எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.29- சட்டப் பேரவைத் தலைவர் சம்பந்தப் பட்ட வழக்கில் புதுவைக்கு ஒரு தீர்ப்பும், தமிழகத்துக்கு ஒரு தீர்ப்புமாக மாறுபட்டு இருப்பது ஏன் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டப் பேர வைக்குள் திறக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அப்புறப்படுத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டி ருந்தது. மேலும் அரசு கொற டாவின் உத்தரவை மீறியதால் தற்போ தைய தமிழக துணை முதல மைச்சர் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மற்றொரு வழக்கு தொடரப் பட்டிருந்தது. திமுக சார்பில் தொடுக் கப்பட்ட இவ்விரண்டு வழக்கு களிலும் பல மாதங்கள் விசா ரணைக்குப் பிறகு வெள்ளி யன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்விரண்டு வழக்குகள் சம் பந்தப்பட்ட விவரங்கள் தனித் தனியானது என்ற போதிலும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் சில கேள்விகளை எழுப்பு கின்றன. அவைத் தலைவரின் அதிகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது, அவைத் தலை வரின் அதிகார வரம்பு தொடர் பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கில் எந்த முடிவும் நாங்கள் எடுக்க முடியாது என மனுதாரர்களது மனுக்களை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலை மையிலான அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் புதுச்சேரி சம்பந்தப் பட்ட வழக்கில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை கடந்த மாதம் வழங்கியது பல கேள்விகளுக்கு இடமளித் துள்ளது. புதுச்சேரி மாநில அரசின் பரிந்துரையும் இல்லாமல், அரசுடன் கலந்தாலோசனை எதுவும் செய்யாமல் தன்னிச் சையாக துணைநிலை ஆளுநர் கிரண்பெடி மூன்று பாஜக பிர முகர்களை சட்டமன்ற உறுப் பினர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டார். இவர்களது நியமனத்தை ஏற்க முடியாது என புதுச்சேரி சட்டப் பேர வைத் தலைவர், ஆளுநரின் உத் தரவை ரத்துசெய்தார். இப் பிரச்சனை தொடர்பான வழக் கில் அவைத் தலைவருக்கு அவ்வாறு உத்தரவிட அதிகாரம் இல்லை எனக்கூறி, அவரது உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

அவைத் தலைவரின் அதி காரம் சம்பந்தப்பட்ட பிரச் சினையில் மாறுபட்ட தீர்ப்பு களை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது. மேலும் அவைத் தலைவரின் அதிகாரம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத் தில் நிலுவையில் உள்ள சூழ லில், தொடுக்கப்பட்ட வழக் குகளை ஏற்றுக்கொண்டது ஏன், இவ்வளவு தாமதமாக தீர்ப்பு வழங்கியதும் ஏன் என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் இயல்பாகவே எழுந்துள்ளன. ஜனநாயக அமைப்பில், உயர்வான இடத்தில் உள்ள நீதித்துறை இத்தகைய அய்யங் களுக்கு இடமளிக்காமல் இருக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner