் ஒரு சான்றா கும். புத்தக ஆர்வலர்கள் தாங்கள் படித்து முடித்து விட்டு, புத்தக வங் கிக்கு நன்கொடையாக வழங்கலாம். அப்படி கடந்து ஆண்டுகளில் பெற்ற 25,000 புத்தகங்கள் கிராமப்பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

21.4.2018 அன்று சென்னை புத்தக சங்கமத்தின் இரண்டாம் நாளின் காலை யில் மாதவரம் நெடுஞ்சாலையிலுள்ள வடக்கு பெரம்பூரில் வசிக்கும் எழிலரசு பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். அவ ருக்கு சென்னை புத்தக சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சரவணன், புத்தகக் கொடைஞர் சான்றி தழ் வழங்கி சிறப்பித்தார்.

புத்தக கொடைஞர் எழிலரசு இந்த புத்தக வங்கித் திட்டம் பற்றி கூறும் போது, இந்த விளம்பரத்தை தமிழ் இந்து நாளிதழில் படித்தேன். பின்தங் கிய பகுதியான வேலூர் மாவட்டத்திற்கு இந்தப் புத்தகங்கள் கொடுக்கப்படும் என்று இருந்தது. அதுதான் என்னை மிகவும் கவர்ந்தது. நான் திங்கட்கிழ மையும் வரவிருக்கிறேன். இன்னமும் புத்தகங்களைக் கொடுப்பேன் என்று மிகுந்த மனநிறைவோடு கூறினார். புத் தக வங்கி அரங்கில் தமிழோவியன், ஆர்டிஸ்ட் ஜேக்சன் ஆகியோர் ஒருங்கி ணைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

எழுத்தாளர் ஓவியா

பார்வையாளராக வந்திருந்த எழுத் தாளர் ஓவியா, இந்த சென்னை புத்தக சங்கம் பெரியார் திடலில் நடை பெற்றாலும் கூட, அனைத்துப் புத்தகங்களும், அனைத்து பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன. கருத்துகள் சுதந்திரமாக எல்லோருக்கும் போய்ச் சேரவேண்டும் என்றுதான் நோக்கம். இது மாதிரியான தொடர் நடவடிக்கைகள் இந்த சமூகத் திற்கு தேவை என்று வலியுறுத்துகிறேன் என்றார்.

கவிஞர் மனுஷ்யபுத்ரன்

கவிஞர் மனுஷ்யபுத்ரன் முதலாவது இந்த சென்னை புத்தக சங்கமம் என்பது கடும் கோடையில் குளிர்பதன வசதிக ளோடு அமைக்கப்பட்டுள்ளது. இன் னொன்று 50% தள்ளுபடியில் கிடைப் பது என்று மிகமிக அபூர்வமான விச யம். பலருக்கும் புத்தகங்களின் விலை என்பது கடும் சவாலாக இருக்கும். பல சிறந்த புத்தகங்கள் இதனால் ஸ்டாக் வைக்கப்பட்டிருக்கும். அவை இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் அனைவருக் கும் அருமையான வாய்ப்பை இந்த சென்னை புத்தக சங்கமம் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருப்பது பாராட்டத்தக்கது என்றார்.

அறிவிப்பாளர்கள்

விஜய் பிரபு, மரகதமணி, முரளிதரன் சின்னதுரை, பிரின்சு என்னாரெசு பெரியார், பிருத்திவிராஜ் ஆகியோர் அறிவிப்பாளர்களாக இருந்து அவ்வப்போது புத்தக சங்கமத்தின் சிறப்புகளை அறி வித்துக் கொண்டிருந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner